.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
சிறப்பு ஆய்வுகள்
 
சிறிலங்கா: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழருக்கு நல்லதொரு வாய்ப்பு-The Asian Age 
Friday, 27.09.2013, 09:36am (GMT)


எந்தவொரு பிரச்சினைகளையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும், சமூக வரையறைகளுடனும் நோக்காது தெளிவான கல்வியறிவுடன் ஆராய்ந்து பார்க்கின்ற ஆளுமை மிக்க மனிதராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். 

இவ்வாறு The Asian Age ஊடகத்தின் ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெற்றுக் கொண்ட அமோக வெற்றியானது சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் சமூகத்திற்கு பிரகாசமான நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. 

தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கில் மூன்று பத்தாண்டுகளாக ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மரணங்களின் பின்னர் தற்போது தமிழ் மக்கள் மிக உறுதியுடன் தமது அடிகளை முன்னோக்கி எடுத்து வைப்பதற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தற்போது முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் உயர்ந்தளவில் மதிக்கப்படும் மனிதராக மட்டுமன்றி சிறிலங்காத் தீவு முழுவதிலும் வாழும் மக்களால் மதிக்கப்படுபவராக விளங்குகிறார். 

எந்தவொரு பிரச்சினைகளையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும், சமூக வரையறைகளுடனும் நோக்காது தெளிவான கல்வியறிவுடன் ஆராய்ந்து பார்க்கின்ற ஆளுமை மிக்க மனிதராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மிகவிரைவான மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான விக்னேஸ்வரனை விட வேறெந்தவொரு சிறந்த செயற்பாட்டாளரையும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இத்தேர்தல் வெற்றியானது சிறிலங்கா தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை மீளவும் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் காணப்படுகிறது. தற்போது வரை சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தம்மீதான இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக திருப்திகொள்ளவில்லை. ஜனவரி – மே 2009 வரை சிறிலங்காவின் வடக்கில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட ஈழப்போரின் போது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதனைத் தடுப்பதற்கு இந்தியா எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என தமிழ் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புப் பெற்றுக் கொண்ட வெற்றியானது இந்தியா சிறிலங்கா மீதான தனது கொள்கையை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

போரின் பின்னான சிறிலங்காவின் மீள்கட்டுமானத் திட்டங்களுக்காக இந்தியாவானது 2013-14 வரை 500 கோடிகளை ஒதுக்கியுள்ளது. இது சிறிலங்காவின் மொத்த வெளியுறவு முதலீட்டின் 10 சதவீதமாகும். ஆனால் இந்த நிதியை சிறிலங்கா அரசாங்கமானது சிங்களப் பிரதேசங்களில் வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. 

சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய திட்டங்களுக்கு கொழும்பு தனது ஆதரவை வழங்கி வரும் அதேவேளையில், வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத் திட்டத்திற்கான நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் காலந் தாழ்த்தி வருவதாகவும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆபிரிக்க நாடுகளில் உள்ள வளங்களை தனது நாட்டுக்குக் கொண்டு செல்வதற்காக சீனாவால் விரிவாக்கப்பட்டுள்ள திட்டத்தை மேற்கொள்வதில் ஈடுபடும் சீனக்கப்பல்கள் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு சீனாவுக்கு சிறிலங்காவின் உதவி தேவைப்படுகிறது என்பது வெளிப்படை. 

சிறிலங்காவுடனான பாகிஸ்தானின் உறவு மிகவும் நெருக்கமடைந்துள்ள நிலையில், இந்தியாவானது இதன் மூலம் தென்னிந்தியாவிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக வடக்கு மாகாணசபை முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் மற்றும் அவரது மாகாண அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. இந்தியாவானது விதிமுறைகளை மீறாது வடக்கு மாகாண அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகள் உள்ளன. 

நீண்டகால யுத்தம் இடம்பெற்ற வடக்கில் தனது எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயக வழித் தேர்தல் மூலம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் நாட்டில் தனது அரசாங்கம் மிக முக்கிய ஜனநாயக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக, நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டில் காண்பிப்பதற்கான முயற்சியைத் தற்போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க முடியும்.  ஆனால் மகிந்த ராஜபக்சவின் இந்த முயற்சிக்கு தேர்தல் வெற்றி போதியதாக இல்லை என்பது வெளிப்படை. 

திரு.விக்னேஸ்வரன் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு அதிபர் மகிந்த ராஜபக்ச முக்கியத்துவம் வழங்கி செயற்படுவதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை, சமவாய்ப்புக்கள் போன்றவற்றையும் வழங்குவதன் ஊடாக நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டும்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-05 (13.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-04 (06.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03 (05.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02 (03.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01 (02.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை (01.06.2013)
அகிம்சை வழியும் ஆயுதம் தாங்கிய அறப்போருமே ஈழவரலாற்றின் இன்றைய இருப்பு!-சுவிசில் இருந்து தயா (28.05.2013)
இன நல்லிணக்கமோ! சமாதானமோ! எப்போதும் சாத்தியமில்லை- இதயச்சந்திரன் (24.02.2013)
ஐநாவின் மோசமான தோல்வி????? (15.12.2012)
நவம்பர் 27ம் திகதி ஆரம்பித்த யாழ்ப்பாண கிளர்ச்சி அரசுக்கு தெரிவிப்பது என்ன-சுனந்ததேசப்பிரிய (09.12.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan