.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
சிறப்பு ஆய்வுகள்
 
இலங்கையின் இறுதிப் போரில் ஐ.நா தோல்வி: உள்ளக இறுதி அறிக்கையை வெளியிட்டது இன்னர் சிட்டி பிரஸ்!
Saturday, 12.10.2013, 10:30am (GMT)

இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்விகண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஜோன் பெற்றியின் தலைமையில் தனி ஆள் விசாரணைக் குழுவை அமைத்தார்.

பேற்றி தமது ஆராய்வின் முடிவில் இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையில் இருந்து தவறிவிட்டதாக ஒப்புக்கொண்ட அறிக்கையை பான் கீ மூனிடம் சமர்ப்பித்தார்.

இதனை பான் கீ ஆராய்ந்த பின்னர். இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட உத்தரவிட்டார். இதன்படி ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஹீட்டிங் இறுதி அறிக்கையை தயாரித்து முடித்துள்ளார்.

அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.  எனினும் இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த இறுதி அறிக்கையை இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்களின் ஊடாக, நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகளின் பங்களிப்பை சக்திமயப்படுத்துவதற்கான செயற்பாட்டறிக்கை.

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் நியமித்த உள்ளக ஆய்வு குழுவினால் தயாரிக்கப்பட்ட “இலங்கையின் இறுதி யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடு” என்ற அறிக்கையின் தொடர் அறிக்கை

அறிமுகம்

மனித உரிமைகளை பாதுகாப்பது, ஐக்கிய நாடுகளதும் அதனோது இணைந்த ஒழுங்கமைப்புகளதும் கடமை.

2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு சோதனை. இதில் நாங்கள் தோற்றுவிட்டோம்.

இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் தோல்வி தொடர்பில் உள்ளக அறிக்கை ஒன்றை தயாரிக்க தூண்டியது. எனினும் சவாலான விடயம் என்னவெனில், இலங்கை நமக்கு புதிய நாடு இல்லை. நீண்டகாலமாக இலங்கை எம்முடன் இணைந்திருக்கிறது.

நெருக்கடி சூழ்நிலையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் தொடர்பிலான தொடர்பாடல் முறையாக இடம்பெறவில்லை.

இந்த நிலையில் இராஜதந்திர, சட்ட மற்றும் நடவடிக்கைகளை அமுலாக்கும் கொள்ளளவு போன்ற விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி கண்டுள்ளது.

எமது அதிகாரிகளை மாறுபட்ட சூழ்நிலைகளி;ல் ஒழுங்குபடுத்தவும், ஈடுபடுத்தவும், அபாயகரமான செயற்படுகளின் போது அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது.

தலைமையகத்தின் தெளிவான தலைமைவத்துவம் இல்லாமை, இந்த விடயத்தில் மாறுபட்ட செய்திகளை அனுப்ப வழி செய்ததுடன், இதனால் நல்ல சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்டன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் ஆறு விதமான பரிந்துரைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பரிந்துரை- 1: ஐக்கிய நாடுகளின் அனைத்து அதிகாரிகளின் சாதாரண வாழ்க்கை வட்டத்தில் மனித உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.

பரிந்துரை- 2: 99ம் இயல்பு சரத்து ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொறுப்புக்களை முறையாக மேற்கொள்ள வலியுறுத்தல்

பரிந்துரை- 3: மக்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளும் போது, ஐக்கிய நாடுகள் சபை அரசியல், மனித உரிமைகள், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி இயலுமைகளை உறுதியான நிலையில் அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை கொண்டிருத்தல்.

பரிந்துரை- 4: ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கும், உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகளில் தொழிற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களுக்கும் இடையில் அடிமட்டத்தில் இருந்து சிறந்த அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்வதற்கான திட்டம் ஒன்று உருவாக்கப்படல். இதன் மூலம் அனர்த்த நிலைமைகளை முன்கூட்டியே சமாளிக்க முடியும்.

பரிந்துரை- 5: அதிக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில், அதனை பாதுகாப்பாற்கான முன்னெடுப்பில் துரித முன்னேற்றத்தை காண்பதற்கான வேலைத்திட்டம். இதற்கு அதிக செயற்பாட்டு இயலுமை அவசியப்படுவதுடன், மனித உரிமைகள் ஆணையகத்தின் ஒத்துழைப்பும் அவசியப்படுகிறது.

பரிந்துரை-6: உண்மையான தகவல்களை மிக விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தல். இதன் மூலம் முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்குவதுடன், ஐக்கிய நாடுகளால் முற்கூட்டிய செயற்பாட்டினையும் முன்னெடுக்க முடியும்.

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் கூறப்பட்டவை. அவை புதியவை இல்லை. எனினும் இலங்கையின் இறுதிப்போரின் போது இவை முழுமையாக அழுலாக்கப்படவில்லை.

இந்தநிலையில் இனிவரும் காலப்பகுதியில் இது கட்டாயமாக முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் இலங்கையின் இறுதிக்கட்ட போர் தொடர்பாக உள்ளக அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சிறிலங்கா: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழருக்கு நல்லதொரு வாய்ப்பு-The Asian Age  (27.09.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-05 (13.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-04 (06.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03 (05.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02 (03.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01 (02.06.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை (01.06.2013)
அகிம்சை வழியும் ஆயுதம் தாங்கிய அறப்போருமே ஈழவரலாற்றின் இன்றைய இருப்பு!-சுவிசில் இருந்து தயா (28.05.2013)
இன நல்லிணக்கமோ! சமாதானமோ! எப்போதும் சாத்தியமில்லை- இதயச்சந்திரன் (24.02.2013)
ஐநாவின் மோசமான தோல்வி????? (15.12.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan