.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
செய்திகள்
பிரதான செய்திகள்
தமிழீழச் செய்திகள்
தமிழகச் செய்திகள்
சிறிலங்கா செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சிறப்பு ஆய்வுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
பிரதான அறிக்கைகள்!
ஈழம்5 செய்தி அலசல்கள்
இன்றைய நிலவரம்
வீரத்தின் பிதாமகன்
ஈழத்தின் வித்துக்கள்
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
தமிழீழ தேசியக் கோடி
::| Newsletter
Your Name:
Your Email:
 
 
 
வீரத்தின் பிதாமகன்
 
 
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் இறுதி உரையிலிருந்து…!
Wednesday, 19.09.2018, 03:40pm

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! 

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். 

 

59,ஆவது அகவை காணும் தேசத்தின் தலைமகனுக்கு வாழ்த்துக்கள்! உன் பின்னால் உலகத் தமிழினம்!
Tuesday, 26.11.2013, 12:00am
59,ஆவது அகவை காணும் வீரப் பெரும் தலைவா உங்கள்  பின்னால் உலகத் தமிழினம்! நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு. அவனை எங்கள் தேசத்தின் பிள்ளையை, இந்தப் பயணத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் மகனே.. 
இன்றுவரை நீதான், இனியும் இனியும் நீமட்டும் தான்
Monday, 25.11.2013, 10:38pm
மலைத்தோள் அழகா வாழ்க,
மறப்புலி தலைவா வாழ்க!
வளைந்திடா வீரம் வாழ்க   
வணங்கிடா ஓர்மம் வாழ்க
கலைந்திடாக் கனவும் வாழ்க
கனவதும் மெய்பட வாழ்க
நிலையென நீயே வாழ்க 
நுற்றென அகவை காண்க!
தமிழனை தலைநிமிரச் செய்த பெருமை அண்ணன் பிரபாகரைனையே சாரும் - இயக்குனர் - வ.கௌதமன்
Saturday, 31.08.2013, 12:09am
உலகத்தில் எத்தனையோ மன்னர்கள் இந்த மண்ணை ஆண்டுள்ளனர். அனால் அவர்களில் எத்தனைபேர் நேர்மையாக ஆண்டார்கள், எத்தனைபேர் மக்களுக்காக உண்மையாக பணிபுரிந்தார்கள் என பார்க்கும் பொழுது உலகம் தோன்றிய காலத்திலிருந்து  இனி மறையப்போகிற காலம் வரையிலும் ஒரு உன்னதமான மன்னன், மக்களை நேசித்த அரசு, ஈழம்தான்.
மீண்டும்... மீண்டும் சிலுவையில் அறையப்படும் ஈழத் தமிழினம்!
Monday, 18.02.2013, 11:54pm
சிங்கள தேசத்தில் நீதி இல்லை... சிங்களவன் எவன் நெஞ்சிலும் ஈரம் இல்லை... இல்லையென்றால், இத்தனை கொடூரங்களையும் நடாத்தியவன் பின்னாலே, வெற்றிக் கொடி கொண்டு பின்னாலே செல்வானா...? மனிதன் என்ற சொல்லுக்குத் தகுதியற்ற இனத்தின் குறியீடாகவே சிங்களம் தகுதி பெற்றுள்ளது. எங்கள் தேசத்தில் வழிந்த குருதி கொண்டு பால் பொங்கல் செய்து கொண்டாடுகின்றது சிங்கள இனவாதம். எங்கே செல்வது நாம்? யாரிடம் கேட்பது எமக்கான நீதியை?
லண்டனில் இளையோர்களினால் கொண்டாடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவரின் 58வது பிறந்த நாள்
Monday, 03.12.2012, 09:12pm

தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வை பிரித்தானியா தமிழ் இளையோர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். லண்டனில் அமைந்துள்ள ஈகைப் பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் தலைவர் அவர்கள் பிறந்த நாளான 26.11. 2012 அன்று மாலை 6 மணியளவில் வரி உடை அணிந்த தமிழ் இளையோர்கள் காலத்தை வென்றிடும் தலைவன் எங்கள் ஈழத்துக் கரிகாலன் என்ற பாடல் ஒலிக்க கேக் வெட்டி(உதப்பி துண்டித்து) வெகு சிறப்பாக எழுச்சிகொண்டு பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். காணொளி இணைப்பு

தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா?வேண்டாமா? என்பதை உலகநாடுகளே தீர்மானிக்கட்டும்.வை.கோ
Saturday, 14.04.2012, 08:09pm

ஐயா. பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "தமிழீழ தேசியத் தலைவர்" பிரபாகரன் அவர்கள் தமிழர் எழுச்சியின் வடிவம் எனும் வரலாற்று நூல் சென்னை தியாகராயா நகர் தியாகராயா அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" எனும் வரலாற்று நூலினை ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டுவைத்து சிறப்பு உரையாற்றுகையில் "உலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரித்து பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் என்றும், தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்றும். அதற்கு உந்துதலாக பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்த வரலாற்று நூல் இருக்கும்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி
Friday, 09.03.2012, 11:29pm

பொதுவாக கடவுளர்களின் அருள் கடாட்சங்களை விதந்து புலவர்கள் அந்தாதி பாடுகின்றமை வழக்கம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமான திரு.மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் சரியான முறையில் புரிந்துகொண்ட இனமான உணர்வாளரான தமிழகத்தை சேர்ந்த கவிஞர் அகரம் அமுதன் அவர்கள் "பிரபாகரன் அந்தாதி" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுலை காலத்தின் தேவை கருதி எமக்குத் தந்துள்ளார்.

"காவலாய் வாய்த்த கதிர்க்கையன்"(01)
Friday, 09.03.2012, 09:15pm

காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள் பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?-(02)
Friday, 09.03.2012, 09:10pm

பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (11)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (12)

ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!*(03)
Friday, 09.03.2012, 09:05pm

இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)

தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்
கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)

  » மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!(04)
  » இறப்பில்லா வாழ்வின் எழிலே!-(05)
  » எமைக்காக்கும் ஈழத்(து) இறையே! (06)
  » ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!(07)
  » காணக் கிடைக்காக் கவினே! உனையேயெம்-(08)
  » குலக்கா வலனே! குடிகள் குறையை விலக்கத் துடித்தாய் விரைந்தே!-(09)
  » முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்!(10)
  » தேசத்தைக் காட்டிக்கொடுத்து தேசியத் தலைமையின் இருப்பை மறுத்து ஈனப்பிழைப்பு நாடத்தாதீர்கள்!
  » முன்னிலும் வேகமாக வருவார் இயற்கையின் மரணம் கூட எம் தலைவனை தொடத் தயங்கும்
  » தமிழில் இராணுவக் கல்வி… உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவன் பிரபாகரன்.. 
::| Latest News
::| Events
January 2019  
Su Mo Tu We Th Fr Sa
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
 

Site Created By: Thiliepan