.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
வீரத்தின் பிதாமகன்
 
59,ஆவது அகவை காணும் தேசத்தின் தலைமகனுக்கு வாழ்த்துக்கள்! உன் பின்னால் உலகத் தமிழினம்!
Tuesday, 26.11.2013, 12:00am (GMT)

59,ஆவது அகவை காணும் வீரப் பெரும் தலைவா உங்கள்  பின்னால் உலகத் தமிழினம்! நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

59,ஆவது அகவை காணும் வீரப் பெரும் தலைவா உங்கள்  பின்னால் உலகத் தமிழினம்! நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு. அவனை எங்கள் தேசத்தின் பிள்ளையை, இந்தப் பயணத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் மகனே.. என்று மனம் திறந்து ஆசீர்வதிக்கிறேன். விரைவில் எங்களிடம் வந்துவிடு தலைவா..! என்ற ஆதங்கத்தோடு. 2009 மே 18 ற்குப் பிறகு தமிழன் தமிழனாக இல்லை. உயிர் கொடுத்தவர்களும், அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டவர்களும் போய்ச் சேர்ந்துவிட, அவரவர் உயிரே அவரவர்க்கு சுமையாகி விட்டதான ஒரு கொடுந்துயரம்.. தமிழன் என்றால், தலை நிமிர்வு, என்பதாய் பிரபாகரன் என்றால் சாகாத வரம் பெற்றவனாக மக்களுக்காக வருவாயா? எம் தேசத்தின் தலை மகனே! நீ வாழ்க 

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றல்ல இரண்டல்ல .. பல நூறு தடவைகள் எமக்குள் எதிரொலி செய்கிறது. ஆயினும் என்ன? இவை யாவற்றுள்ளேயும் புதைந்து கிடக்கின்ற அற்புதத்தை – வாழ்க்கையின் உன்னதத்தை–ஊடுருவிப் பார்க்கின்ற சிந்தனைத்திறன்–நான் அறிந்தவரை–இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை உங்களைத் தவிர..

புயலுக்குள் புதுமை கண்டு, அதைப் புதுமாத்தளனோடு இணைத்து, புலம் பெயர் தமிழர் உன்னதம் பெறுவதற்கான செய்தியாகக் கொடுத்தீர்கள்.. பாராட்டுகிறேன்…வாழ்த்துகிறேன் பல்லாண்டு வாழ்க!

2009 மே – பதினெட்டாம் நாளுக்குப் பிறகு தமிழினம் சோர்ந்துபோய்க் கிடக்கின்றது. எல்லாமே முடிந்துவிட்டது என்ற ரீதியில் விரக்தியின் விளிம்புக்கு வந்து நிற்கிறது. , எங்கள் விடுதலைப் போராட்டம் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகவே பின்நோக்கிப் போய்விட்டது.. தமிழன் இனி நிமிர்வது எங்ஙனம்…? , என்ற மனப்பாங்குதான் ஏறக்குறைய எல்லோரிடமும் காணப்படுகிறது.

ஆடுகளம், சமமாக இல்லாத இடத்தில் நம் ஈழத்தமிழ் வீரர்கள் மோதினார்கள்… அவர்கள் அழிக்கப்படவில்லை.. இப்போரில் அவர்களுக்கே வெற்றி..எனவும், தனது சிறிய படையணியினரோடு உலகத்தையே துணிந்து எதிர்த்த பிரபாகரன் அடைந்தது தோல்வியா… ? எனவும், ஒவ்வொரு ஈழத் தமிழனையும் தெம்பேற்றுகிறது. இது காலத்தின் தேவை, ஒரு தேசத்தின் கட்டாயம். நடக்குமா..? நடக்க வேண்டும்…

தன்னைக் காட்டிக் கொடுத்த சில புலித்தம்பிகளை புதுமாத்தளனில் நேரடியாகக் கண்டார்.. ,தம்பி தமிழீழம் பிறக்க முன்னர் நீ பிறந்து விட்டாயே.. ! என்று அவர்களைப் பார்த்து சிரித்தபடி சொன்னார், என்ற வரிகளைப் படித்து துடித்துப் போனேன். பெருகிவந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை.

அடுத்த வினாடியே.., திரும்பிப் பார்க்காதே.. !,என்ற மாபெரும் தத்துவம் எனக்கு முன்னால் நிற்பது தெரிந்தது.

உதிர்ஷ்டிரனையும், மகலனையும் சொல்லி.. இந்தத் தத்துவத்தோடு இணைத்து.. இறுதியில் காது கொடுத்துக் கேட்டுப்பார் ! என்கிறீர்கள். இதோ இப்பொழுதும் கேட்கிறேன்.. எங்கள் அருமைத் தலைவன்.. என்போன்ற தாயாருக்கெல்லாம் இனிய மகன்..ஓர் அற்புத வரலாற்றின் பிறப்புக்காக திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருக்கிற அந்தக் காலடி ஓசைகளை..

அவனை எங்கள் தேசத்தின் பிள்ளையை, இந்தப் பயணத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் மகனே.. என்று மனம் திறந்து ஆசீர்வதிக்கிறேன். விரைவில் எங்களிடம் வந்துவிடு தலைவா..! என்ற ஆதங்கத்தோடு. 2009 மே 18 ற்குப் பிறகு தமிழன் தமிழனாக இல்லை. உயிர் கொடுத்தவர்களும், அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டவர்களும் போய்ச் சேர்ந்துவிட, அவரவர் உயிரே அவரவர்க்கு சுமையாகிவிட்டதான ஒரு கொடுந்துயரம்..

தமிழன் என்றால், தலை நிமிர்வு, என்பதாய் அர்த்தப்படுத்தி வாழ்ந்தோமே! இன்று உலகமே நம்மைப் கைகொட்டிச் சிரிக்கிறதே.. இது ஏன் நடந்தது..? எப்படி நடந்தது.. ? கனவில்கூட நினைத்துப் பார்த்திராத இந்த அவலத்திற்கு யார் அல்லது எது காரணம்? இதுபோன்ற விடை தெரியாக் கேள்விகளோடு ஒரு வெறுமையான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் இதயங்களின் மத்தியில் மற்றுமொரு முக்கியமான கேள்வியும்:

தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு சாவைத்தழுவிக் கொண்ட, வெடிகுண்டு சுமந்து வெடித்துச் சிதறி மண்ணுக்குள் புதைந்து போன பல்லாயிரம் மாவீரர்களுடையை அசையாத நம்பிக்கை வீணாகிப் போனதா..? 

சத்தியம், தர்மம், நீதி, கடவுள் என்பதெல்லாம் வெறும் கதைகள் தானா..? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பேனா விடை தருகிறது. ,தியாகமே வடிவான போராளிகள் மண்ணுக்குள் இருக்கிறார்கள்.. அவர்கள் இதைக் காப்பாற்றுவார்கள்.., என்று உறுதியோடு அண்ணன் நம்புகிறார்.–என்ற வரிகள்.

,பிரபாகரன் என்ற பிரகாச ஒளி இப்புவியில் பரவும்..  ,நம்புவோம்.. காத்திருப்போம்.. ! எம் முன் உள்ள பணியை விரைவாக, மனமாரச் செய்வோம் 

போருக்குப் பிற்பட்ட காலமே கொடியது என்றும், அதன் பிறகுதான் உண்மையான அவலம் சமுதாயத்தைச் சூறையாடத் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். எத்தனை பெரிய உண்மை இது.. கூடவே.. அறிஞர் மட்டத்திலான போர் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவை நாம் நியமிக்கவில்லை என்றும்,  அந்த மதிப்பீட்டை வைத்துத்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு போயிருக்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள்.

ஆறாத்துயரிலும் கண்ணீரிலும் கிடக்கிற தமிழ் மக்களுக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற விடை தெரியா கேள்விகளில் இதோ சில: இனி யார் எங்கள் வழிகாட்டி.. ? அதைத் தெரிந்து கொள்ளும் அளவுகோல் எது?

இப்போது வெளியிடப்படுகின்ற வகை வகையான அறிக்கைகள், பிரகடனங்கள், அறிவுறுத்தல்கள் என்பவற்றில் எதை சரியென்று கொள்வது?  எதை பிழையென்று தள்ளுவது? தமிழனுக்கென ஒரு எதிர்காலம் இனி உண்டா.. இல்லையா..? குழப்பம் எங்கும் குழப்பம்.. எதிலும் குழப்பம். புலம் பெயர்ந்த பெயராத அனைத்து தமிழ் மக்களிடையேயும் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை யார் சரி செய்வது..?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாதவரை தமிழ் சமுதாயம் சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கப் போகிறது என்பதே யதார்த்தம். மற்றுமொரு விடயம் பற்றி தெளிவுபெற விரும்புகிறேன்.

அறிஞரால் மீட்கப்பட்ட அழகிய டென்மார்க் என்ற அத்தியாயம் பின்வருமாறு கூறுகிறது. ,இனிமேல் ஐரோப்பாவில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை ஆயுதம் மூலம் தீர்ப்பதில்லை என்று புது விதி எழுதினார்கள்… ,,போரில் வென்றவர்களும் தோற்றவர்களும் ஒருவரை நோக்கி மற்றவர் ஆயுதத்தை தூக்குவதில்லை.. ,என்ற ஒப்பந்தம் எழுதப்பட்டது.

இதுபோன்ற ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடித்து, சிறீலங்காவில் எந்தவொரு பிரச்சனைக்கும் துப்பாக்கி வேட்டு தீர்க்கப்படக் கூடாது என்று ஒப்பந்தத்தை தமிழ் தலைவர்களும், சிங்கள தலைவர்களும் எழுதினால் முதல் அச்சம் தீரும்…, என்றதன் பின் வரும் பேராசிரியர் சபா. இராஜேந்திரனுடைய கருத்து நடை முறைச்சாத்தியமா..? ஒப்பந்தங்களை கிழத்தெறியும் சிறீலங்காவுடன் இனியும் ஓர் ஒப்பந்தமா.. ? இது எந்தக் காலத்திலும் நடக்கக்கூடிய ஒன்றா.. ?

இனி…

,குற்றமற்ற ஒரேயொரு இனமாய் நிற்கும் ஈழத்தமிழன் தமிழினத் தலைவன் குரல் இறைவன் திருச்சபையில் கேட்கும்..!,

,பிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்..,

,நேதாஜி திரும்பவில்லை பிரபாகரன் திரும்புவார்..! ,அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..




Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இன்றுவரை நீதான், இனியும் இனியும் நீமட்டும் தான் (25.11.2013)
தமிழனை தலைநிமிரச் செய்த பெருமை அண்ணன் பிரபாகரைனையே சாரும் - இயக்குனர் - வ.கௌதமன் (31.08.2013)
மீண்டும்... மீண்டும் சிலுவையில் அறையப்படும் ஈழத் தமிழினம்! (18.02.2013)
லண்டனில் இளையோர்களினால் கொண்டாடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவரின் 58வது பிறந்த நாள் (03.12.2012)
தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா?வேண்டாமா? என்பதை உலகநாடுகளே தீர்மானிக்கட்டும்.வை.கோ (14.04.2012)
தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி (09.03.2012)
"காவலாய் வாய்த்த கதிர்க்கையன்"(01) (09.03.2012)
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?-(02) (09.03.2012)
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!*(03) (09.03.2012)
மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!(04) (09.03.2012)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan