.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
வீரத்தின் பிதாமகன்
 
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் இறுதி உரையிலிருந்து…!
Wednesday, 19.09.2018, 03:40pm (GMT)


என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக் கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார் பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். 

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால், நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழ வைத்துக் கொண்டுள்ளது. நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். 

நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். 

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். 

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! 

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும். 

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
செய்திப் பதிவு- தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
59,ஆவது அகவை காணும் தேசத்தின் தலைமகனுக்கு வாழ்த்துக்கள்! உன் பின்னால் உலகத் தமிழினம்! (26.11.2013)
இன்றுவரை நீதான், இனியும் இனியும் நீமட்டும் தான் (25.11.2013)
தமிழனை தலைநிமிரச் செய்த பெருமை அண்ணன் பிரபாகரைனையே சாரும் - இயக்குனர் - வ.கௌதமன் (31.08.2013)
மீண்டும்... மீண்டும் சிலுவையில் அறையப்படும் ஈழத் தமிழினம்! (18.02.2013)
லண்டனில் இளையோர்களினால் கொண்டாடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவரின் 58வது பிறந்த நாள் (03.12.2012)
தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா?வேண்டாமா? என்பதை உலகநாடுகளே தீர்மானிக்கட்டும்.வை.கோ (14.04.2012)
தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி (09.03.2012)
"காவலாய் வாய்த்த கதிர்க்கையன்"(01) (09.03.2012)
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?-(02) (09.03.2012)
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!*(03) (09.03.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan