.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஆய்வுகள்
 
பிரபாகரனின் தமிழீழ கொள்கை பிரகடனம் அரசியல் மேடைக்கு வந்துள்ளது- விமல் வீரவன்ஸ
Friday, 12.09.2014, 10:17am (GMT)

பிரபாகரனின் தமிழீழ கொள்கை பிரகடனம் அரசியல் மேடைக்கு வந்துள்ளது- விமல் வீரவன்ஸ

12.09.2014, 10:17am

 

பிரபாகரனின் தமிழீழ கொள்கை பிரகடனம் அரசியல் மேடைக்கு வந்துள்ளது- விமல் வீரவன்ஸ


பிரபாகரன் போடும் கணக்கு என்றும் பிழைத்ததில்லை தெரியாதா உனக்கு குறி தவராதடா அவன் விடும் அம்பு வெற்றிக்கொடி நாட்டுவான் நாளை நம்படா நம்பு!


தமிழ்த் தேசியக் வீட்டு இலச்சினைக்கே தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழீழ தேசத்தின் பெயரால் வீட்டு இலச்சினையை எதிப்பவர்கள் தமிழீழ  தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை!


தமிழீழ தேசிய நலன் விரும்பிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழீழ தேசியத் தலைவரால் எப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இலங்கை தீவின் அரசியல் களத்தில் களமாட இறங்கியதோ, அன்றே அவர்கள் சிறிலங்கா அரசு நடாத்தும் அனைத்து தேர்தல்களிலும், பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, மாகானசபத் தேர்தலாக இருந்தாலும் சரி, இலங்கைத்தீவில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  பங்குபற்றும் உரிமையையும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது வரலாற்று உண்மை. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்பதே உண்மை.


இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழ்மக்களின் ஏகப் பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைகளுக்கான முதலமைச்சர் பதவியை வழங்கத் தயாராக இந்தியாவும் இளைகையும் இருந்த போது அதை தலைவர் புறக்கணித்திருந்தார்.  


இலங்கைத் தீவில் தமிழ்மக்களுக்கான உரிய தீர்வு தமிழீழம் மட்டுமே என்பதை  சர்வதேச நாடுகளுக்கும் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்பதைவெளிப்படுத்தியிருந்தனர்  
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தல்களிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் சுதந்திரமாக் செயற்பட முடியாது என்பதை புரிந்துகொண்ட தமிழின உணர்வாளர்கள் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு அமைவாக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அன்று உருவாகியிருந்தார்கள்.


 எமது நாட்டில் எமது இராணுவம் நிலைபெறும் வரை, எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை எமது சுதந்திரத்தை எவரும் உறுதிப்படுத்த முடியாது. அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம், அதற்காகத்தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.  


தமிழீழம் என்பது சகல அடக்கு முறைகளையும் உடைத்தெறிந்து ஒரு சமதர்ம சோசலிசத் தமிழீழமாகத்தான்  மலரும் அதுவரை எமது போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை ஒன்றை மிகத் தெளிவாகவும் அறுதியாகவும் கூருகின்றோம், நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம், எமது மக்கள் அழிக்கப்படும் நிலை தோன்றுமானால் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்திக் கூடப் போராடுவோம். 


எமது போராட்டம் தமிழீழத்தை நோக்கியது தான் இது ஒரு இடை நிலையே தவிர, முற்றுப்புள்ளி அல்ல! ஆனால் இந்த உண்மை பல மக்களுக்குப் புரியாமல் இருக்கின்றது, இன்று எமக்கு உள்ள இழி நிலையை, அடக்கு முறையை உணர்ந்துகொள்ளத் தவறினால் நாளை எமது வரலாறு மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருக்கும். 


நாம் இன்று அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம், எமது அடிப்படை உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன இதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.


அதற்காகத்தான் நாம் இன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துளோம், எமது அடிப்படை உரிமைகளை களம் காலமாக ஏமாற்றிப் பறித்துள்ளார்கள், ஓர் உண்மையை, தெளிவான விடையத்தை நான் உங்களுக்கு வரையறுக்க வேண்டும். எந்தெந்தக் காலகட்டங்களில் தமிழ்மக்கள் ஒரு உணர்வோடு, கொந்தளிப்போடு அவர்கள் தமிழீழம் என்ற சுதந்திர உணர்வோடு போராடத் தலைபடுகிறார்களோ, அந்தந்தக் காலகட்டங்களில் எல்லாம் சமாதான் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன, அந்தக் கால கட்டங்களில் எல்லாம் தமிழ் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருந்தார்கள், மக்கள் புரட்சி வெடுக்கக் கூடிய சூல்நிலை இருந்தது, அதல் சமாளிப்பதற்காக, அதை மழுங்கடி ப்பதர்க்காகத் தான் சமாதான ஒப்பந்தங்கள் எழுதப்பட்டது. 


அந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட பின் ஏற்பட்ட தற்காலிக அமைதியில் மக்கள் திருப்தி கண்டார்கள் அதனால் ஒரு போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்பட்ட நிலை இருந்தது, அதைத்தொடர்ந்து ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டது. இது தியாகி லெப் கேணல் திலீபன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் சிறு பகுதி.


தமிழீழ கொள்கை பிரகடனம் அரசியல் மேடைக்கு வந்துள்ளது- விமல் வீரவன்ஸ


தமிழீழ தேசியத் தலைவரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற மாபெரும் அரசியல்க் கட்டமைப்பு என்று உருவாக்கப்பட்டதோ, அன்றே தமிழீழ விடுதலைப் போராட்டம் அரசியலில் களம் புகுந்து விட்டது. ஆயுதம் தாங்கிய வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என விடுதலைப் புலிகளை முத்திரை குத்திய சிறிலங்கா, இந்தியா, உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இன்று  அரசியலில் கால்பதித்த தமிழீழ விடுதலைப் புலிகளின்  ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடுத்த படியாக, தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக இன்று சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.


தமிழர் தாயகத்தில் என்றுமில்லாதவாறு சிங்களம் கட்டவித்து விட்ட கோரத் தாண்டவத்தை இனவழிப்பின் சாட்சியங்களை சர்வதேசத்தின் முன் வெளிப்படுத்தும் நோக்கிலும், ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தமிழீழம் என்கிற அதி உயர் இலக்கை அடைவது சாத்தியம் இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து வந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு காலத்தின் தேவை கருதி முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிப்பதாக தளபதி சூசை, மற்றும் சமாதானச் செயலகத்தின் செயலாளர் திரு புலித்தேவன் அவர்களின் ஊடாக சர்வதேசத்திற்கு தெரிவித்திருந்தார். 


அதுவரை  தமிழீழக் கோரிக்கையில் உறுதியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின்னர், தமிழர்களின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு. நிலைமைகளை கணிப்பிட்டு இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தின் காரணமாகவும், தமிழர்களின் பேரம் பேசும் சக்திகள் வெளிப்படையாக இல்லாத காரணத்தினாலும், தனித் தமிழீழக் கோரிக்கையில் இருந்து பின்வாங்கி,  ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் ஊடாக, அரசியல் தீர்வுஒன்றுக்கான  கோரிக்கையினை முன்வைத்து, சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 


அதன் பெறுபேறுகளை அவர்களுடன் சம்மந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தெரிவித்து வந்திருந்தனர். இது அவர்களின் சந்தர்ப்பவாத இராஜதந்திர நகர்வாக பலராலும் கருதப்பட்டும் வருகிறது. இதை சிலர் தவறான  போக்கு என சுட்டிக்காட்டி வந்திருந்தாலும் மாற்று வழிகளில் எதனையும் தெரிவு செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.


முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த போதே தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்று முழுதாக அரசியல் வடிவம் பெற்றுவிட்டது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழர்ககள் நடத்திய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை அரசியல், ஜனநாயக வடிவிலும், சர்வதேசம் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது.


தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக பலரும் கருதும் நிலை காணப்படுகிறது, அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற இணையங்களும், எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் எழுதியும் கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர். இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தொடர்பிலும் அவர்களின் அறியாமை வெளிப்படுத்தி நிற்கின்றது. 


தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையும், நகர்வுகளையும், இராஜதந்திர செயற்பாடுகளையும், தூரநோக்கு சிந்தனைகளையும், சர்வதேசத்தின் நகர்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாய நடவடிக்கைகள் என்ன என்பதை, புரிந்து கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இருந்தனர் என்றால் மிகையாகாது.


அந்த வகையில் தமிழீழ விடுதலையின் அவசியத்தையும், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளையும், அவரின் தொலை நோக்கு சிந்தனைகளையும், ஆழமாகப் புரிந்துகொண்டவர்கள் எவரும் இன்றைய தமிழர்களின் நிலையை ஒரு தோல்வியாக கருதமாட்டார்கள் என்பதும், இது ஒரு மாபெரும் இராஜதந்திர நகர்வின் வெற்றி  என்பது வெளிப்படை.


அந்த வகையில் சாதாரண ஆய்வாளர்களாலும், எழுத்தாளர்களாலும், அரசியல் தலைவர்களாலும், தமிழீழ தேசியத் தலைவரை புரிந்துகொள்ள முடியாது என்பதே யதார்த்தமாகும். சர்வதேச ஆய்வாளர்களால் கூட தலைவரை புரிந்துகொள்ள முடியவில்லை.


இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தமிழீழக் கொள்கை பிரகடனம் தற்பொழுது அரசியல் மேடைக்கு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சா அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சிறுபிள்ளைத் தனமாக குறிப்பிட்டுள்ளார்.


இவருடைய இந்த அவதானிப்புக் கூட காலம் கடந்தது, இதைக் கண்டுபிடிக்க இவருக்கு நாங்கு வருடங்கள் தேவைபட்டுள்ளது.


ஆயுத மௌனிபின் உண்மையான அர்த்தம் என்ன வென்று புரிந்துகொள்ள முடியாதவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் பற்றி பேசுவதற்கே தகுதி இல்லாதவர்கள் என்பது எனது கருத்து.


தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டதாக கருதும் எவராக இருந்தாலும், எமது போராட்டம் தொடர்பிலும், தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பிலும், அவரின் திட்டமிடல், வழிகாட்டல்கள், மற்றும் பலரை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய விடையங்களில் மிக முக்கியமான ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன், அதாவது ஆயுதப் போராட்டம் தொடர்பில் அவர் எடுத்திருந்த  நிலைப்பாடு, சர்வதேச அரசியல் அரங்கில் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள், அதன் ஊடாக சர்வதேசத்தின் தலையீடுகளை தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபடுத்தலும், தமிழர் தாயகத்தில் அடக்கு முறைகள், நிலப் பறிப்புக்களின் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மயப்படுத்தல்கள் ஊடாக சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளை ஆதாரத்துடன் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவது தொடர்பில், அடக்கு முறையில் இருந்து சுதந்திரமடைந்த பல நாடுகளின் பின்னணியில், தொலைநோக்கு சிந்தனைகளின் அடிப்படைகளில் தமிழீழ தேசியத் தலைவர்  அவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளே மூல காரணிகளாகும்.


அதன் ஊடாக சர்வதேச அரங்கிற்கு நகர்த்தப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டம், இன்று அமெரிக்க, பிரித்தானியா, உள்ளிட்ட வல்லரசு நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையும், தமிழீழ மக்களை நோக்கி பார்க்க வைத்ததையும், தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் மேற்க்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆய்வுகளும், அதன் ஊடாக வெளியிடும் கருத்துக்களும் சாதாரமாக உருவானதல்ல. 


இவை அனைத்தும் தமிழீழ விடுதலைக்காக, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தந்திரோபாய நகர்வுகளின் பின்னணியில் உருவானவை என்பதை கணிப்பிட முடியாதவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் கருத்துக்களைக் கூறாமல் அமைதியாக இருப்பதே பொருத்தமானதாகும். 


விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற இணையங்கள் என்றும், தேசிய ஊடகங்கள் என்றும், கட்சித் தலைவர்கள், பேரவைகளின் அறிக்கைகள், ஊடாகவும், ஆய்வாளர்கள், உணர்வாளர்கள், போராட்ட முன்னோடிகள், சமூக ஆர்வலர்கள், பத்தி எழுத்தாளர்கள், இணையத்தள ஆசிரியர்கள் என்கின்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் தவறான கருத்துக்கள் தெரிவிக்காமல், அமைதியாக இருந்து தேசியத் தலைவர் அவர்கள் இருவரை தெரிவித்த கருத்துக்களையும், அவரின் நகர்வுகளில் உள்ள ஆழமான தொலை நோக்கு சிந்தனைகளையும் அவதானிக்க வேண்டும் என்பதே இன்றைய தேவையாகவுள்ளது.


ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத மௌனிப்பின் இன்றைய நிலை ஒரு இடை நிலையே தவிர! ஆயுதப் போராட்டத்தின் முற்றுப்புள்ளி அல்ல!


இந்த நிலையில் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உண்டு என்பதையும், அங்கு சிங்களத் தலைமைகளால், தமிழ்மக்கள் அழிக்கப்படுவதை பல ஆதாரங்களுடனும், முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னணியிலும் ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேசம், அவற்றுக்கான தீர்வை உடனடியாக வழங்க  முடியாத நிலையிலும், அவற்றை உடனடியாக தெரிவிக்கவும், வெளிப்படுத்தவும் முடியாத நிலையில் படிப்படியாக செயற்படுத்தி வருகின்றது. 


அந்த வகையில் ஈழத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பில் சர்வதேசம் முன்னேடுக்கப்போகும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஒரு களமாக தமிழர் தாயகத்தில் நடைபெறவுள்ள மாகான சபைத் தேர்தல் அமைந்துள்ளது.


அதன் பின்னணியில் தான் அமெரிக்கா, கனடா,பிரித்தானியா, சுவிஸ், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள்  அண்மைகாலமாக இலங்கைக்கு விஜயம் செய்து கள நிலவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பில்  அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானமும் முக்கியமானது. இவற்றின் பின்னணியில் தான் இந்த மாகாண சபைக்கான தேர்தல்கள் அமைந்துள்ளன என்பதை பலர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.  


தந்தை செல்வநாயகம் அவர்களால் முன்மொழியப்பட்ட தமிழீழக் கோரிக்கையும், அதனைப் பெற்றுக்கொள்ள அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களையும் சிறிலங்கா அரசு ஆயுதங்களால் அடக்கியதோடு, ஈழத் தமிழர்கள் மீது வன்முறைகளையும், கலவரங்களையும் கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அடக்கி ஆழ முனைந்தது. 


1956, கொழும்பிலும் பிற இடங்களிலும் 150ற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். ஜூன் 5, 1956 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையை தடுக்கப் பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த வன்முறை பரவி கொழும்பிலும் பின்னர் பிற இடங்களிலும் 150 மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர், சிங்கள், இனங்களுக்கிடையான பிரிவு பின்னர் தீவிரமான வன்முறைகளுக்கு தூண்டுதலான முதல் கொடிய வன்முறை சம்பவம் எனலாம்.


இதில் மேல்வர்க்க தமிழர்களும் இன ரீதியில் தாக்கப்பட்டது அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் பக்கம் திருப்பியது. இதன் காரணமாக பல கொழும்பு வாழ் தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தார்கள்.


சாத்வீகப் போராட்டங்களும் சாத்தியமற்றுப் போக,  முள்ளை, முள்ளால் எடுப்பது தான் ஒரே வழி என்பதை புரிந்துகொண்ட தமிழ் இளையோர்கள் 1970,களின் பின்னரான காலப்பகுதில் ஆயுதங்களை கையில் எடுத்தனர், அன்றைய காலத்தில் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பல தமிழ் ஆயுதக் குழுக்கள் களமிறங்கிய போதும், தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற கொள்கையுடன் களமிறங்கிய முன்னணிப் போராளிகள் பலரை சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்தனர்.


அவ்வாறு 1974 இல் படுகொலை செய்யப்பட்டவர்களில் தமிழீழ மாணவர் பேரவையை உருவாக்கி அதன் ஊடாக மாணவர்களை ஒருங்கிணைத்து களமிறங்கத் தயாராகிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்ட முன்னோடியாக கருதப்படுபவர், அவரைத் தொடர்ந்து  1983,இல் சிங்களச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு, மிகவும் கோரமாக படுகொலை செய்யப்பட்ட போராட்ட இயக்கங்களின் முன்னணித் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்  உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சாவுகள், சிங்களத்திடம் பறிபோன தமிழர் தாயகத்தை முழுமையாக மீட்கவேண்டிய கட்டாயத்தையும், தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களப் படைகள் விரட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தி நின்றது  தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை ஆயுதப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியது.


பல இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த போதிலும் 1987, அமைதிப்படியின் இலங்கை வருகையின் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம் பல அமைப்புக்களின் போராளிகளையும் உள்வாங்கி தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டுமே இலக்கு நோக்கிய போராட்டம் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டது. 


உலகத் தமிழர்களின் ஆதரவுடன் தமிழீழ  மக்கள் கோரி நிற்கும் தன்னாட்சி உரிமையை பரிசீலனை செய்யும் நோக்கிலும், விடுதலைப் புலிகள் இல்லாத இன்றைய சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கட்டி எழுப்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தமது ஏகப் பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தமது வாக்குகளை வழங்கி தாம் ஒரு தனியான இறைமையுள்ள பூர்வீகக் குடிகள் என்பதை ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்தி தமது உணர்வுகளை இந்த மாகாண சபைத் தேர்தலில் பதிவு செய்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை பரிசீலனை செய்ய முயற்சிக்கின்றது சர்வதேசம்.


இந்த மாகாண சபைத் தேர்தலை சிறிலங்கா அரசு உரிய முறையில் கையாளத் தவறும் சந்தர்ப்பத்தில், அல்லது மாகாண சபைக்கான முழுமையான அதிகாரங்களை வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் சர்வதேசம் தனது அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 


ஈழம்5.இணையம்Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
புதிய தகவல்!! (23.07.2014)
மக்களின் கண்ணீரால் மன்னரைத் திருப்தியாக்கல் (27.01.2014)
பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். :- அ.மயூரன் (14.01.2014)
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்தது எப்படி? (07.11.2013)
சிறிலங்கா அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை (14.10.2013)
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு (26.09.2013)
செப்.21 பௌத்த சிங்கள பேரினவாதத்தோடு தமிழர்கள் கணக்குத் தீர்க்கும் நாளாக அமையட்டும்! (13.09.2013)
எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா? என்.செல்வராஜா, (31.05.2013)
மாணவர் எழுச்சிப் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன் (20.03.2013)
யதார்த்தமான உண்மைகளை யாரும் மறைக்க முடியாது!- ச. வி. கிருபாகரன் (05.02.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan