.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஆய்வுகள்
 
கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை!-பி.மாணிக்கவாசகம்
Saturday, 03.03.2018, 12:00pm (GMT)

மழை விட்­டாலும் தூவானம் விட­வில்லை என்­பார்கள். அது­போல, உள்­ளூ­ராட்சி தேர்தல் முடிந்த பின்­னரும், தேர்தல் காலத்து, எதி­ர­ணிகள் மீதான கருத்து பரப்­பு­ரைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. கட்சி அர­சி­யலை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் தமிழ் அர­சி­யல்­வா­திகள் மிகவும் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கு­ரிய பிரச்­சி­னை­க­ளிலும் பார்க்க, தேசிய மட்­டத்­தி­லான பிரச்­சி­னை­களுக்கே இந்தத் தேர்­தலில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில், இந்த கலப்பு தேர்தல் முறையில் முன்­னிலை பெற்­றி­ருந்த கட்­சி­களை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலை­வர்­களும், அர­சி­யல்­வா­தி­களும் இன்னும் விடு­ப­ட­வில்லை.

இதனால், நடந்து முடிந்­தது உள்ளூராட்சி தேர்­தல் ­தா­னே­யொ­ழிய, பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்ல என்ற யதார்த்­தத்தை அர­சி­யல்­வா­திகள் இன்னும் புரிந்து கொள்­ள­வில்லை என்றே எண்ணத்தோன்­று­கின்­றது.

உள்­ளூராட்சி தேர்தல் என்­பது அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதிலும், அந்த சபை­களின் செயற்­பா­டுகள் அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்­டவை. அத­னால்தான், சபை த­லை­வ­ருக்­கான வேட்­பாளர் என்ற தகு­தியில் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற முறை தவிர்க்­கப்­பட்டுள்­ளது. எனினும் மாந­க­ர ­ச­பைகள் மற்றும் நக­ர ­ச­பை­களில் மேயர் பத­விக்­கென்றும், தலைவர் பத­விக்­கென்றும் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்டு, வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த வேடிக்­கை­யான நிலைமை காணப்­பட்­டது.

தேர்தல் முடிந்த பின்னர், தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் தேர்­தலில் வெற்­றி­ பெற்ற தமது உறுப்­பி­னர்­களை கூட்டி, சபை­க­ளுக்­கான தலை­வர்­க­ளு­டைய பெயர்­க­ளையும் குறிப்­பிட்டு ஆட்­களை தெரிவு செய்­தி­ருப்­பது பற்­றிய தக­வல்கள் ஊட­கங்­களில் வெளி­யா­கி­யி­ருந்­தன. இது இன்­னு­மொரு வேடிக்­கை­யான நிலைப்­பா­டாகும்.

உள்­ளூ­ராட்சி தேர்­தலில் சபை ஒன்­றிற்­கான போட்­டியில் 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களை பெற்ற கட்­சிக்கே தலைவர் மற்றும் உப­த­லை­வரை நிய­மிக்கும் தகுதி உண்டு. இது தேர்தல் சட்ட நியதி.

உள்ளூ­ராட்சி தேர்தல் என்­பது மாகாண சபைத் தேர்­தலை போன்­ற­தல்ல. மாகா­ண­சபைத் தேர்­தலில் முத­ல­மைச்சர் பத­விக்­கென வேட்­ப­ாளரை நிய­மித்து, அதன் அடிப்­ப­டையில் வெற்றி பெற்­றவர் முத­ல­மைச்­ச­ராக வரக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால், உள்ளூ­ராட்சி தேர்­தலில் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற அனை­வ­ருமே உறுப்­பி­னர்கள் என்ற அந்­தஸ்தில் மட்­டுமே சபைக்குள் பிர­வே­சிக்க முடியும்.

அவ்­வாறு அறுதிப் பெரும்­பான்மை பெறாத சபை­களில், தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற உறுப்­பி­னர்கள் ஒன்­றி­ணைந்து தமக்­கு­ரிய ஒரு தலை­வ­ரையும், உப­த­லை­வ­ரையும் தெரிவு செய்து கொண்டு சபை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதும் நியதி.

நிலைமை இவ்­வா­றி­ருக்க அறுதிப் பெரும்­பான்­மையை பெறாத சபை­களில், கூடிய உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்ட கட்­சிகள் தங்­க­ளுக்கே ஆட்சி அமைக்கும் உரிமை உண்டு என்ற ரீதியில் தமது உறுப்­பி­னர்­களை கூட்டி வைத்து, கட்­சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றி தம்­பட்டம் அடித்து கொண்­டி­ருக்­கின்­றன. இது, உள்­ளூராட்சி சபை­களின் நடை­மு­றை­க­ளுக்கு முர­ணான – கட்சி உறுப்­பி­னர்­க­ளையும், பொதுமக்­க­ளையும் தவ­றாக வழி­ந­டத்­து­கின்ற -போக்­காகும். அது மட்­டு­மல்­லாமல் மிக ­மோ­ச­மான யுத்த நிலை­மை­க­ளுக்கு பின்­ன­ரான அர­சியல் கள நிலை­மை­க­ளையும், பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலை­மை­க­ளையும் கருத்திற் கொள்­ளாத போலித்­த­ன­மா­னதோர் அர­சியல் போக்கு என்­று­கூட சொல்­லலாம்.

உள்­ளூ­ராட்சி சபை­களின் சட்­ட­ரீ­தி­யான செயற்­பா­டுகள் நடை­மு­றை­க­ளுக்கு அப்பால், உள்­ளூ­ராட்சி தேர்தல் நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள அர­சியல் நிலை­மை­களை உணர்ந்து அதற்­கேற்ற வகையில் செயற்­பட வேண்டும் என்ற கள யதார்த்­தத்தை வேண்­டு­மென்றே புறந்­தள்­ளு­கின்ற நட­வ­டிக்­கை­யா­கவே இதனை நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

தேர்­த­லுக்கு முன்னும் பின்னும்

உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு முன்னர், தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் பலம் ஓர­ளவு சக்தி மிக்­க­தா­கவே காணப்­பட்­டது என்று கூறலாம். ஐக்­கிய தேசியக் கட்­சியும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்­தி­ருந்த கலப்பு ஆட்­சியின் இருப்­புக்கு தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு முண்டு கொடுத்­தி­ருந்­தது. தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலமே, 2015 ஆம் ஆண்டு, இந்த கூட்டு ஆட்சி உரு­வா­கி­யது. அது தொடர்ந்து ஆட்சி செலுத்­து­வ­தற்கும் கூட்­ட­மைப்பு தன்­னா­லான உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்­பையும் வழங்கி வந்­தது.

ஆனால், ஒரே தினத்தில் நாட­ளா­விய ரீதியில் நடத்­தப்­பட்ட உள்ளூராட்சி தேர்தல் இந்த அர­சியல் நிலை­மையை புரட்டி போட்­டி­ருக்­கின்­றது. கூட்­டாட்­சியை ஆட்டம் காண வைத்து, மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் தூக்கி எறி­யப்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ அணி­யி­னரை ஆட்சி அரி­ய­ணையை நோக்கி நகர்­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. ஆட்­சி­யா­ளர்­களை புறந்­தள்ளி, கூட்­டாட்­சியின் அர­சியல் இருப்­பையே, சிங்­கள மக்கள் இந்தத் தேர்­தலின் மூலம் கேள்­விக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

இதனால், நிபந்­த­னை­யற்ற முறையில் வெறும் நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணவும், தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணவும் முடியும் என்ற கூட்­ட­மைப்பின் அர­சியல் இரா­ஜ­தந்­திரம் இப்­போது தவிடு பொடி­யா­கி­யுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் மூலம், பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களே, கூட்டு அர­சாங்­கத்தின் மீதான சிங்­கள மக்­களின் நம்­பிக்­கையை சிதைப்­ப­தற்­கான, ஒரு தேர்தல் பிர­சார உத்­தி­யாக, மஹிந்த ராஜ­பக் ஷ­வினால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவை முன்­னி­லைப்­ப­டுத்தி, அதி­கா­ரத்தில் உள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யையும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யையும் சிங்­கள மக்கள் புறந்­தள்­ளி­யி­ருக்­கின்­றார்கள். இதனால், உன்­னால் தான் நான் கெட்டேன், என்னால் தான் நீ கெட்டாய் என்ற கையறு நிலை அர­சியல் கட்­சி­க­ளுக்கு உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

நிபந்­த­னை­யற்ற முறையில் கூட்­டாட்­சிக்கு ஆத­ரவு வழங்கி, அரச மட்­டத்தில் செல்­வாக்கு பெற்­றி­ருந்த தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு தேர்­தலின் பின்னர் இப்­போது அர­சியல் ரீதி­யாக பல­மி­ழந்­தி­ருக்­கின்­றது. கிங் மேக்கர் என்ற அர­சியல் நிலையில் இருந்து அது சரிந்து போய் இருக்­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் நாட்டின் அர­சியல் வர­லாற்­றி­லேயே முதன் முறை­யாக இணைந்து ஆட்­சி­ய­மைத்­ததன் மூலம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கான பொன்­னான சந்­தர்ப்பம் வாய்த்­தி­ருக்­கின்­றது என்ற அர­சியல் ரீதி­யான கூட்­ட­மைப்பின் நம்­பிக்கை கானல் நீரா­கி­யுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்கம் படிப்­ப­டி­யாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் அதற்­கான சந்­தர்ப்­பங்­களை உரு­வாக்கி கொடுக்க வேண்டும் என்ற போக்­கி­லேயே கூட்­ட­மைப்பின் தலைமை செயற்­பட்­டி­ருந்­தது. தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்தால் அல்­லது அதனை அவ­ச­ரப்­ப­டுத்­தினால், அர­சுக்கு எதி­ரான மஹிந்த அணி­யினர் இன­வா­தத்தை பரப்பி, அர­சாங்­கத்தை கவிழ்த்­து­ வி­டு­வார்கள் என கூட்­ட­மைப்பு பகி­ரங்­க­மா­கவே அச்சம் கொண்­டி­ருந்­தது.

இதனால், நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலம் நல்­லாட்சி உரு­வா­கு­வ­தற்கு உறு­துணை புரிந்த போதிலும், கடந்த மூன்று ஆண்­டு­களில் அந்த அர­சாங்­கத்தை பயன்­ப­டுத்தி, அதன் மீது அழுத்­தங்­களை பிர­யோ­கித்து பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண, அது தவ­றி ­விட்­டது. அர­சியல் தீர்­வுக்கு அப்பால், தீர்வு கண்­டி­ருக்கக் கூடிய அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்­கு ­கூட, தீர்வு காணும் சந்­தர்ப்பம் இதன் மூலம் கை நழுவ விடப்­பட்­டுள்­ளது. ஆயுத ரீதி­யாக பலம் பெற்­றி­ருந்த விடு­தலைப்புலிகள் உட்­பட தமிழ்த் தலை­மைகள், கடந்த காலங்­களில் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு கிடைத்த சந்­தர்ப்­பங்­களை தவ­ற ­விட்­டி­ருக்­கின்­றன என்ற பழிச்­சொல்­லிற்கு இப்­போது தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் ஆளா­கி­யி­ருக்­கின்­றது.

தேசிய மட்­டத்தில் மட்­டு­மல்­லாமல் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் கூட்­ட­மைப்பின் தலைமை மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொண்­டி­ருந்த செல்­வாக்கை இழந்­தி­ருப்­பதை இந்தத் தேர்தல் முடி­வுகள் காட்­டி­யி­ருக்­கின்­றன. கூட்­ட­மைப்பின் தலைமை அர­சி­யலில் சரி­வ­டைய தொடங்­கி­யி­ருப்­பதன் உறு­தி­யான சமிக்­ஞை­யாக, அர­சியல் ஆய்­வா­ளர்கள் இதனை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். ஆனாலும், இந்த யதார்த்த நிலை­மையை உணர்ந்து, மக்கள் மத்­தி­யி­லான தனது அர­சியல் செல்­வாக்கை நிமிர்த்­து­வ­தற்­கு­ரிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. மாறாக, தமி­ழ­ரசுக் கட்சி மட்­டு­மல்ல. தேர்­தலில் வெற்றி பெற்­றுள்ள ஏனைய கட்­சி­களும் கட்சி அர­சி­யலில் ஆழ்ந்து, மக்கள் நலன்­களை முதன்­மைப்­ப­டுத்­து­வ­தற்கு தவ­றி­யுள்ள போக்­கையே காண முடி­கின்­றது.

மக்­களை முதன்­மைப்­ப­டுத்­திய அர­சி­யலே அவ­சியம்.

கட்சி அர­சி­ய­லிலும் பார்க்க, மக்­களை முதன்மைப்­ப­டுத்­திய அர­சி­யலே அவ­சியம் என்­பதை நடந்து முடிந்த உள்­ளூராட்சி தேர்தல் முடி­வுகள் சுட்டிக்காட்­டி­யி­ருக்­கின்­றன. தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை பொறுப்பில் உள்ள தமி­ழ­ரசுக் கட்சி கூட்­ட­மைப்பை பல­முள்­ளதோர் மக்கள் சக்­தி­யாக கட்­டி­யெ­ழுப்ப தவ­றி ­விட்­டது. மாறாக தமி­ழ­ரசுக் கட்­சியை மக்கள் மத்­தியில் செல்­வாக்கு மிக்க கட்­சி­யாக வளர்த்­தெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளி­லேயே தீவிர கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. இதனால், கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையும், அதன் ஒன்­றி­ணைந்த செயற்­பாடும் பாதிக்­கப்­பட்­டது.

அர­சியல் கட்­சிகள் மத்­தியில் மட்­டு­மல்­லாமல், மக்கள் மத்­தி­யி­லும் ­கூட மாற்றுத் தலைமை குறித்த சிந்­தனை உரு­வா­கு­வ­தற்கு வாய்ப்­பாகி போனது. கூட்­ட­மைப்பில் இருந்து ஈ.பி­.ஆர்.­எல்.எவ். கட்சி வெளி­யே­றவும், அதனால் கூட்­ட­மைப்பில் பிளவு ஏற்­ப­டவும் நேர்ந்­தது. இது காலவரை­யிலும் இறுக்­க­மாக கூட்­ட­மைப்பின் வழி நடத்­தலில் கட்­டுண்டு கிடந்த தமிழ் மக்கள், இதனால், கூட்­ட­மைப்பின் மீது தமக்கு ஏற்­பட்­டுள்ள அவ­நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்தும் வகையில் உள்ளூ­ராட்சி தேர்­தலில் மாற்றுக் கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றார்கள். இது தமிழ் அர­சி­யலில் யுத்­தத்­திற்கு பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் ஏற்­பட்­டுள்ள மிக மோச­மான நிலை­மை­யாகும்.

தமிழ் மக்கள் ஒரே தலை­மையின் கீழ் அணி­தி­ரண்டு, அர­சாங்­கத்­திற்கும் சர்­வ­தே­சத்­திற்கும் தமது ஒற்­று­மையை வெளிக்­காட்ட வேண்டும் என்ற கூட்­ட­மைப்பு தலை­மையின் கோரிக்­கையை யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் தமிழ் மக்கள் உறு­தி­யாக கடைப்­பி­டித்து வந்­தார்கள். ஆனால், உனக்­கல்­லடி ஊருக்­குத்தான் உப­தேசம் என்­ற­து ­போல, ஒற்­று­மையை வலி­யு­றுத்­திய கூட்­ட­மைப்பின் தலைமை கூட்­ட­மைப்­புக்குள் ஒற்­று­மையை கட்­டிக்­காப்­பதில் கவனம் செலுத்­த­வில்லை.

தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் சின்­ன­மா­கிய வீட்டு சின்­னத்தை சொந்­த­மாக கொண்ட தமி­ழ­ர­சுக் ­கட்­சியை வளர்த்­தெ­டுக்க வேண்டும் என்­பதில் காட்­டிய அர­சியல் கரி­சனை, தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கு­ரிய, உறு­தி­யான, அனைத்து தமிழ் அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த அர­சியல் கட்­ட­மைப்பை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் காட்­டப்­ப­ட­வில்லை.

தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பில் இணைந்­தி­ருந்த பங்­காளி கட்­சி­களை புறந்­தள்­ளு­வ­திலும், தமி­ழ­ரசுக் கட்­சி­யொன்றே புனி­த­மான அர­சியல் அமைப்பு என்ற அர­சியல் தோற்­றத்தை உரு­வாக்­கு­வ­திலும், அதற்­காக சந்­தர்ப்­பங்கள் கிடைத்த போதெல்லாம், ஏனைய கட்­சி­களை எள்ளி நகை­யா­டு­வ­தி­லுமே கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால், கவனம் செலுத்­தப்­பட்­டது. விட்டுக்கொடுத்து செயற்­பட்டு மக்­களின் நலன்­க­ளுக்­கான அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு பதி­லாக கட்சி அர­சியல் சார்ந்த தன்­னா­திக்க செயற்­பா­டு­க­ளுக்கே, கூட்­ட­மைப்பின் தலைமை முன்­னு­ரிமை அளித்­தி­ருந்­தது. இதனால் கூட்­ட­மைப்­புக்­குள்ளே உள்­ளக ஜன­நா­யகம் புறந்­தள்­ளப்­பட்­டது. தன்­னிச்­சை­யான போக்கில் காரி­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு குறிப்­பாக அதன் தலைமை கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்சி இதன் அறு­வ­டை­யாக பின்­ன­டைவை சந்­தித்­தி­ருக்­கின்­றது.

ஆக, விடு­த­லைப்­பு­லி­க­ளுக்குப் பின்னர், தமிழ் மக்­களின் ஒன்­றி­ணைந்த ஓர் அர­சியல் சக்­தி­யாகப் பரி­ண­மித்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, தேசிய மட்­டத்­திலும், தமிழ் மக்கள் மத்­தி­யி­லு­மாக இரு முனை­களில் இப்­போது பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கின்­றது. மறு­பக்­கத்தில் உள்­ளூராட்சித் தேர்­தலில் தமிழ் மக்கள் ஏனைய கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளித்து அவற்றைப் பலப்­ப­டுத்­தி­யி­ருப்­பதன் ஊடாக, தமிழ்த்­தே­சி­யத்தின் மீது அவர்கள் கொண்­டி­ருந்த இறுக்­க­மான பிடி தளர்ந்­தி­ருப்­ப­தையே காட்­டு­கின்­றது.

யுத்தம் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்கள் நிறை­வ­டையப் போகின்­றது. ஆனால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு ஆக்­க­பூர்­வ­மான முயற்­சிகள் எதுவும் இடம்­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்லை. போர்க்­கா­லத்து உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று வலி­யு­றுத்தும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னங்­களில் அர­சியல் தீர்வும் ஓர் அம்­ச­மாக உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள போதிலும், அந்த சர்­வ­தேச அழுத்­த­மும்­கூட பல­ன­ளிக்­க­வில்லை. பொறுப்புக் கூறும் விட­யத்தில் இணை அனு­ச­ரணை வழங்­கிய நல்­லாட்சி அர­சாங்­க­மும் ­கூட, சர்­வ­தே­சத்­துக்கும் போக்கு காட்­டு­கின்­றதே தவிர உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்ற முன்­வ­ர­வில்லை.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு நம்­பிக்கை வைத்­தி­ருந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்பே இப்­போது கேள்விக்குறிக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றது. இந்த நிலையில் தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு அற­நெ­றியில் முயற்­சிப்­ப­தாக கூறு­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு யார் மீது நம்­பிக்கை வைத்து செயற்­பட போகின்­றது, யாரிடம் போய் தஞ்சமடைய போகின்றது என்பது தெரியவில்லை.

தென்னிலங்கையில் கடும்போக்குடைய அரசியல் நிலைமைகள் உருவாகியுள்ள சூழலில், உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பெரிதுபடுத்தி கட்சி அரசியல் நலன்சார்ந்து தன்முனைப்பில் தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்டு கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. தேர்தல் களத்தில் சுயவெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு எதிரணி சார்ந்தவர்களை தாக்கியும், அரசியல் ரீதியாக தூற்றியும் வந்த செயற்பாடுகள், தேர்தலின் பின்னர் தொடர்வது நல்லதல்ல. அரசியல் ரீதியாக எதிரணியில் இருப்பவர்களை ஜன்ம விரோதிகளை போல உருவகித்து, உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்து செயற்பட மாட்டோம் என்று அரசியல் வீராப்பு பேசுவது அழகல்ல.

மக்கள் பிரதிநிதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளை மக்கள் நலன் சார்ந்து திறம்பட நிர்வகித்து செயற்படுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதே போன்று அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், தெற்கில் உருவாகி வருகின்ற தமிழ் மக்களுக்கு சாதகமில்லாத அரசியல் சூழ்நிலையை கவனத்திற் கொண்டு, தமக்குள்ளான வேறுபாடுகளையும் அரசியல் கசப்புணர்வுகளையும் தூக்கி எறிந்து விட்டு, தமிழ் மக்களின் அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு புதியதோர் அரசியல் பாதையில் காலடி எடுத்து வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் இறுக்கமான ஓர் அரசியல் கட்டமைப்பில் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே, தமிழ் அரசியல் சரியான வழியில் பயணிக்க முடியும். ஒன்றிணைந்த அரசியல் செயற்பாட்டை கைவிட்டு, வெறும் கட்சி அரசியலில் நாட்டம் செலுத்துவது என்பது தெரிந்து கொண்டே படுகுழியில் விழுகின்ற செயற்பாடாகவே முடியும்.

-பி.மாணிக்கவாசகம்Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
பிரபாகரனின் தமிழீழ கொள்கை பிரகடனம் அரசியல் மேடைக்கு வந்துள்ளது- விமல் வீரவன்ஸ (12.09.2014)
புதிய தகவல்!! (23.07.2014)
மக்களின் கண்ணீரால் மன்னரைத் திருப்தியாக்கல் (27.01.2014)
பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள். :- அ.மயூரன் (14.01.2014)
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்தது எப்படி? (07.11.2013)
சிறிலங்கா அரசின் அபிவிருத்தியானது தமிழர்களின் தன்னாட்சி அவாவை சிறிதளவேனும் குறைக்கவில்லை (14.10.2013)
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் - 'சமூக சிற்பிகளின்' ஆய்வு (26.09.2013)
செப்.21 பௌத்த சிங்கள பேரினவாதத்தோடு தமிழர்கள் கணக்குத் தீர்க்கும் நாளாக அமையட்டும்! (13.09.2013)
எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா? என்.செல்வராஜா, (31.05.2013)
மாணவர் எழுச்சிப் போராட்டத்தி​ற்கு வித்திட்ட பாலச்சந்தி​ரனின் படுகொலை!- இதயச்சந்தி​ரன் (20.03.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan