.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
கட்டுரைகள்
 
காற்றில் கரைந்த த.தே.மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியம்!-வித்தகன்
Wednesday, 28.03.2018, 08:32am (GMT)

சமீபத்தில் நெஞ்சைத் தைத்தது ஒரு பதிவு. “1990 முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) தான். இல்லை என்போர் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை genocide) எனக் கூறும் யோக்கிதை அற்றவர்கள்” என்பதாக அந்தப் பதிவு அமைந்தது. இந்தப் பதிவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அதனைக் கூறியிருப்பவர் சட்டத்துறையின் தலைவர் – அதுவும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து இத்தகைய பதிவை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், பதிவிட்டவர் அவரேதான் குமாரவடிவேல் குருபரன் – யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவர்.

பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைமைப் பதவி என்பது சாதாரணமானதல்ல. மதிநுட்பம் மிக்கவர்களாலேயே அதற்கு அருகில் வரமுடியும். அப்பதவியில் அமர்வது என்றால் – அதுவும் இளவயதிலேயே அமர்வது என்றால் அதற்கு எத்தகைய அறிவாற்றால் தேவை என்பதை இங்கு சொல்ல வேண்டியதில்லை. குருபரன் 33 வயதுக்குள் இதனை சாத்தியப்படுத்திக் கொண்டார் என்றால் அவரது அறிவாற்றலையும் – சட்டத்துறையில் அவருக்கு இருக்கும் திறமையும் எத்தகையது என்பதை எவரும் சொல்லாமலே புரிந்து விடுவார்கள்.

குருபரனின் தந்தைதான் பேராசிரியர் குமாரவடிவேல். 2004 இல் துணைவேந்தராக இவரை நியமிக்க விடுதலைப் புலிகள் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் அரசியல் காரணங்களால் அவருக்குப் பதவி கிட்டவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தங்கள் ஆதரவை அவருக்குப் பகிரங்கமாக தெரிவித்ததன் மூலம் குமாரவடிவேல் அவர்களுக்கு வேண்டியவர் என்பதை தெரியப்படுத்தினர். இந்நிலையில், விடுதலைப் புலிகளை – அவர்களின் தேசியக் கோட்பாட்டை ஆதரித்த குடும்பப் பின்னணியில் வந்த குருபரன் பதிவு செய்திருக்கும் இந்த வார்த்தைகள் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி சாதாரணமானவர்கள் கொண்டுள்ள அறிவையே அவரும் கொண்டுள்ளாரா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு சொல்லுக்கான வரைவிலக்கணத்தை பொத்தம்பொதுவாக அனைத்துக்கும் பொருத்திவிட முடியாது. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த அழிப்பை இனவழிப்பு என்று தமிழர்கள் கூறுகிறார்கள். ஆனால் சிங்களப் படைகளுடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படைகள் கிழக்கின் உடும்பன்குளம், கொக்கட்டிச்சோலை (இரு தடவைகள்) , திராய்க்கேணி, கல்முனை, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை எனப் பல இடங்களில் தமிழர்கள் படுகொலைகளைப் புரிந்தனர். 

அப்படியாயின் அவர்கள் செய்தவற்றை எல்லாம் “இனவழிப்பு” என்று வகை சொல்வதுதானே நியாயம். ஆனால் சட்டமறிந்த வரைவிலக்கணங்களைக் கரைத்துக் குடித்த நம் சட்டத்துறைத் தலைவரே முஸ்லிம்கள் செய்தது “தவறு” என்று ஒற்றைச் சொல்லில் கூறிக் கடந்து விடுகிறார். முதல் வேலையாக அவர் “தவறு” என்ற சொல்லுக்கு அகராதியில் பொருள் தேடிப் படித்துவிட்டு அதற்கும் பிற்குறிப்பு ஒன்றை இடுவது பொருத்தம்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை எவருமே நியாயம் என்பதை வலியுறுத்தவில்லை – புலிகள் உள்ளடங்கலாக. விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியபோது அந்த உறுப்பினர்கள் பலர் அவர்களை மீண்டும் சந்திப்போம் என்று கூறியே திரும்பினர். இதேபோன்று முஸ்லிம் மக்களில் பலரும் தாங்கள் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையிலேயே சென்றிருந்தனர் என்பதை அவர்களில் பலர் இன்றும் கூறுவர். சில இனவாத சக்திகள் மட்டுமே தமிழர் – முஸ்லிம்கள் என்று பிரிந்து நின்று சண்டையிட்டுக் கொண்டனர். இவ்வாறு பிரிந்து நிற்பவர்களுக்கு முஸ்லிம் மாவீரர்களின் தியாகம் தெரியாது என்பதே உண்மை – குருபரன் உட்பட.

ஜூனைதீன் என்ற இயற்பெயர் கொண்ட கப்டன் ஜோன்சன் 1985 நவம்பர் 30 ஆம் தமிழீழத் தாயகத்துக்கு உரமாக முதல் இஸ்லாமியத் தலைவனாக வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு வரை 41 முஸ்லிம்கள் மாவீரர்களாக வீழ்ந்தனர். புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மரணம் அடையும் வரை அவரது மனைவி தனது மதத்தைப் பின்பற்ற எந்தத் தடையையும் அவர் விதித்திருக்கவில்லை. இத்தகைய சமய – இனப் பொறை கொண்டவர்களாகவே விடுதலைப் புலிகள் இருந்தார்கள்- இதற்கான சாட்சிகள் இன்றும் உளர்.

இலங்கையின் சட்டத்தைக் கரைத்துக் குடித்திருக்கும் குருபரன் – தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ நாட்காட்டியைத் தயாரித்த போது ஹஜ் பெருநாளையும் விடுமுறை தினமாக அறிவித்தனர் என்பதை அறியாதிருக்க வாய்ப்பில்லை என்று நம்பலாம். 2002 இன் பின்னர் முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் மீண்டபோது புலிகள் அவர்களை வரவேற்றிருந்தனர். இந்த மீள்குடியேற்றம்தான் பின்னாளில் வடக்கு முழுவதும் முஸ்லிம்கள் மீள்குடியேறக் காரணமாக அமைந்தது. இந்தப் பின்னணியில் – புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின்னால் – அவர்கள் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் வழிவந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் முஸ்லிம்கள் வெளியேற்றம் இனச் சுத்திகரிப்புத்தான் என்று கூறினார்.

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அன்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ கண்டித்திருக்கவோ அல்லது அது அவரது தனிக் கருத்து என்றோ கூறவில்லை. இதனால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவே நோக்கப்பட்டது. இதை அன்று – குருபரன் முக்கிய செயற்பாட்டாளராக இருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் கூட்டம் போட்டுக் கண்டித்திருந்தனர். ஆனால் இன்று நிலைமை என்ன? குருபரனின் கருத்தை அது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறக்கூடத் திராணியற்றவர்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்தரனும் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்றனர்.

எல்லா வரைவிலக்கணங்களும் எல்லா நேரங்களிலும் – எல்லாவற்றுக்கும் – எல்லா இயக்கங்களுக்கும் பொருந்துவதில்லை. அதுபோன்றே இனச் சுத்திகரிப்பு என்ற சொல்லும் முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்குப் பொருந்தாது. அப்படிக் கூறினால் கிழக்கில் பல தமிழ்க் கிராமங்களில் தமிழர்களை துரத்தி விட்டு இன்றுவரை அந்தக் கிராமங்களில் ஏகபோக உரிமைகளை அனுபவித்து வரும் முஸ்லிமகளையும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும் அமைச்சர்களையும் என்ன வகைக்குள் அடக்குவது என்று சட்டம் படித்தவர் கூற வேண்டும்.

பிற்குறிப்பு ஒன்று இடுவதன் மூலம் மன்னிப்பு இன்றித் தவறைச் சரியாக்கி விடலாம் என்ற அடிப்படையில் “பி. கு. 09/03/2018 அன்று என்னால் இத்திரியில் இடப்பட்ட பின்னூட்டத்தை இத்துடன் இணைக்கிறேன்: வெளியேற்றம் தவறு என ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் ‘இனச்சுத்திகரிப்பு’ என்று அதனை வரையறுப்பது தவறு எனக் கூறுவோரின் வாதத்தில் உள்ள நியாயங்களை விளங்கிக் கொள்கிறேன். I think it is possible to be reasonably pluralist on this issue. எனவே இனச்சுத்திகரிப்பு என்று ஏற்றுக்கொண்டால் தான் இனப்படுகொலை என்று சொல்ல யோக்கிதை எமக்குள்ளது என்று நிபந்தனை விதிப்பது முறையல்ல என ஏற்றுக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டதன் மூலம் அவர் நியாயத்தின் வழியில் தவறி விட்டார் என்றே பொருள் கொள்ளமுடியும்.

சிறுபான்மை இனம் ஒன்றின் மீதான அடக்குமுறைகளை – உரிமை மறுப்புகளை – அழிப்புகளை – இழப்புகளை – பிரிவுகளை – துயரங்களை – துன்பங்களை – ஆழ்ந்து அனுபவித்தது நம் தமிழினம். இத்தகைய பின்னணியைக் கொண்ட தமிழர்கள் எவரும் கண்டிக் கலவரத்தில் முஸ்லிம்கள் மீதான வன்முறையை விரும்பியிருக்கவில்லை. 

ஏனெனில் இழப்புகளின் வலியை நன்குணர்ந்த – அனுபவித்த எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்துக்கு நடக்கும் அதே கொடுமைகளை விரும்பாது. மாறாக வெகு சிலரின் பதிவுகள் அத்தகைய பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் உண்மையில் எந்த ஒரு தமிழ்த் தேசயவாதியும் சிறுபான்மை இனத்தின் மீது – முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியதில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியவாதிகளை இனவாதிகளாக குருபரன் சித்திரித்திருப்பது கண்டனத்துக்குரியது.

தமது நெருங்கிய செயற்பாட்டாளரான குருபரனின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்காது – கண்ணை மூடிக் கொண்டிருக்கும் – தமிழ்த் தேசியக் கட்சி என்று தன்னைப் பிரகடனப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாளாதிருப்பது ஏன்?

-வித்தகன்
-நன்றி தமிழ் லீடர்-


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அனந்தி, சிவகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கம், எல்லாமும் அடுத்த தேர்தலோடு சுபம்!-சிவசோதி-வி (26.02.2018)
மனித உரிமை பேரவையில் முறையான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி மீட்சி இல்லை! (25.01.2014)
மாநாடு வெற்றி பெற்றாலும், ஊடகப் போராக மாறிவிட்ட 'ஷோகம்' -எம்.எஸ்.எம். ஐயூப் (16.11.2013)
சர்வதேசத்தை உலுக்கியிருக்கும் இசைப்பிரியாவின் காணொளி..! -செல்வரட்ணம் சிறிதரன் (07.11.2013)
முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஐ. நா. சாசனத்தின் 99வது சாரமும்!-ச.வி.கிருபாகரன் (10.10.2013)
சிறிலங்கா என்னும் சொர்க்கம் பிக்குகளாலும், காடையர்களாலும், நாசமாக்கப்படுகின்றது (25.08.2013)
யதார்தங்கள் மாறும் வரலாறு மாறாது என்பதற்கு ஈழவிடுதலை ஒரு எடுத்துக் காட்டு-தயா (22.05.2013)
மாணவர் எழுச்சியும் இந்தியாவின் அதிர்ச்சியும்-இதயச்சந்திரன் (24.03.2013)
விழித்துக் கொண்டது ‘தூங்கும் பூதம்’ – ராஜபக்ச அரசுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கைகள் (19.02.2013)
சிங்கபாகு முதல் மகிந்தாவரை! வரலாற்றை புரிய வேண்டியது காலயதார்தத்தின் கடமை! (05.02.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan