.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழப் போராட்ட இலக்கியங்கள்
 
ஒரு இளைஞனை மீட்க ஈ.என்.டி.எல்.எப் முகாமுக்குள் தனியாகச் சென்ற திலீபன்
Friday, 21.09.2018, 09:40am (GMT)

ஈழ விடுதலைப் போராட்டம் மீதான இந்திய தலையீடுகளால் எழுந்த இந்திய -விடுதலைப்புலிகளின் போரில் மிக முக்கிய பக்கமாக இருப்பது தியாக தீபம் திலீபன் அவர்கள். திலீபனை பற்றி நான் பகிரப்படாத பக்கங்களில் பகிரப்பட வேண்டிய தேவை இருக்கிறதா? என கேள்வி எனக்குள்ளே எழுந்தது. அதற்கு பதில் தான் இந்த பத்தி. உண்மையில் சர்வதேசத்தையே எம் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த அகிம்சை வழிப் போராட்டத்தின் உச்சமே எமது தியாக தீபம் என்றால், அதை நான் சொல்ல வேண்டியது இல்லை. 

ஆனாலும் அந்த அகிம்சையின் உருவத்துக்குள் இருந்த ஒரு பக்கத்தை நான் நிட்சயமாக பதிவிட வேண்டும்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இந்திய வெளியாக புலனாய்வு அமைப்பான ரோவின் (RAW) திட்டமிடலுடன் ஆரம்பித்திருந்த ஆயுதப் பயிற்சித் திட்டங்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி சிறந்த ஆயுதப் போராளிகளாக தம்மை மாற்றிக் கொண்ட விடுதலைப் புலிகள் அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த MGR அவர்களின் உதவிகளுடனும் ஆதரவுடனும் தம்மை முழுமையாக வளப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் அப்போது தாயகத்தில் நடந்து கொண்டிருந்த இலங்கை அரசுக்கு எதிரான முதலாவது ஈழப்போரில் போராளிகள் பங்கெடுப்பதற்காக தமிழகத்தில் இருந்து தாயகத்தை நோக்கி பயணித்தார்கள்.

அந்த காலத்தில் பல பத்து போராட்டக் குழுக்கள் இயங்கியதும் அவை எமக்கு எதிர் சக்திகளாக மாறியதுமான கொடூரம் நடந்து கொண்டிருந்தது.

அந்த வேளையில் தான் திலீபனுடன் ஒரு மூத்த போராளி முக்கிய வேலையாக யாழில் நின்றார். அப்போது அவர்களது முகாம் அரியாலைப் பகுதியில் அமைந்திருந்தது. ஒரு மாலை வேளை வயதான தாய் ஒருத்தி தனது மகனை மாற்று இயக்க உறுப்பினர் ஒருவர் விசாரணை என்று இழுத்து சென்றதாகவும் அவர்களிடம் இருந்து மகனைக் காப்பாற்றுமாறும் திலீபனிடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போதைய அரசியல்த் துறைப் பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் திலீபன் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார். அதே நேரம். மாற்று இயக்க உறுப்பினர்களை மாறி, மாறி ஒவ்வொரு இயக்க உறுப்பினர்களும் தாக்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் திலீபன் தனியே அவர்களின் முகாமுக்கு போவது ஆபத்தை உணர்த்தி இருந்தது.

“எந்த போராட்ட அமைப்பின் உறுப்பினர்கள் மகனை கூட்டி சென்றார்கள் ?”

என வினவுகிறார் திலீபன். ENDLF என்ற மாற்று இயக்க உறுப்பினர்களே அந்த இளையவனை கூட்டி சென்றதாக அந்த தாய் தெரிவிக்கிறார். திலீபனின் முகம் சிவந்தது. கோவத்தில் விழிகள் கனன்றன. உடனே அவர்களின் முகாமுக்கு சென்று குறித்த இளையவனை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்படுகிறார்.

“அண்ண வாங்கோ போய் என்ன என்று பார்த்திட்டு வருவம். “

திலீபன் மூத்த போராளிளை அழைக்கிறார். ஆனால் அது ஆபத்தானது என்பதைப் புரிந்து கொண்ட மூத்தவரான தேவர் தடுக்கிறார்.
“இல்லைத் தம்பி கிட்டண்ணையட்ட சொல்லீட்டு போவம்.”

“ஒரு பிரச்சனையும் இல்லையண்ண நீங்கள் வாங்கோ“

என்ற திலீபனின் உறுதியான பிடிவாதத்திற்கு முன்னால் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. அதனால் தியாக தீபத்தோடு அவர் செல்கிறார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்திருந்த ENDLF முகாமுக்கு செல்கிறார்கள். தமது உயிர் போகினும் போகட்டும் என்ற துணிவு அவரிடம் இருந்தது. அந்த இளையவனை மீட்டு வர வேண்டும் என்ற உறுதியோடு செல்கிறார்கள். அவ்வாறு உறுதியுடன் சென்றவர்கள் முகாம் அருகில் சென்ற போது

"அண்ண நீங்கள் உள்ள வர வேண்டாம் நான் மட்டும் உள்ள போய்வாறன்"

என மூத்த போராளி தேவரை தடுக்கிறார் திலீபன்.
இல்லை நானும் வாறன் தம்பி என்று மறுத்தவரை தடுத்துவிட்டு நகர்கிறார் தியாக தீபம்.

“என்ன சொல்லுறாய் தனிய உன்னை விட்டிட்டு நான் போறதா? அண்ணைக்கு என்ன பதில் சொல்லுறது?”

அவர் அவசரமாக வினவிய போது புன்னகை ஒன்றை உதிர்ந்துவிட்டு.
“அண்ண மக்களுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் நாங்கள் அது நினைவிருக்கா இல்லையா? “

என வினவிய பின் எதையும் திருப்பி கேட்க முடியவில்லை. அவர் மக்கள் மீது வைத்திருந்த அன்பு நிறுத்தளக்க முடியாதது. அவரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அதை குறிகாட்டி நிற்கும்.அதனால் மௌனித்து போகிறார் தேவர் அவர்கள். தனது இடுப்பில் இருந்த கைத் துப்பாக்கியையும் வோக்கியையும் அவரிடம் திணிக்கிறார் திலீபன்.

“அண்ண இவற்றை பெறுவதற்காக பல உயிர் விலைகள் கொடுத்துள்ளோம் என் உயிரை விட என் ஆயுதங்களை பாதுகாப்பது தான் உங்களுக்கு முக்கிய வேலை. “

அவற்றை என்னிடம் ஒப்படைத்த போது ஆயுதங்களை விட தன் உயிரை துச்சமாக மதிக்கும் போராளித்துவத்தை உணரக்கூடியதாக இருந்தது. திலீபனின் முகத்தையே வெறித்துக் கொண்டிருந்த தேவரிடம்

“முகாமினுள்ளே போகும் எனக்கு என்னவும் நடக்கலாம் ஆனால் என் துப்பாக்கிக்கும் வோக்கிக்கும் எதுவும் நடக்க கூடாது. கவனமாக அண்ணையிடம் கொண்டு போங்கோ.”

என கூறிவிட்டு உள்ளே செல்கிறார் திலீபன். அவரைத் தடுக்கும் நிலையில் இருந்து தூரச் சென்றிருந்தார் மூத்த போராளி. போன திசையை பார்த்துக் கொண்டு நிற்கிறார். அக்கால கட்டம் தேசவிரோதிகளாக குறிப்பிடப்பட்ட பல போராட்டக் குழுக்கள் மாறிக் கொண்டருந்த ஆரம்பநிலை அதுவும் ENDLF அமைப்பு முற்று முழுவதாக துரோகிகளாக மாறிய காலம். அதனால் திலீபனுக்கு எதுவும் நடக்கலாம் என்பது வெளிப்படையானது. இந்த நிலையில் உயிருக்கு மேல் நேசிக்கும் தமிழ் மகனுக்காக தன் உயிரோடும் உடலோடும் ஒன்றிக் கிடந்த ஆயுதங்களையும் துறந்து அவர் நிராயுத பாணியாக செல்கிறார்.

சில மணி நேரங்கள் கடக்கின்றன உள்ளே சென்றவரைக் காணவில்லை. ஒருபுறம் மனசு பட, படத்தாலும். திலீபன் மீதான நம்பிக்கையும் மீண்டு வருவேன் என்று சொல்லிச் சென்ற அவரின் திடமும் மற்றவரைப் பதட்டப்பட விடவில்லை. காத்திருப்பு சில மணி நேரங்களாக மாறிப் போகிறது. தூரத்தில் திலீபனும் மற்ற இளையவனும் வருவது தெரிகிறது. கண்டவுடன் மனது நிம்மதி கொள்கிறது. 

தன்னந் தனியாக பல வாதாட்டங்கள், மிரட்டல்கள் என தொடர்ந்த அவரின் மீட்பு நடவடிக்கை இறுதியாக வெற்றி பெற்றதாகவும், ஒரு கட்டத்தில் தன்மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் தயாராகியதாகவும், அதையும் தான் உடைத் தெறிந்து சாமர்த்தியமாக கதைத்து இளையவனை மீட்டு வந்ததாகவும் திலீபன் கூறிய போது, அவர் சிறந்த ஆற்றலோன் என்பதை எமது தேசம் புரியத் தவறவில்லை. 

ஆயுதங்கள் இன்றி எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற உயிராபத்து நிறைந்த ஒரு இடத்தில் தனி ஒரு இளையவனுக்காக தன்னையே இழக்கத் துணிந்த வீரம் அவரின் போராளித்துவத்தை உணர்த்தியது. அது மட்டு மல்லாது ஆயுதங்களை துறந்து ஏற்பட்டிருந்த முரண் பாடுகளுக்குள்ளும் அகிம்சை வழியில் நடவடிக்கை ஒன்றை செய்து முடித்ததன் மூலம் அன்றே தான் சிறந்த அகிம்சையாளன் என்பதை போராளிகளுக்கு உணர்த்தி நின்றார் திலீபன். இந்த நடவடிக்கை அவர் செய்யப் போகும் அகிம்சை போரிற்கான விதை என்பது அப்போது புரியவில்லை. 

ஆண்டுகள் சில கடந்த போது தேசியத் தலைவரின் தூர நோக்க சிந்தனையின் வெளிப்பாடாக போராளிகளாக வளர்ந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு யார் மூலமாக தம்மை இன்னும் அதிகமாக மேம்படுத்திக் கொண்டதோ அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு எதிராக திலீபன் தனித்து ஒருவராக பசிப்போர் புரிந்து சர்வ தேசத்துக்கே புலிகளின் வழியை உரைத்துச் சென்றார். 

பன்னிரண்டு நாட்கள் உண்ணாமல் குடியாமல் தன்னை வருத்தி பசி கிடந்த புனிதமானவரை நாம் நல்லூரின் முன்றலில் இழந்த துயரம் நடந்த போது மீண்டும் திலீபனின் அகிம்சை வழியை அனைவரும் புரிந்து கொண்டார்கள்.

நன்றி- திரு தேவர்

இ.இ.கவிமகன்
21.09.2018
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
கண்முன்னே பிள்ளை சாக... செய்வதறியாது விழி கரைந்த தந்தை! (21.09.2018)
அன்று தியாகி திலீபனின் உண்ணாவிரத மேடையில் கண்ணீர் கசிந்த குரலிது... (20.09.2018)
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன் (17.09.2018)
தியாக தீபம் திலீபனோடு மீளும் நினைவுகள்! மூத்த போராளி தேவர். (17.09.2018)
துளித்துளியாக உயிர் ஒழுகிப்போயிருக்கும். சனங்களுக்காக… இந்தச் சனங்களுக் (17.09.2018)
பூகோளவாதம் புதிய தேசிய வாதம் தமிழீழ விடுதலைக்கு ஒரு கலங்கரை விளக்கம்! (23.02.2018)
தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் (25.11.2017)
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு உண்மை தொடர் (1-20) ஆக்கம்: பாவை சந்திரன் (21.12.2014)
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று-காணொளி இணைப்பு! (24.12.2013)
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார் (24.12.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan