.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்!
Saturday, 05.01.2013, 09:38pm (GMT)

கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தளபதி திரு.விநாயகம் அவர்கள் பிரான்ஸின் புறநகர்ப்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் சில பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தன.

இவர் படுகொலை செய்யப்பட்ட தேசிய செயற்பாட்டாளர் பருதி அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகங்கள் பல தெரிவித்திருந்தன. கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிகாலை ஐந்து மணியளவில் இவர் வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவை தெரிவித்திருந்தன. இது தொடர்பில் ஊடகங்களை தனிப்பட்ட ரீதியில் உங்களிற்கு இந்தத் தகவலை யார் வழங்கினார்கள் என நான் கேட்டபோது அக்ககைதினை நேரடியாகப் பார்த்த சாட்சி ஒன்றின் மூலம் இந்தத் தகவல் வெளியானதாக சில ஊடகத்தினைச் சார்ந்தவர்களும் தெரிவித்தனர்.

சரி ஊடகங்கள் தான் இவ்வாறு தெரிவிக்கின்றதே என்னதான் நடந்தது என பிரான்ஸ் உள்ளக டி.சி.ஆர்.ஐ. காவல்த்துறையினரையும், டந pயசளைநைn எனப்படும் பிரெஞ்சு நாளேட்டின் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். அதில் பிரான்ஸ் உள்ளகக் காவல்த்துறையினர். சந்தேக நபர்கள் 15 பேரை தாம் இதுவரை கைது செய்திருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் ரவுடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியதோடு இவர்களின் விபரங்களை வெளியிட மறுத்தனர். அத்துடன் கொல்லப்பட்ட தேசிய செயற்பாட்டாளர் பருதியின் அணியைச் சேர்ந்தவர்களிடமும் (அனைத்துலக தொடர்பகம்), மற்றைய அணியைச் சேர்ந்தவர்களிடமும் (தலைமைச் செயலகம்) தாம் விசாரணைகளை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததாகவும், இவ்விரு அணியைச் சேர்ந்தவர்களின் முக்கியஸ்த்தர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை,என்றும் இருந்தபோதும் இவ்விரு அணிகளின் வாக்குமூலங்கள் சில முரண்பட்டிருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடைபெறுவதாகவும், அவ்விசாரணையின் பின் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதுவே உண்மையும் கூட இனி விடையத்திற்கு வருவோம்.

பருதியின் படுகொலையில் சம்பந்தப்பட்டு திரு விநாயகம் கைது தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சிரேஸ்ட முக்கியஸ்தர் கருத்து!

ஊடகங்களில் வெளியான செய்தியில் சில மர்மங்கள் நிறைந்தும், மற்றும் உண்மைத் தன்மைகள் இல்லாமல் இருப்பதாக சந்தேகித்து பிரான்ஸில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் இது குறித்து கேட்டேன். அதற்கு அவர் பருதியின் கொலையில் திரு. விநாயகம், மற்றும் தமிழரசன் ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் செயற்பாட்டாளர் பருதி அவர்கள் கொல்லப்படுவதற்கு சில நாட்களின் முன்னர் தமிழர் நடுவத்தைச் சேர்ந்த தமிழரசன், மற்றும் சிலருடன் இணைந்து பருதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் பிரான்ஸில் மாவீரர் தினம் ஒன்றாக நடாத்துவதற்கு அவர் சம்மதித்திருந்தார் எனினும், தமது ஒருங்கிணைப்புக் குழுவிற்குள் முக்கியமானவர்களில் ஒருவரான குட்டி (மயூரன்)மற்றும், இரும்பொறை (அரவிந்தன்) ஆகியோர் இதற்கு இணங்க மறுக்கிறார்கள் என்றும். இது குறித்து தான் தமது செயற்பாட்டாளர்களுடன் கதைத்துவிட்டுச் சொல்வதாகவும் எது எப்படி இருப்பினும் மாவீரர் நாள் நிகழ்வை அனைவரும் இணைந்து ஒன்றாகத்தான் நடத்துவோம் என்றும் பரிதி அவர்கள் உறுதியாகத் தெரிவித்திருந்தார் என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியஸ்தர் எனக்குத் தெரிவித்தார். இதன் பின்னர் பரிதி அவர்கள் படுகொலை நடந்திருக்கிறது.

இது பலத்த சந்தேகங்களை எமக்குள்ளேயே தோற்றுவித்துள்ளது என்று கூறிய அவர் டென்மார்க் குட்டி(மயூரன்)பற்றி இதுவரை வெளிவரத சில தகவல்களையும் தெரிவித்திருந்தார். அதாவது பிரான்சில் அனைவரையும் ஒன்றிணைத்து மாவீரர் நாள் நிகழ்வை முன்னெடுக்க பருதி அவர்கள் முனைந்த போது, அதனை மறுத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு எவரையும் இணைக்காமல் தனியாகத்தான் மாவீரர் நாள் நிகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்று டென்மார்க் குட்டி(மயூரன்) என்பவர் இறுதிக் காலங்களில் பருதியுடன் வெகுவாக முரண்பட்டுள்ளார் என்றும், இவர் சிறிலங்கா அரசின் இன்றைய விருந்தாளியான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் சகோதரியின் மகளை மணமுடித்த ஒருவர். அதாவது கே.பியின் மருமகன் என்றும் தெரிவித்தார்.

எனவேதான் பருதி அண்ணையின் கொலையில் எமக்குள்ளேயே பலத்த சந்தேகத்தினை வலுப்படுத்தியுள்ளது என தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருந்தார். இதில் முக்கியமான விடையம் இரண்டு அணியையுமே பிரான்ஸ் உள்ளகப்புலனாய்வுத்துறை எப்போதும் அவதானித்த வண்ணம் இருந்தது. அத்துடன் இப்படியான செயல்களில் தமிழர் நடுவத்தைச் சேர்ந்தவர்களோ, தலைமைச் செயலகத்தைச் சேர்ந்தவர்களோ, ஒட்டு மொத்தத்தில்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உண்மையான போராளிகள் யாரும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என உறுதியாகத் தெரிவித்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சிரேஸ்ட முக்கியஸ்தர். மேலும் தனது கருத்தை முன்வைக்கும் போது...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான திரு.விநாயகம் அவர்கள் பிரான்ஸ் காவல்த்துறையின் பலத்த கண்காணிப்பில் ஒருவருடத்தின் மேலாக இருப்பவர். அத்துடன் அவரது தொலைபேசி உரையாடல்களும், நடமாட்டங்களும் எப்போதும் அவதானிப்பில் உள்ளது. இந்நிலையில் அவர் கைதானார் எனக் கூறுவது வியப்பாக உள்ளது, எனவும் கருத்தியல் ரீதியில் எமக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கிறது, ஆனால் தேசிய ரீதியில் அல்ல இதை சில விசமிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என தெரிவித்து அவரது கருத்துக்களை நிறைவு செய்தார்.

தலைமைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு திரு விநாயக்தின் கைது தொடர்பாக கேட்டபோது!

தேசிய செயற்பாட்டாளர் பருதி அவர்களின் படுகொலை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதைவிட இப்படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அதாவது தலைமைச் செயலகத்தினை சட்டச் சிக்கலில் மாட்டிவிட்டு குளிர்காய சில விசமிகள் முனைவதாகவும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததோடு மறைந்த பருதி அவர்கள் தம்முடன் எப்போதும் தொடர்பில் இருந்ததாகவும், கடந்த 2011 ஆம் ஆண்டு லண்டன் சென்று அங்கு செயற்பாடுகளில் ஈடபட்டிருக்கும் முக்கியமானவர்களை சந்தித்து அவர்களுடன் பேசிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஆகவே அவரின் செயற்பாடுகளுக்கும், காலத்தின் தேவை கருதி அவர் இறுதி நேரத்தில் முன்னெடுத்த முக்கியமான பணி தொடர்பாகவும் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டோம். பிரான்சிலும், அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும், எம் தேசத்தின் புதல்வர்களை வணங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரே இடத்தில் நடைபெறும் என நாம் எதிர்பார்த்திருந்த நேரத்தில் பருதி அவர்களுக்கு கொடுந்துயர் இடம்பெற்றுள்ளது. அத்தோடு பருதி அவர்கள் முன்னெடுத்த அந்த முயற்சிகளை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர்ந்து முன்னெடுத்து மாவீரர் நாள் நிகழ்வை ஒன்றாக நடத்துவதற்கு முன்வர வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் வேண்டிக்கொள்கிறோம்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான விநாயகம் அவர்களோ,அல்லது வேறு எந்த உறுப்பினர்களோ கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் தேசவிரோத சக்திகளால் உண்மைக்குப் புறம்பான வகையில் சில விசமிகளும், சிங்கள அரசின் அடிவருடிகளும், தங்கள் சுயலாபங்களிற்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களையும், செயற்பாட்டாளர்களையும் குழப்பத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனுடைய உண்மையான காரணம் ஒன்றுபட மறுக்கும் ஒரு சில செயற்பாட்டாளர்கள் நடத்தும் மாவீரர் நாளை மையப்படுத்தியதாகவும் இருக்கின்றது, இதில் மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பேச்சாளர்களில் ஒருவர். எதிர்வரும் 24.11.2012சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய செயற்பாட்டாளர் பருதி அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்விலும், வித்துடல் விதைப்பு நிகழ்விலும் அனைத்து புலம்பெயர்வால் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டு தனது கருத்தை நிறைவு செய்தார்.

உண்மையில் கைதான நபர் யார்?

அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இருவருமே இவ்வாறு பதிலளித்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தினரின் மறுப்பு அறிக்கையும் 17.11.12 அன்று வெளியாகியது. அதில் அவர்கள் தமது அமைப்பைச் சேர்ந்த எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்து ஒரு மறுப்பு அறிக்கையினை வெளியிட்டிருந்தனர். எனவே திரு.விநாயகம் கைது தொடர்பான விடையம் எங்கிருந்து வந்தது என ஆராய தலைப்பட்டேன்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பிரான்ஸின் புறநகர்ப்பகுதி ஒன்றில் வைத்து திரு. விநாயகம் கைது செய்யப்பட்டார். என்கின்ற செய்தி பற்றிய உண்மைத் தன்மை பற்றி ஆராய முற்பட்டபோது அதிகாலை 05 மணிக்கு அவ்வழியால் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த நபர் இக்கைதினை நேரடியாகப் பார்த்ததாகவும், கிட்டத்தட்ட 20 வரையான காவல்த் துறையினர் வீதியை மறித்து இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அறிந்தேன்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

பிரஞ்சு உணவகம் ஒன்றில் வேலை செய்யும் சின்னராசா என்பவர் அவ்வழியால்தான் வேலைக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு வேலைக்குச் செல்லும் போது குறித்த வீட்டில் தமிழ் இளைஞர்களின் நடமாட்டம் இருக்கும். சில மாதங்களின் முன்னர் சின்னராச என்பவர் தனது நண்பர் ஒருவருடன் அவ்வழியால் சென்றுகொண்டிருக்கும் பொழுது குறித்த வீட்டை சுட்டிக்காட்டி அவரது நண்பர் இதுதான் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தளபதிகளில் ஒருவரான விநாயகம் இருக்கும் வீடு எனச்சொல்லி புரளியை கிளப்பி விடுள்ளார். அதனை இந்த சின்னராச என்பவர் நம்பிவிட்டார், அதன் பின்னர் வழமையாக அவ்வீதியால் சென்று வரும் இவர், விநாயகம் அவர்களை கைது செய்ததாக சொல்லப்படும் அன்று அதிகாலை வேளையில் வேலைக்குச் செல்லும் போது குறித்த வீதியை மறித்து அந்த வீட்டினை காவல்த்துறையினர் முற்றுகையிட்டிருக்கின்றனர். எனவே அதைப்பார்த்த சின்னராசா தனக்குத் தெரிந்த எல்லோருக்கும் தகவலைப் பரிமாறியிருக்கின்றார். உடனே உசாரான சில பாட்டிகள் சட்டுப்புட்டென ஊடகங்களிற்கு தகவலை கசியச் செய்தனர். இதுதான் உண்மையில் நடந்தது.

சரி அந்த வீட்டில் இருந்த தமிழ் இளைஞர்கள் யார் எனப்பார்ப்போம்.

பிரான்ஸில் பல காலமாக தமிழ்க்குழு மோதல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களில் பெயர் குறிப்பிடக் கூடியவகையில் இயங்கும் ரவுடிக்கும்பல்களில் பாம்புக்கோஷ்டியும் ஒன்றாகும். விநாயகம் அவர்கள் தங்கி இருந்ததாக சொல்லப்படும் வீட்டில் தங்கி இருந்தவர்களும் இவர்களே.. கடந்த வெள்ளிக்கிழமை வீடு முற்றுகையிட்டு கைது கைதுசெய்யப்பட்ட நபர்களும் இவர்களே. இந்தப் பாம்புக் கோஷ்டியைச் சேர்ந்த பிறேம் என்பவரே பருத்தி அவர்களில் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இனி இந்தப் பாம்புக் கோஷ்டியினர் எவ்வாறு பருதியின் கொலைச் சீனுக்குள் வருகின்றனர் எனப்பார்ப்போம்.

கடந்த 2004 ஆம் ஆண்டு வன்னி சென்ற றீகன் தனது பெயரை பருதி என மாற்றி பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக வந்த நாளில் முதன் முதலாகத் தொடர்பு கொண்ட நபர்கள் இந்தப் பாம்புக் கோஷ்டியினரைத்தானாம். ஏனெனில் இயக்கம் என்ற நிலையினை தக்கவைத்து அடுத்தகட்டத்திற்குள் நகர பருதிக்கு இவர்களின் தொடர்புகள் அன்று தேவைப்பட்டது தெரிவிக்கும் இந்த நபர் தெரிவிக்கையில்.

இதுவே இறுதியில் பருதி அவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாறியது. காரணம் இந்தப் பாம்புக் கோஷ்டியினரின் தொடர்புகள் மூலமே பருதி சில வர்த்தகர்களிடம் தேசியத்திற்கான நிதியினை வசூலித்து வந்ததோடு மட்டுமல்லாமல், சீட்டு பிடித்து அதில் பணந்தராதவர்களிடம் இந்தப் பாம்புக் கோஷ்டியினர் மூலம் மிரட்டி பணத்தினைப் பெற்றும் இருந்தார். இதனால் பலர் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் தான் கடந்த 2006 இன் பிற்பகுதியில் சிறை சென்ற பருதி 2010 ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு வந்த இவர் மீண்டும் பாம்புக் கோஷ்டியினருடன் தொடர்பினைப் பேணினார். இதன் பிண்ணியின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரை அவர்கள் மூலம் (பாம்பு கோஷ்டி) மிரட்டினார் என பிரான்ஸ் காவல்த்துறைனரிடம் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்.

இப்பாம்புக் கோஷ்டியினர் பருதியின் அனுமதி இல்லாமல் லாச்சப்பல் பகுதியில் உள்ள தமிழ்க்கடைகளில் பணவசூலிப்புக்களில் ஈடுபடத்தொடங்கினர். இதனால் தமிழ் வர்த்தகர்கள் பலர் பருதியிடம் முறைப்பாடு ஒன்றினைச் செய்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பருதி எந்தக்காரணத்தை கொண்டும் பாம்புக் கோஸ்ட்டியினருக்கு பணம் வழங்க வேண்டாம் என்றும் தமிழீழ தேசியச் செயற்பாட்டிற்கே நிதியினை வழங்குமாறும், அப்படி யாரவது பணம் கேட்டு வந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு கண்டிப்பான வேண்டுகொளை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதனால் பாம்புக் கோஷ்டிக்கும் பருதிக்கும் முறுகல் நிலைகள் தோன்றின. இதன் பின்னணியில் கடந்த வருடங்களில் பருதி, கிறிஸ்னா, ஜோதி, குழுவிற்கும் அதாவது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் பாம்பு குறுப்பிற்கும் மட்ராஸ் உணவகத்தை மையப்படுத்து மோதல்கள் தொடர்ந்தது, சாப்பிட்டு குடித்து விட்டு பணம் கொடுக்காமல் பாம்பு குறுப் செல்வதும், பின்னர் பரிதி குறுப் அவர்களைத் தாக்குவதும் தொடர்ந்தன, பல தடவைகள் மட்ராஸ் உணவகத்தின் வாயில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, அதன் தொடர்ச்சியாக பருதி அவர்கள் பாம்பு குறுப்பின் வாள் வெட்டிற்கு இலக்காகி இருந்தார். இது குறித்து பருதி அவர்கள் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியபோது வளர்த்த கிடாய் மார்பில பாஞ்சிட்டு மச்சான் வேறோண்டுமில்லை என்று நக்கலாக கூறியுமிருந்தார் என்று தொடரும் அவர்.

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த உணவகத்தில் இந்த இரண்டு குழுவிற்கும் இடையில் நடந்த மோதலில் ஒருவர் கோமா நிலைக்கு ஆளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து கிறிஸ்னா, ஜோதி, ஆகியோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகவும், பருதி அவர்கள் தப்பிச்சென்று பிரித்தானியாவில் தலைமறைவாகி இருந்ததாகவும் பின்னர் முன் பிணையில் நீதிமன்றம் சென்று தான் இதில் சம்மந்தப்படவில்லை என்று தெரிவித்து தொடர்ந்தும் பிணையில் இருந்துள்ளார். இதன் பின்னணியில் இவ்வருடம் பருதி அவர்களின் கொலை இடம்பெற்றிருக்கிறது எனத் தெரிவித்து அவர் தனது கருத்தை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்துதான் கடந்த வெள்ளிக்கிழமை பாம்புக் கோஷ்டியின் தலைவர் பிறேம் வீடு முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஊடகவியலாளன் என்றவகையில் பருதி அவர்கள் என்னுடன் பல விடையங்கள் தொடர்பாக கலந்துரையாடுவார் இருப்பினும் அவரின் செயற்பாடுகள் சிலவற்றில் நான் எனது கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடுவது வழக்கம் இருப்பினும் இங்கு எழுதப்பட்டுள்ள விடையங்கள் தொடர்பில் பருதி அவர்கள் என்னுடன் உரையாடியதில்லை அந்த தேவையும் எமக்கு ஏற்பட்டதில்லை

திரு விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியிட்டது யார்.

இது இவ்வாறு இருக்கும் நிலையில் இலண்டனைத் தளமாகக் கொண்டே பெரும்பாண்மையான தமிழ் இணையத்தளங்கள் இயங்குகின்றன. அந்தவகையில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இணையத்தளங்களான அதிர்வு, எதிரி, வருடல், ஈழம்5 ஆகியவற்றைச் சொல்லலாம். அதில் இரண்டு குழுக்களின் சார்பூடகங்களாக இவை இருக்கின்றன. இனி விடையத்திற்கு வருவோம். அதிகாலை பிரான்ஸ் காலை நேரம் 7.36 மணியளவில் என் நண்பர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது அது இலண்டனிலிருந்து அதிர்வு இணையம் சார்பாக கண்ணன் அவர்கள் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்.

அவர்கூறிய வார்த்தை எம்மைத் தூக்கிவாரிப் போட்டது. அதுதான் விநாயகம் அவர்களை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்கின்ற தகவல். பிரான்ஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலை 5 மணிக்கு வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாகவும் அதில் திரு. விநாயகம் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இப்போதுதான் ஒருவரை இழந்திருக்கின்றோம் அதற்குள் இந்நொருவரா. என்று நமக்குள் பேசிக்கொண்டு எமது ஊடக நண்பர்களைத் தொடர்பு கொண்டு விடையத்தை விசாரித்தோம். அவர்களிற்கு இந்தத் தகவல் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அதிகாலை புறநகர்ப்பகுதியில் காவல்த்துறையினரின் சுற்றிவளைப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தமையை உறுதிப்பத்தியிருந்தனர்.

மீண்டும் 8.00 மணியளவில் இலண்டனிலிருந்து அதிர்வுக்கண்ணனின் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் விநாயகம் கொலை செய்யப்படவில்லையாம். தேசிய செயற்பாட்டாளர் பருதியின் கொலையுடன் சம்பந்தப்பட்டார் என சந்தேகித்து அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அதை வேலைக்குச் சென்றுகொண்டிருந்த நபர் நேரில் பார்த்ததாகவும் தெரிவித்தார். (இப்போது மேலே படியுங்கள் புறநகர்பகுதியில் கைது நடந்ததை சின்னராசா என்பவர் பார்த்திருந்தார் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தேன்)

இது குறித்து லாச்சப்பலில் உள்ள காவல்நிலையம் சென்று கைது தொடர்பாக கேட்டிருந்தோம். கைது நடவடிக்கையை உறுதி செய்தவர்கள் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என தெரிவிக்கவில்லை. டி.சி.ஆர்.ஐ.யினருடன் தொடர்புகொண்டு விநாயகம், கதிர்காமத்தம்பி அறிவழகன், கதிர்காமத்தம்பி வைரவமூர்த்தி ஆகிய பெயர்களில் விசாரித்துப் பார்த்தோம். இப்போது முடியாது நாளை சொல்கின்றோம் என காவல்துறையினர்கள் கூற நாங்களும் வந்துவிட்டோம்.

சனிக்கிழமை இது தொடர்பாக காவல்த்துறையினரைக் கேட்டபோது அப்படியான பெயர் இதுவரை பதியப்படவில்லை. எனினும் விபரங்களை எம்மால் வெளியிடமுடியாது என்று கூறினர். இதற்குள் கடந்த வெள்ளிக்கிழமையே சில ஊடகங்களில் திரு விநாயகம் கைது என கொட்டை எழுத்தில் எழுதிவிட்டார்கள். உடனே இந்தியாவில் தாய்த்தமிழ் இணையம் நடாத்தும் கண்ணன் என்கிற பையனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இலண்டனில் இருந்து கண்ணன் அண்ணா செய்தி தந்தார் நான் போட்டன் என்று கூறினான். உடனே அதிர்வுக்கண்ணணைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது அண்ணா இது உண்மை நான் இப்போதுதான் டி.சி.ஆர்.ஐ. காவல்துறையினரிடம் கேட்டேன் என்று பதிலளித்தார்.

அது என்ன நாங்கள் நேரில் போய் கேட்டும் தராத டி.சி.ஆர்.ஐ. அதிர்வுக்கண்னன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தந்துவிட்டார்களாக்கும் என நக்கலடித்துவிட்டு எதுக்கும் பாத்துப் போடுடா செய்திவிடையம் நாளை சிக்கலாயிடும். ஊடகவியலாளர்கள் நேர்மையுடன் நடக்க வேண்டும் என்றேன்.

அதற்குள் தமிழ்வின் ஈழதேசம் இணையத்தளங்கள் சிங்கள ஊடகம் வெளியிட்டதாக மேற்கோள்காட்டி செய்தியினை வெளியிட்டனர்.உயர்வு இணையம் அதிர்வு கண்ணனின் செய்தியை அப்படி புரட்டிப் போட்டது

இலண்டனிலிருந்து இயங்கும் எதிரி இணையத்தின் வன்னிமைந்தன் அதைவிட ஒருபடி மேல் சென்று தலைமைச்செயலகத்தின் விநாயகம் கைது, தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த 16 பேர் கைதாகப்பட இருக்கின்றனர். எனத் தெரிவித்து அதில் சில பெயர்கள் இலண்டனில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார். இதைனையடுத்து பரபரப்பு ரிசி விறுவிறுப்பில் தனது புலனாய்வை ஆரம்பித்தார். தமிழ் சிஎன்.என் ஆகியனவும் இவை தொடர்பாக செய்தியை வெளியிட்டிருந்தன.

அதன்பின் அதிர்வு இணையம் ஒலிப்பதிவுடன் இதோ ஆதாரம் இருக்கிறது எனும் பாணியில் பழைய பல்லவியை அதிரவைத்தது. நான் மீண்டும் டி.சி.ஆர்.ஐ. காவல்த்துறையினரைத் தொடர்பு கொண்டு கேட்டிருந்தேன் இதுகுறித்து அவர்கள் தமக்கு இதுவரை எந்தத் தகவல்களும் தெரியாது என்றனர்.

ஆகவே இது இப்படியிருக்கும் போது எப்படி அதிர்வுக்கண்ணனுக்கு மட்டும் டி.சி.ஆர்.ஐ. ஆதாரப்படுத்தியது என்பதை எனக்குத் தெரிவிக்கமுடியுமா? அத்துடன் இந்தக் கட்டுரைகளின் பின்னணியில் மாவீரர் தினத்திற்கு (லண்டன் எக்சல்) இங்கே மட்டும் வாருங்கள் என்கின்ற பிரசாரமும் காணப்பட்டதையும் உணரமுடிந்தது. எனவே ஒரு சில ஊடகங்கள் தமது சுயலாபத்திற்காக செய்கின்ற பிரச்சாரம் ஒட்டுமொத்த எம்மினத்தையே சிதைக்க முற்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அதிர்வு இணையமும் கண்ணனும் சொல்வார்களா தாங்கள் ஊடகதர்மத்தைப் பேணினேன் என்று?

அனைத்து ஊடகங்களிற்கும் செய்திகளை வழங்கிவிட்டு, தானும் தன் இணையத்தில் விநாயகம் கைது என்று செய்தியைப் போட்டிருந்தார். நான் பல தடவைகள் சொல்லியும் இவர் கேட்கவில்லை. இதை அனைத்து ஊடகக்காரர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இங்கு சுடிக்காட்டி எழுதுகின்றேன்.

எனவே ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் தயவு செய்து உண்மையை அறிந்து, தெரிந்து எழுதுங்கள், ஏனெனில் புலம்பெயர் தேசத்தில் பல அமைப்புக்களைச் சார்ந்த எம்முறவுகள் இருக்கின்றார்கள் ஒருவர்மீது அவசரப்பட்டு குற்றம் சாட்டி ஒரு அமைப்பையும், அதனைச்சார்ந்த எம்முறவுகளையும், தள்ளிவைப்பதோடு, மீண்டும் மீண்டும் பிரிவுளையே இவ்விணையங்கள் உருவாக்குகின்றன. எனவே தயவு செய்து ஊடக நண்பர்களே புலம்பெயர் தேசத்தில் மீண்டும் மீண்டும் பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர்கள். இது எம்மினத்தினை அதல பாதாளத்திற்குள் கொண்டு சென்று தள்ளிவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உண்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் இறந்துவிட்டார்களா?

நன்றி

கணபதிப்பிள்ளை ராஜ்குமார்
சுதந்திர ஊடகவியலாளன்

தொடர்புகளுக்கு:kanapathiraj@gmail.comRating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது!சுவிசில் இருந்து தயா (05.01.2013)
சமகால யதார்தமும் எதிர்கால சந்தற்பங்களும்! - சுவிசில் இருந்து தயா (29.12.2012)
எம்.ஜி. ஆரின் 25-ம் ஆண்டு நினைவு வணக்கம் அவரது நினைவாலையத்தில் இன்று நடைபெற்றது. (24.12.2012)
நான் அன்றும் இன்றும் புலிகளுக்கு எதிரானவன் என்பதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்-இரா.சம்மந்தன் (08.12.2012)
பிளவுபட்டது எக்ஸெல்! கமல் தனம் குழுவின் அடாவடி! நான்கு இடங்களில் மாவீரர்நாள் நிகழ்வு! (24.11.2012)
13 வது திருத்தத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள போர்! (சமகால அரசியல்) (21.10.2012)
நவம்பர் 27: உரிமையோடு சுடரேற்றி உணர்வோடு உறுதி எடுக்கும் உன்னதமான நாள் (18.10.2012)
‘அகிம்சையின் விஸ்பரூபம்’ என்ற பாடம் சொல்லித் தந்தவன் எங்கள் திலீபன்!- ச.ச.முத்து (26.09.2012)
"பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக் கோடுகள் உள்ளன" தமிழீழத் தேசியத் தலைவர் (01.08.2012)
இந்திய சிறிலங்கா உடன்பாடு - 25 ஆண்டுகளின் பின்னர் மதிப்பீடு செய்யும் அசோக் மேத்தா?? (01.08.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan