.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
இனவாதத்திற்கு தற்போதைய
Saturday, 27.12.2014, 11:09pm (GMT)

பிரித்தானிய தமிழர் ஒன்றியம் 
ஐக்கிய இராச்சியம்.
                                                    தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2013

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

 2013, ஆம் ஆண்டிற்கான  தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்களுக்கும், தமிழீழம் உள்ளிட்ட, உலகத் தமிழ் மக்களுக்களுக்கும் , பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தினராகிய நாங்கள் இந்த அறிக்கையின் ஊடாக பகிர்ந்துகொள்ள விளையும் விடையம் என்னவென்றால்,தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய சூழ்நிலையை, அதன் ஊடாக எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளில் முன்னெடுக்க வேண்டிய அரசியல் சார்ந்த செயற்பாடுகளையும் கருத்தில் கொண்டு அனைத்து தமிழ் மக்களையும் ஓரணியில், ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிற்கிறோம்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மாவீரர் நாள் நிகழ்வு என்பது அதி உன்னதமான, புனித நாளாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்ட நாளில் இருந்து, தமிழ்மக்களின் வாழ்வோடும் கலாச்சாரத்தோடும் ஒன்றிப்போய் விட்ட  நினைவெழுச்சி நாளாக தமிழர் வரலாற்றில் பதிவாகிவிட்டது.

தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழீழ தேசத்தின் வித்துக்களான எங்கள் மாவீரர்களை, ஒட்டுமொத்தத் தமிழ் இனமும் மெய்யுருகி வணங்கும் புனித நாளான மாவீரர் நாளை எதிர்கொண்டு நிற்கும் இக்காலத்தே, இந்நிகழ்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம்.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது வழமை போன்று அதன் புனிதத் தன்மை குன்றாத வகையில், நேர்த்தியான நிர்வாக ஒழுங்கின் கீழ் அனைத்து தமிழ் மக்களையும் இலக்கு நோக்கி, ஒரு நேர்கோட்டில் பயணித்து மாவீரர்கள் தமது இறுதி இலச்சியமாக வரித்துக் கொண்ட தாயகக் கனவை நாம் மீட்டெடுப்போம் என மாவீரர்கள் மீது உறுதி எடுத்துக் கொள்ளும் நாளாகவே நாம் மாவீரர் நாளை வரையறுக்கின்றோம்.

மாவீரர் நாள் நிகழ்வில் தமிழ் அமைப்புக்களின் பங்களிப்பு 

தமிழீழ மாவீரர்களை  நேசிக்கும் மக்களாலும், தமிழீழ விடுதலைப்  போராட்டத்தை ஆதரிக்கும் மக்கள் கட்டமைப்புக்களாலும் புலம்பெயர் தேசத்தில் பல ஆண்டுகளாக மாவீரர் நாள் நிகழ்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்த சூழலின் பின்னர், மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதில் பெரும் தடைகள் ஏற்பட்டன, மாவீரர் நாள் என்ற பெயருக்குமே தடை ஏற்பட்ட அந்த சூழலில், மக்கள் கட்டமைப்புக்கள் தாங்களாக முன்வந்து ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுத்ததன் பயனாக ஒவ்வெரு நாட்டின் சட்ட, நிர்வாகத்திற்கு அமைவாக சில விட்டுக் கொடுப்புக்களுடன் மாவீரர் நாள் நிகழ்வை தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் என்ற பெயருடன் பொது அமைப்புக்களால் நடத்தப்பட்டு வந்தது.

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் உருவாக்கம்.

2006,ஆம் ஆண்டு காலப்பகுதிவரை தமிழர்களின் தனித்துவமான அமைப்புக்களாக பதிவு செய்யப்பட்டு, அந்த அமைப்புக்களின் நிர்வாகத்தின் கீழ் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் தேசிய நினைவெழுச்சி நாள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், மாவீரர்களுடன் எந்த வகையிலும் இரத்த உறவுகளைக் கொண்டிருக்காத, தலைமை நிர்வாகிகள், அங்கத்தவர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புக்கள் எவையும் (மாவீரர் நாள் )தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை நடத்த முடியாது என பிரித்தானியாவின் நீதித்துறை சம்மந்தப்பட்ட அமைப்புக்களை தொடர்புகொண்டு அறிவுறுத்தியது.

இந்த  நிலையில், மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்களை அங்கத்தவர்களாகவும், தலைமை நிர்வாகிகளாகவும் கொண்டு, 2007,ஆம் ஆண்டு மாவீரர் குடும்பங்களால் திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அம்மா அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் மாவீரர்நாள் நிகழ்வை நடத்துவதற்கான அங்கீகாரத்தை பிரித்தானிய அரசிடம்  பெற்றுக்கொண்டது.

அன்றுமுதல் தமிழ் அமைப்புக்கள், ஆலையங்கள், தமிழ் பாடசாலைகள், ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக நிலையங்கள், மற்றும் பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள், என அனைவரின் ஆதரவுடன், 2007,ஆம் ஆண்டு லண்டன் அலைக்ஸ் சாண்டர் மாளிகையிலும், 2008, 2009, 2010, exsel, மண்டபத்திலும், 2011, 2012,ஆண்டுகளின் காலப்பகுதிகளில் ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலிலும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினரால் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த விடையம்.

அன்பான எம்தமிழ் உறவுகளே!
 
எமது தேசியவிடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள்.  இது எமது தேசியநாள் இந்நாளை 1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பரிணாம வளர்ச்சியுடன் விடுதலை வீரரின் தியாகத்தினை உணர்வுபூர்வமாக எமது விடுதலை இயக்கத்தின் மரபுகளுடன் வணங்கின்றோம்..
 
எமது போராட்ட வரலாற்றின் பாதையில் ஏற்பட்ட இராணுவ நெருக்கடியும், சர்வதேச அழுத்தமும் எமது விடுதலைப்பயணத்தில் 2009 இல் ஏற்படுத்திய அசாதாரண சூழலின் பின்,புலம்பெயர் தேசங்களில் மட்டுமே மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சூழல் அமைந்தது. குறிப்பாக எமது விடுதலை இயக்கத்தின் தலைமையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தாயகத்தை விட்டு பல்வேறு வழிகளில் வெளியேறிய போராளிகள் விடுதலை அமைப்பின் கட்டமைப்புகளை மீள் ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடபட்டனர். அப்பணிகளில் ஒரு அங்கமாகவே மாவீரர் நாள் செயற்பாட்டினை அதன் புனிதம் பாதிக்கப்படாமல் புதிய சூழலுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டது. 

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிர்வாகரீதியாக ஏற்றுக்கொள்வதில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இவ்விடையத்தினை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருந்த 
நிலையில்  

2011 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் போராளிகளாகிய நாம் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தலை மேற்கொள்ள வேண்டிய அசாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டோம். இக்காலப்பகுதியில் அரசியல் முன்னெடுப்பிற்காக பிரித்தானியத்  தமிழர் ஒன்றியம் என்ற கிளை அமைப்பொன்றை நிறுவி தேசவிடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை விரைவுபடுத்தினோம்.இதன் ஒரு கட்டமாக செயற்பாட்டாளர்களுடன் உறவுகளைப் பேணுவதற்கும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவீரர் நாளில் சகல தரப்பினரையும் உள்வாங்கி வெளிப்படையான வகையில் மாவீரர் நாளினை நடாத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

எனவே 2007 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்தானியாவில் மாவீரர் நாளினை நிகழ்த்தி வந்த தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவத்தின் துணையுடன் 2011 ஆண்டு 8மாதம் பொதுக்குழுவினை  அமைத்து அக்குழுவினூடாக Excel மண்டபத்தினை முன்பதிவு செய்தோம். இதனூடாகவேனும் சகல தரப்பினரையும் உள்வாங்க முடியும் என எதிர்பார்த்தோம். 

ஆனால் எமது முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கான மாவீரர்நாள் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதேபோன்று 2012ஆம் ஆண்டும் எமது முயற்சிகள் தோல்வியே தழுவியதனால்  பிரித்தானியா உட்பட பலநாடுகளில் மாவீரர்நாள் இருவேறு நிர்வாக ஒழுங்குகளில் நடைபெற்றது. 

இவ்வாறு நிர்வாக ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பல்வேறு விரும்பத்தகாத சக்திகளுக்கு வழிசமைத்துக் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பது அவதானிக்கப்பட்டது. 

அவ்வகையில் இந்நிலை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு எதிர்பார்க்கின்றது. அதேபோன்று புலம்பெயர் தேசங்களில் செயற்படும் சில அமைப்புகளும்  எதிர்பார்க்கின்றனர்.

இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும்,சகல தேசிய உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்,பிரித்தானியா உட்பட சகல நாடுகளிலும் ஒரு நிர்வாக ஒழுங்கமைப்புக்குள் 2013ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள்..


இந்த புதிய முயற்சி எதிர்காலத்தில் சரியான சூழலை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றோம். எமது விடுதலை இயக்கத்தின் நிர்வாக ஒழுங்குபடுத்தலுக்கும், மீள் கட்டுமானப் பணிகளுக்கும் ஆதரவான செயற்பாடுகளுக்காக நாம் எடுத்த முயற்சிகளின் போது எம்மீது சுமத்தப்பட்ட அபாண்டப் பழிகளைக்கடந்து எமக்குப்பல வழிகளிலும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கிய எமது உயிரினும் மேலான உறவுகளே உங்கள் கரங்களை அன்புடன் பற்றிக்கொள்கின்றோம். 

விடுதலைப் பயணத்தின் புதிய நெருக்கடியின் போது நாம் எடுத்த முடிவிற்கு ஆதரவாக ஒத்துழைப்பு வழங்கியமையினால் நண்பர்கள், உறவுகளுடன் தனிப்பட்ட ரீதியாகக்கூட நீங்கள் முரண்பட்டுள்ளீர்கள்.  பல விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து நின்றீர்கள்.
பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இவையனைத்தும் உங்களின் விடுதலை உணர்வினைப் புலப்படுத்தியிருக்கிறது.

இதே வேளை ஊடக நண்பர்களையும், பல்வேறு கட்டமைப்பு நிர்வாகிகளையும், அவர்களது ஒத்துழைப்பினையும் அன்புடன் எண்ணிப்பார்க்கின்றோம்.
 எவ்வாறு எமது உண்மை நிலையினையும், உணர்வினையும் உய்த்தறிந்து ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதே உணர்வுடன் இந்த முடிவினையும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். 

தேசியத்தலைவரினால் வழிநடத்தப்பட்ட எமது விடுதலைப் போராட்டம் தொடரும். அதற்கு ஆதாரவலிமையாக, ஆணிவேராக இருப்பவர்கள் எமது மாவீரர்களே.
 
எனவே அவர்களை நினைவுபடுத்தும் புனிதநாள் எதிரியால் கூடக் கொச்சைப் படுத்தப்பட்டுவிடக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம். நான் பெரிது நீ பெரிது என வாழாமல் நாடு பெரிதென வாழ் எனும்  தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தேசியவிடுதலை எனும் புனிதப் பயணத்தில் எமக்குள் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து எத்தனை இடர்வரினும் எமது போராட்டத்தினை தொடர்வோம் என மாவீரத் தெய்வங்கள் மீது உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.
 
2013 ஆம் ஆண்டுடிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு இன்னும் குறுகிய நாட்களே இருப்பதனால் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினாகிய நாம் உங்களை நேரடியாகச் சந்திக்க முடியாமையால் இவ்வறிக்கையூடாக இவற்றைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக உங்களைச் சந்தித்து நிலமைகளைத் தெளிவுபடுத்துவோமென உறுதியளிக்கின்றோம்.
 
நன்றி 
                      
            'தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்'

பரிதியின் படுகொலையின் சூத்திரதாரிகள் இரண்டு நரிகளின் ஊளைச் சத்தம் ஒலிப்பதிவு இணைப்பு.

இந்த ஒலிப்பதிவை நன்றாக உற்று நோக்கிக் கேளுங்கள் பல்வேறு உண்மைகள் வெளிவரும். அன்றைய அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளரும், பரிதி அவர்களின் நெருங்கிய நண்பருமான இரும்பறை என அழைக்கப்படும் அரவிந்தன், என்பவரும் தாயகத்தில் நந்தவனத்தில் நாதாரிப் பயலாகத் திரிந்து, அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்களுடன் பழகி அவருக்கு சில கணணி சம்மந்தமான வேலைகளை செய்துகொடுத்துவிட்டு, அவரின் மின்னஞ்சல் முகவரியையும் கடவு சொல்லையும் திருடிய நப்பிக்கைத் துரோகி நந்தகோபன் என்பவனின் உரையாடல் பதிவு இது. 

தேசிய செயற்பாட்டாளர் பருதி அவர்களை திட்டமிட்டு சூடுக் கொன்றுவிட்டு உடனடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் மீதும், விடுதலைப் புலிகளின் தலைமை நிர்வாகமான தலைமைச் செயலகத்தின் மீதும் பழி சுமத்தியதொடு, வடுதளைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாக ஒழுங்குகள் சார்ந்து உயர்நிலைத் தளபதிகள், பொறுப்பாளர்கள் எவருடனும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அனைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும், ஒருங்கிணைப்புக் குழுக்களும், தன்னிச்சையாக கேணல் தர அதிகாரியாக அறிவித்ததில் இருந்தும் இவர்களின் நோக்கம் என்னவென்று அன்றே சம்மந்தப்பட்டவர்களுக்கு புரிந்திருக்கும்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் பல நாடுகளிலும் சிதறுண்டு கிடந்த போராளிகளை ஒன்றிணைத்து, ஓர் அணியில் இணைக்கும் ஒருங்கிணைப்பு வேலைகளை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்துடன் இணைந்து செயற்படவும், இரண்டு பிரிவுகளாக நடைபெற்றுவந்த மாவீரர்நாள் நிகழ்வை ஒரே நிகழ்வாக அனைவரையும் உள்வாங்கி செயற்பட பரிதி அவர்கள் முடிவெடுத்த நிலையில், இந்த ஒன்றிணைவை ஏற்க மறுத்த எட்டப்பர்களான நந்தகோபன், குட்டி, இரும்பறை, ரகுபதி, தனம், கமல், தமிழ் நெற் ஜெயச்சந்திரன், மகேஷ், உள்ளிட்ட குழுவினரின் திட்டமிடலில் பரிதி அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

அதுவும் பருதி அவர்களுடன் கூடவே இருந்த சில குள்ளநரிகளின் தகவல் வழங்கலின் ஊடாகவே பரிதி அவர்கள் அன்று சுட்டுக் கொள்ளப்பாட்டதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

சம்மந்தப்பட்டவர்களிடம் வழங்கி இவர்களின் குரல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எமது  இணையத்தில் இந்த ஒலிப்பதிவை இணைக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பா.நடேசன் அவர்களின் மின்னஞ்சலில் இருந்து பல இரகசியங்களை தெரிந்துகொண்டு ரோவிற்கும், சிங்கள புலனாய்வாளர்கள் சிலருக்கும் உடனுக்கு உடன் தகவல்களை வழங்கிவந்த நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இராணுவத்துடன் இனைதுநின்று பல போராளிகளை காட்டிக் கொடுத்ததுடன், மலேசியாவுக்கும் சிறிலங்கா புலனாய்வாளர்களால் விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல் அறியும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கே.பி அவர்களின் கைதின் பின்னணியிலும் இவர் இலங்கை  புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கும்பலுடன் இன்னும் பலர் செயற்பட்டு வருகின்றனர்,  அதில் எதுவும் அறியாமையின் காரணமாக பலர் இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அளவுக்கு அதிகமான மது போதையில் கைது செய்யப்பட்டு செய்யப்பட்டு இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட நடைபிராணி கோபி சிவன்தான்.

பிரித்தானியாவில் மது அருந்திய நிலையில், ஒருவகையான போதைவஸ்துவை உட்கொண்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது நண்பர் ஒருவருடன், இன்னும் ஒருவரை தாக்கும் நோக்கில் கையில் கோடரியுடன், கார் ஓடிய நிலையில் பிரித்தானியா காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இவரது சாரதிப் பத்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தான் இனி தமிழீழ விடுதலைப் போரை முன்னேடுக்கப்போகும் போராளிகளாம், உண்ணாவிரதம் என்ற போர்வையில் போர்வைக்குள் கிடந்தது போதைப் பொருள் பாவிப்பதும், நடைபயணம், ஈருருளி பயணம் என்ற போர்வையில் நாடு நாடாகச் சென்று விபச்சாரிகளுடன் கும்மாளமடிப்பதும் தான் இவர்கள் முன்னெடுக்கும் அடுத்தகட்டப் போராட்டம்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இவரின் பெயரில் வாங்கிக் கொடுத்த எரிபொருள் விற்பனை நிலையத்தை கையகப்படுத்தி, அது நட்டத்தில் போய் விட்டதாக கணக்குக் காட்டிவிட்டு, வேறு ஒரு எரிபொருள் விற்பனை நிலையத்தை இந்த சிவந்தன் கோபி தனது பெயரில் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அடுத்தவரை திருத்த முயற்சிக்கும் முன்னர் தன்னைத் தான் திருத்திக்கொள்ள வேண்டும். (05.02.2014)
இடம் பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதியும் அவரின் செயலரும் மாறுபட்ட கருத்துக்கள் (30.01.2014)
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது-சுவிஸ் தயா (26.10.2013)
காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஈராக்கிற்கு அடுத்த நாடாக சிறிலங்கா (22.10.2013)
ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் ஐயா உயர்திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! (31.08.2013)
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை!- சி.வி.விக்னேஸ்வரன் (31.08.2013)
ஈழத்தின் தமிழின வரலாறும்! இலங்கைச் சிங்கள மகாவம்சமும்!புலத்தமிழர் செயற்பாடுகளும்!-தயா (10.07.2013)
இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை!-பிரித்தானியா (09.07.2013)
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி (28.05.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை! (17.05.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan