.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை!-பிரித்தானியா
Tuesday, 09.07.2013, 08:29pm (GMT)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், மற்றும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பில்லை. அங்கு நடைமுறையில் உள்ள மனித உரிமைகள் குறித்து செயற்பாடுகளில் திருப்தி அடைய முடியாது உள்ளது என பிரித்தானிய குடிவரவு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மனித உரிமைகளைப் பேணுவதில் இன்னும் அதிகமாக சட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டிய நிலைமைகள் உள்ளது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என இலங்கை அரசாங்கத்தினால் சந்தேகிக்கப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படுவோர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகக் கூடிய அபாயங்களை எதிர்நோக்குகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது குடும்ப உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர், இலங்கையில் பல்வேறு அச்சுறுத்தல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என பல ஆதாரங்களுடன் பிரித்தானிய குடிவரவு நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி (28.05.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை! (17.05.2013)
சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?! (03.03.2013)
புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்து விட்டோமா…? (25.02.2013)
ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தி பங்கு பிரிப்பும் படுகொலையும்! இறுதி பாகம் (27.01.2013)
ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய பிரித்தானியாவும், சுவிசும்? (06.01.2013)
ஈழ விடுதலைக்கான வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது-சுவிசில் இருந்து தயா (06.01.2013)
பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்! (05.01.2013)
வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது!சுவிசில் இருந்து தயா (05.01.2013)
சமகால யதார்தமும் எதிர்கால சந்தற்பங்களும்! - சுவிசில் இருந்து தயா (29.12.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan