.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
ஈழத்தின் தமிழின வரலாறும்! இலங்கைச் சிங்கள மகாவம்சமும்!புலத்தமிழர் செயற்பாடுகளும்!-தயா
Wednesday, 10.07.2013, 04:19pm (GMT)

ஈழத்தின் தமிழின வரலாற்றிற்கு எதிராக இலங்கைச் சிங்கள மகாவம்சம் எப்போது உருவாக ஆரம்பித்ததோ, அப்போதே தமது கடமையை புரிந்து கொள்ள பாரத தேசம் மறந்தது, அதுவே ஈழத்தின் வரலாற்றின் தோல்வியாக அமைந்தது. இந்தியாவில் தமிழர்களும், தமிழ் மொழியும் இருந்தால் மட்டும் போதாது, அவர்களது புரிதல்கள் ஈழத்தில் ஈழத் தமிழினத்தின் எதிர்பார்ப்பும், அதற்கும் அப்பாற்பட்ட திட்டமிடலாக தமிழினம் உலகத்தால் ஒடுகப்பட்ட காலம் தான் ஈழத் தமிழினத்தின் தோல்விக்கான காலம்.

ஆனால் அத்தனை நகர்வையும் முறியடித்து இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் தமது உரிமைக்காக போராட ஆரம்பித்ததோ, அதனை ஒட்டுமொத்தத் தமிழினமும் உணராமல், தம்மையும் போராட்டத்தையும் என்று வலுப்படுத்த தவறினார்களோ அதுவே ஈழத்தின் வரலாற்று தோல்வி என்று மட்டும் கூறிவிட முடியாது.

காரணம் காலம் காலமாக போராடிய ஈழத்தமிழினம், வரலாற்று ரீதியாக போராடிய காலம் என்பதனை முள்ளிவாய்கால் அவலம் உலகத்திற்கு உணர்த்தியும் சிங்கள தேசம் புரிந்து கொள்ளவில்லை என்று மட்டும் பேசுவதால் எந்தப்பலனும் இல்லை. சர்வதேசத்தால் இதுவரை எந்த அங்கீகாரமும் ஈழத்தமிழினத்திற்கு வழங்கப்படவில்லை, தற்பாதுகாப்பின் அடிப்படையில் உருவாக்கட்ட போராடத்தின் இலக்கின் தீர்வை சர்வதேசம் சரியாக உணர்ந்துகொள்ளத் தவறியது.

நம்பாதவர்களுடன் இனியும் பேசிப்பயனில்லை என விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தை உலகத் தமிழ் மக்களிடமும், சர்வதேச நாடுகளிடமும் ஒப்படைத்திருப்பது ஏதிர்காலம் ஒன்று ஈழத்தமிழினத்திற்கு எப்படி அமைக்க முடியும் என்பதனை எதிர்பார்த்தே. ஆனாலும் இலங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பையும், நில ஆக்கிரமிப்பையும், தமிழினத்தின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை அழித்தொழிப்பது வரை எல்லை மீறிச் செல்லும் அரச பயங்கரவாதம் என்பதனை, இந்த உலகம் புரிந்துகொள்ள முடியாதமைக்கு இந்தியா ஒரு முக்கிய காரணமாக இன்றும் இருந்து வருகிறது என்பது எவ்வளவு உண்மையோ. அந்த அளவுக்கு இந்தியாவை கையாண்ட இலங்கை அரசாங்கத்தால் இந்தியா முன்வைக்கும் எந்த நகர்வையும் இலங்கை ஏற்றுகொண்டு செயல்பட தயாராக இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை.

சர்வதேசத்திடம் பாதுகாப்பை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளை பயங்கரவாதம் ஆக்கிய இந்தியாவை, இனறும் ஈழத்தமிழினம் மதிப்பது எமது சுதந்திரத்தை பெறும் வரை நாம் எமது செயற்பாடுகளை சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே.

இந்த உலக அரசியல் சமூகம் எமது அரசியல் வழியிலான உரிமைப் போராட்டத்தையும் ஏற்க மறுக்கலாம், ஆனால் இலங்கை அரசாங்கத்தை சாதாரணமாக சரிப்படுத்த முடியாது, அவர்களால் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்ட இனம் தமது உரிமைக்காக எதிர்த்து போராடியவர்களையே பயங்கரவாதம் ஆக்கிய அனைத்துலக சமூகம், எதிர்காலத்தில் தமிழர்களுக்கான உரிய தீர்வை தேடவேண்டியதும் அவர்களது கடமை ஆகும்.

காரணம் சிங்கள தேசத்திற்கு தெரியும் ஈழத்தின் வரலாற்றை இனி அழிக்க முடியாது என்பதனை, ஆனால் அதனை விட்டுக் கொடுக்கும் பக்குவம் அவர்களிடம் இல்லை. அதனால்தான் அவர்கள் எதிர்கால யதார்தங்களைப் பொருட்படுத்தாமல் தம்மைத்தாம் அழிக்கும் காலத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். என்பதனை தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா உட்பட்ட சர்வதேசத்தின் தவறான புரிதல், ஈழத்தமிழினத்தை அழித்து இலங்கை அரசாங்கத்தை வளர்த்து, எதிர்காலத்தினது யதார்தங்கள் மாறுவதற்கு காரணம் என்பதனையும், தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகளாக, வன்முறையாக மட்டும் சித்தரித்து தடை செய்தவர்களும், அதேவேளை புலத்திலும் மக்கள் கட்டமைப்பாக செயற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளில் கிளைகள், குழுக்கள் என்றும் பெயரில் இருந்துகொண்டு தேசத்தின் அழிவுப்பாதையை உருவாக்கிக் கொண்டவர்களது செயல்பாடுகளும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் போராளிகளை புறம்தள்ளி பல குழப்பங்களைத் தோற்றுவித்தவர்களின் செயற்பாடுகள் போராளிகளுக்கும் பணம் கொடுத்த மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஈழத்தின் வரலாற்றிற்கே எதிரானது.

காரணம் அத்தனை உயிர்தியாகங்களையும் கொடுத்து எமது உரிமைக்காக போராடியவர்களை பல அமைப்புக்களாகவும், பலகட்சிகளாகவும் பிரித்து தனித் தனியாக விலகி நின்று ஒரு இனத்தின் விடுதலையை பெற முடியாது.

அதனால் சர்வதேச அரசியலின் புரிதல் மட்டுமல்லாது உலகத்தமிழினமும் அதனை சரியாக புரிந்து கொள்ளாமையும்தான் இத்தனைக்கும் காரணம். நாம் தமிழினம், எமது ஒற்றுமை என்றும் மற்றவர்களால் தீர்மானிகப்பட முடியாது. இனறு சர்வதேச ரீதியாக வளர்கப்பட்ட தமிழினம் இனியாவது ஈழத்தமிழினத்தின் விடுதலையையும் ஈழத்தின் வரலாற்றையும் மதித்து செயல்பட வேண்டும!

நாம் மதவாதிகளாகவோ, இனவாதிகளாகவோ அல்லாமல், மனிதர்களாக எம்மை அடையாளம் காட்ட வேண்டுமானால், நாம் எமது கலாச்சாரத்தைப் பேண வேண்டும். வரலாறுகளை அழிந்து போக விட முடியாது. எமது மக்களுக்குள் எமது கலாச்சாரம் வளர்கப்பட வேண்டும். சத்தியமும் தர்மமும் தோற்க்காமல் நாம் எமது வரலாற்றை அடையாளம் காணப்பட வேண்டும். சிங்கள குடி யேற்றங்கள் புத்தர் சிலைகள் கூட எமது வரலாற்றை அழிக்க முடியாது .

நாம் எம்மை உணர்ந்து கொண்டால் அதுவே நாம் என்றும் உச்சரிக்கும் தாய் மண்ணின் அடையாளமாக, தாராக மந்திர ஆகவேண்டும்.

இன்று எமது விடுதலைப் போராடத்தை உண்மை வழிகளில் நிரூபிக்க சந்தற்பம் கிடைத்திறுக்கின்றது என்றால் எமது மண்ணின் மகிமை என்பதனை ஒட்டுமொத்த தமிழினமும் உணர வேண்டும். அப்போது தான் புரியும் முள்ளிவாய்காலின் வெற்றி தோல்வியினது உண்மையான அடையாளம் என்னவென்று எதிர்காலம் பற்றி, அதனால் உலகத் தமிழினம் என்பதனை நிரூபிப்பதில்தான் ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் உள்ளது.

நாம் எமக்குள் உள்ள முரண்பாடுகளையும், குழப்பங்களையும், புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க முற்படாதவரை, சிறு சிறு பிரச்சனைகளை மட்டுமல்ல, எமது தேசத்தில் முளை விடும் சில பிரச்சனைகளையும் எம்மால் அடையாளம் காண முடியாது. அதுபோல் மாவீரர்களின் கனவையும் அடையமுடியாமல் போகும், அதனால் உலகம் உயிர்களுக்காக அதில் நாம் உண்மைக்காக போராட வேண்டும்.

இவை மக்களது கருதாக
-சுவிசில் இருந்து தயாRating (Votes: )   
    Comments (1)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை!-பிரித்தானியா (09.07.2013)
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி (28.05.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை! (17.05.2013)
சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?! (03.03.2013)
புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்து விட்டோமா…? (25.02.2013)
ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தி பங்கு பிரிப்பும் படுகொலையும்! இறுதி பாகம் (27.01.2013)
ஒன்றுபட முனைந்த பிரான்சும் அதை தடுத்து நிறுத்தப் போராடிய பிரித்தானியாவும், சுவிசும்? (06.01.2013)
ஈழ விடுதலைக்கான வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது-சுவிசில் இருந்து தயா (06.01.2013)
பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்! (05.01.2013)
வரலாற்றுக்கடமை உலகத்தமிழர்கள் யாவருக்கும் உள்ளது!சுவிசில் இருந்து தயா (05.01.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan