.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
இடம் பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதியும் அவரின் செயலரும் மாறுபட்ட கருத்துக்கள்
Thursday, 30.01.2014, 10:57am (GMT)

இலங்கையில் இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பில், ஜனாதிபதியும், ஜனாதிபதியின் செயலாளரும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் அகதிகள் என்று எவருமே இல்லை என்றும், இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர் எனவும், எஞ்சிய 50 ஆயிரம் பேர் மீளக் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர் என்றும், சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவில் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாகவும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க உயர் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் ஏ.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே லலித் வீரதுங்க மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். இறுதிக் கட்டப் போரில் இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரை இலங்கை அரசு மீளக்குடியமர்த்தியுள்ளது. இலங்கை அரசின் அடைவுகளில் இது முக்கியமானது என்று லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி, வவுனியா செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள், அவசர அவசரமாகக் கேப்பாபிலவில், அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப்படாமல் மீளக்குடியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர் வவுனியாவில் வைத்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, இலங்கையில் அகதிகள் என்று எவருமே இல்லை என்றும், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் கூரியிருந்தார்.

ஆனால் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் 23 வருடங்களாக மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளமை தொடர்பில் அவர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கையில் இன்னமும் 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படவேண்டியுள்ளனர் என்று ஜனாதிபதியின் செயலர் அமெரிக்காவில் கூரியிருக்கிறார்.

விசாரணைகள்

காணமற்போனவர்கள் தொடர்பில் 13 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் தலைமையிலான வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டிருப்பது அரசியல் பரவலாக்கத்துக்கான ஆரம்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக் கடந்த 18 மாதங்களாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதனைச் செயற்படுத்துவதற்கு இன்னமும் காலம் வேண்டும். எனவும், இதை தவறாக நடைமுறைப்படுத்தினால் மீண்டும் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லலித் வீரதுங்க அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்து வருகின்ற நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கைக் எதிராக மூன்றாவது பிரேரணை சமர்பிக்கப்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணையில் போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை விடுக்கப்படுமா என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், காணி அபகரிப்பு, மதங்களுக்கு எதிரான ஊக்கப்படுத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாக்கப்படாமை போன்றவற்றின் பிரதிபலிப்புக்களை உள்ளடக்கியதாகவே இந்தப் பிரேரணை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது-சுவிஸ் தயா (26.10.2013)
காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஈராக்கிற்கு அடுத்த நாடாக சிறிலங்கா (22.10.2013)
ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் ஐயா உயர்திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! (31.08.2013)
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை!- சி.வி.விக்னேஸ்வரன் (31.08.2013)
ஈழத்தின் தமிழின வரலாறும்! இலங்கைச் சிங்கள மகாவம்சமும்!புலத்தமிழர் செயற்பாடுகளும்!-தயா (10.07.2013)
இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை!-பிரித்தானியா (09.07.2013)
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி (28.05.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை! (17.05.2013)
சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?! (03.03.2013)
புலம்பெயர் வாழ்வில் எங்கள் மனிதங்களைத் தொலைத்து விட்டோமா…? (25.02.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan