.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
அடுத்தவரை திருத்த முயற்சிக்கும் முன்னர் தன்னைத் தான் திருத்திக்கொள்ள வேண்டும்.
Wednesday, 05.02.2014, 09:24pm (GMT)

தமிழர்களும் தன் மானமும் தரணி எங்கும் வியாபித்துள்ளது.

எங்கே வெற்றி எங்கே தோல்வி என ஆராயும் புலம் பெயர் தமிழ் தலமைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் தமிழ் மக்களை பிரித்துவிட எடுக்கும் முயற்சியானது யாருக்காக? எதற்காக? எதை செய்கின்றோம்! என்பதும், அரசாங்கம் இதுவரை காலமும் போல் தற்போது செயல்பட முடியாத நிலையில் திக்குமுக்காடிப் போயுள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும், அவர்களுக்கு ஒத்து ஊதுவது போல் சில இணையங்களும் சிங்களத்திற்கு நம்பிக்கை ஊட்டி, அரசாங்கத்தை ஊக்கப்படுத்துகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கான நகர்வு பிழை எனக் கூற எந்த அமைப்பிற்கும் மட்டுமல்ல, தமிழக அரசியல் தலைவர்களுக்கு கூட தகுதி இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சகல தரப்பையும் மதித்து செயல்படுவது இவர்கள் யாருக்கும் புரியாதது போல் அறிக்கை விடும் புலம் பெயர் அமைப்புக்கள், சர்வதேச நகர்வு அத்தனையும் தாம் செய்வதாகவே எண்ணுகின்றார்கள், யதார்தம் ஒரு இன விடுதலைக்கான காரணங்களையும் தேடல்களையும் கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக மக்கள் செயல்படுகின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களை யார் காப்பார்றுவார்கள் என கேள்விகளோடு அறிக்கை விடும் ஊடகங்கள் இது வரை காலமும் புலம் பெயர் மக்களையும், எமது விடுதலைப்போராடத்தையும் தவறாக கையாண்டு சுயநலன் தேடிய அமைப்புக்கள், மற்றும் ஊடகங்கள் தம்மை இனியாவது மாற்ற வேண்டும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயக விடுதலைக்காக எதனை எதிர்பார்கின்றதோ, அதனை மட்டும் இவர்கள் செய்தால் அதுவே இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஈழத் தமிழினம் விடுதலை பெறுவதற்கான முக்கியமான விடயங்களில் ஒன்றாக அமையும் .

விடுதலைப் புலிகள் அமைப்பானது, தம்மை வளர்த்துக்கொண்டு தான் அடுத்தவர்களுக்கு தமது கோரிக்கைளை முன்வைத்தார்கள் ஆனால் எமது தாயக மக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறி ஆக்குவதற்கு புலம் பெயர் அமைப்புக்கள் இப்படி கேவலமாக செயல்படும் என யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது.

மக்களது கடமை எதிர்பார்ப்புதான் வரலாற்றினது சந்தற்பம், அதற்கான நகர்வு உண்மை வழிகளில் மட்டும்தான் அடையாளம் காண முடியும். அதனை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்களது செயல்பாட்டுத்திறன் ஒரு முதல் அமைச்சரை தெரிவாக்கி உள்ளது. 

அது கருணா போன்றவர்களுக்கு மேலும் துன்பத்தைக் கொடுக்கலாமே தவிர, தமிழ் தேசியத்திற்கும் கடந்த கால உயிர்த் தியாகங்களையும் நெஞ்சில் சுமந்து தினமும் விடுதலைக்காக ஏங்கும்மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும் என்பதே மக்களது நம்பிக்கை ஆகும்.

அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு தரப்புக்கள் ஊடாகவும் சர்வதேச நாடுகளிடம் வழங்கியுள்ள சாட்சியங்கள் உளிட்ட வாக்குமூலங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தாயக பிரஜைகள் குழு ( சிவில் அமைப்புக்கள்) மற்றும் புலம்பெயர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலரின் ஆக்கபுர்வமான செயற்பாடுகளால் ஜெனிவாவில் தமிழர்களுக்கு வெற்றி நிட்சயம் என்பதனை வேத வாக்காக நம்பலாமே தவிர, புலம் பெயர் அமைப்புக்களது சுயநலவாதம் கொண்ட சத்தியத்தையும், தர்மத்தையும் மதித்து அல்ல என்பதே வரலாற்றுப் பதிவாகும்.

இவை மக்களது கருத்தாக என்றும் ஒலிக்கும்.
Rating (Votes: )   
    Comments (1)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இடம் பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதியும் அவரின் செயலரும் மாறுபட்ட கருத்துக்கள் (30.01.2014)
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது-சுவிஸ் தயா (26.10.2013)
காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஈராக்கிற்கு அடுத்த நாடாக சிறிலங்கா (22.10.2013)
ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் ஐயா உயர்திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! (31.08.2013)
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை!- சி.வி.விக்னேஸ்வரன் (31.08.2013)
ஈழத்தின் தமிழின வரலாறும்! இலங்கைச் சிங்கள மகாவம்சமும்!புலத்தமிழர் செயற்பாடுகளும்!-தயா (10.07.2013)
இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை!-பிரித்தானியா (09.07.2013)
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி (28.05.2013)
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை! (17.05.2013)
சிங்களத்தின் அதிகாரம் ஏதுமற்ற தீர்வுப் பிச்சையை ஏந்தப்போகிறோமா?! (03.03.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan