.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
ஈழம்5 செய்தி அலசல்கள்
 
தூத்துக்குடிக்கு பொங்கியது ஏன் முள்ளிவாய்க்காலுக்கு பொங்கவில்லை???- செம்மலை
Tuesday, 05.06.2018, 08:41pm (GMT)

தமிழர்களக இனமான உணர்வோடு பொங்கி எழுந்து உரிமைக்காகவும், அடக்கு முறைக்கு எதிராகவும், கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும், போராடுவதும் காலத்தின் தேவையாகி விட்டது. அந்த வகையில் ஈழத் தமிழர்களுக்காக தமிழ் நாட்டுத் தமிழரும், தமிழ் நாட்டுத் தமிழருக்காக, ஈழத் தமிழரும் என ஆதரவாக குரல் கொடுப்பதும் போராடுவதும் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டது. 

ஏன் உலகமெங்குமே எங்கு தமிழர்கள் தாக்கப்பட்டாலும் அதற்கெதிரான போராட்டங்கள் நடந்துவருவதை அவதானிக்க முடிகிறது. இது ஒருவருக்கு ஒருவர் செய்யும் நன்றிக்கடன் என சிலர் கருதுவது தவறானது. உண்மையிலேயே அழிவு, இழப்பு மற்றும் பாதிப்புக்களின் வலியை உணர்ந்தவர்களாக உணர்வால் உந்தப்பட்டே இன்று இவ்வாறான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. 

ஆனால் இதை சிலர் தவறாக பயன்படுத்துவதும். தவறான வளிகாட்டிகளாக நிற்பதாலும் எமது போராட்டங்கள் வலுவிழந்து கேலிக்குரியவையாக மாற்றம் பெறுவதையும் நாம் காண முடிகிறது. 

அமைப்புகள் தங்கள் அரசியல் இலாபம் கருதியும், சில தனி நபர்கள் தங்களின் தனிப்பட்ட வெறுப்புக்களுக்கான பழிவாங்கும் களமாகவும், இதை பாவிக்கின்றமை வேதனை அளிப்பதோடு கண்டிக்கத்தக்க விடயமாகவும் உள்ளது.

கடந்த 03.06.2018, ஞாயிறு அன்று மாலை நாடுகடந்த அரசின் தன்மானத் தமிழர் படை எனும் பிரிவினரால் ரஜனியின் காலா திரைப்படத்திற்கு எதிராக, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பெரும் எடுப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. 

அதில் தமிழீழ தேசியக் கொடியை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தியுள்ளனர் இந்தப் படையினர். இனி வரும் காலங்களில் உங்கள் சுயநல செயல்பாடுகளுக்கு தமிழீழ தேசிய அடையாளங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.  இப்படியான இழிவு செயலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. 

கூட்டம் நடத்தியது தவறு என்றோ, அல்லது காலா திரைப்படத்தைப் புறக்கணிப்பதும், தடுப்பதும் தவறு என்றோ நான் கூற  வரவில்லை, காலா திரைப்படம் நிச்சயம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு  இல்லை. அதை அனைவரும் இணைந்து புறக்கணிக்கலாம் அது வேறு விடையம். 

இங்கு பிரச்சனை என்னவென்றால் தூத்துக்குடியில் போராடிய மக்களை அவமதித்துப் பேசினார் என்ற காரணத்தால் ரஜனியின் காலா திரைப்படத்தை புறக்கணிக்கப் பொங்கி எழுந்த இந்த தன்மானத் தமிழர் படைக்கு, முள்ளிவாய்க்கால் இனவழிப்பையும், இசைப்பிரியாவையும், எங்கள் விடுதலைப் போரையும், ஏன் ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களின் கலாச்சாரத்தையே இழிவுபடுத்தி எடுக்கப்படட 18.05.2009 எனும் முள்ளிவாய்க்கால் திரைப்படத்தை புறக்கணிக்க இந்த தன்மானத் தமிழர் படைக்கு, இனமானம் இல்லாமல் போனது ஏன்??

அண்மையில் எமது அன்பிற்குரிய சகோதரி, மாவீரர் இசைப்பிரியா அவர்கள் பற்றிய படம் வெளிவர ஏற்பாடுகளை சிலர் முன்னெடுத்த, போது அதனை தடுக்கவேண்டும் எனவும், மீறி திரையிடப்பட்டால் எம்மவர்கள் யாரும் பார்க்கப் போகக்கூடாது எனவும், அதற்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றும், சமூக வலைத் தளங்கள் ஊடாகவும், மற்றும் பல வளிகளிலும் அறிவிக்கப்பட்டும், வேண்டுகோளாகவும் அறை கூவால் விடுக்கப்பட்ட செய்திகள் வெளிவந்திருந்தது. 

ஆனால் அவன் எதிர்த்தால் நான் ஓட வைப்பேன் எனும் பாணியில், சில நபரும், ஏதோ சிங்கள அரசின்  போர்க்குற்றத்தை வெளிக்காட்ட தாங்களே காசு போட்டு கஸ்டப்பட்டு அப்படத்தை எடுத்தது போலும், ஒரு அமைப்பை சார்ந்தவர்கள் பொங்கி எழுந்து படத்தை ஓடவைத்தது மிக மிக கீழ்த்தனமான இழிவு செயலாகும்.

தன்மான உரிமைக்காக உயிரையும் விடும் தமிழினத்தின் மானத்தை கூறு போட்டு, அதில் ஆதாயம் தேடி உள்ளனர் இந்த ஈனப்பிறவிகள். மிகவும் கேவலமாக, கொடும் சித்திரவதைகளின் பின் சீரழிக்கப்பட்டு கதறக் கதறக் கொன்றழிக்கப்பட்ட எம் இன மங்கையின் மானத்தை மீண்டும் பார்த்து ரசித்துள்ளது இந்த ஈனர்கள் கூட்டம். 

சொல்லெனா துயர்களையும், இழப்புக்களைதும் சந்தித்த ஈழத் தமிழரின் அவல வாழ்வையும், வீரத்தையும், சிங்கள இனவெறி அரசின் கொடிய ஆட்சியையும் அவர்கள் அரங்கேற்றிய தமிழின அழிப்பையும், சர்வ தேசங்களுக்கு ஆவணமாக காட்டவேண்டியது இன்றைய காலத்தின் தேவை தான். அதை நான் மறுக்கவில்லை. 

அது தமிழ் அல்லாது ஆங்கிலத்திலும் பிரஞ்ச், டொச், நோர்வீஜியன், டெனிஸ் என பல்வேறு  மொழிகளில் வெளி வரவேண்டும். அம் மக்கள் அதைப் பார்த்து தமிழின அழிப்பின் உண்மை நிலையையும், சிங்கள் ஆட்சியாளர்களின் கொடுங்கோல் ஆட்சியையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தால் அதுவே சர்வதேச அரங்கில் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு குரலாக உருவெடுக்கும். அதுவே எமக்கான விடுதலையையும், இழந்த எமது உரிமைகளையும் மீட்டுத்தரும். 

அதை விடுத்து சிதைக்கப்பட்ட எமது உறவின் கதையை படமாக்கி உள்ளே அவள் எப்படி சிதைக்கப்பட்டிருப்பாள் எனும் தங்கள் கற்பனைகளை காணச் சென்ற இச் சிறுமைக் கூட்டத்தை என்ன வென்று சொல்லுவது. இதில் வேடிக்கையானதும், வேதனையானதும் என்னவெனில், ஈழவிடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து போராடிய சில பெண்களும், போராடியவர்களின் ஒரு சில மனைவி மாரும் சென்று பார்த்துவிட்டு வந்திருப்பது தான். 

இதே குழு இப்போது “காலா” படத்திற்கு தடை போடச்சொல்லி ஓடித்திரியுது. அதுக்காக அமைக்கப்பெற்ற குழுக்களின் பெயர்கள் “தன்மானத் தமிழர் படை” “ஐரோப்பிய ஈழத் தமிழர் சமூகம்” 

இசைப்பிரியாவின் படத்திற்கு வராத தன்மானம் ரஜனியின் படத்திற்கு வந்தது எப்படி? ஏன்? பின்னணி என்ன???? இரண்டிற்குமே அடிப்படைப் பின்னணி பணமா எனும் சந்தேகம் எழுகிறது????

-செம்மலை.செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
வடக்கில் ஆட்சியைப் பிடிக்க தமிழ் கட்சிகள் போட்டி: (20.02.2018)
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி அணிதிள்வோம்! (16.02.2018)
இனவாதத்திற்கு தற்போதைய (27.12.2014)
அடுத்தவரை திருத்த முயற்சிக்கும் முன்னர் தன்னைத் தான் திருத்திக்கொள்ள வேண்டும். (05.02.2014)
இடம் பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதியும் அவரின் செயலரும் மாறுபட்ட கருத்துக்கள் (30.01.2014)
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது-சுவிஸ் தயா (26.10.2013)
காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஈராக்கிற்கு அடுத்த நாடாக சிறிலங்கா (22.10.2013)
ஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் ஐயா உயர்திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! (31.08.2013)
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை!- சி.வி.விக்னேஸ்வரன் (31.08.2013)
ஈழத்தின் தமிழின வரலாறும்! இலங்கைச் சிங்கள மகாவம்சமும்!புலத்தமிழர் செயற்பாடுகளும்!-தயா (10.07.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan