.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள்!
Wednesday, 07.03.2018, 02:42pm (GMT)

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது.

கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை மூட்டம் காணப்படுகிறது.

வன்முறைக் கும்பலைக் கலைக்க, சிறிலங்கா இராணுவத்தினர் பொல்லுகளுடன் துரத்திச் செல்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களை அமைதியாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம், முஸ்லிம் தலைவர்கள் கோரி வருகின்றனர்.

இதற்கிடையே கண்டி மாவட்டத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு விரைந்து சென்றுள்ளார். அவர் அமைதியை ஏற்படுத்துவது குறித்து மதத்தலைவர்கள், ஆயுதப்படையினருடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். சிறிலங்கா காவல்துறையினர் அனைவரினதும் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
வே. பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது! முஸ்லிம் மக்கள் (07.03.2018)
ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணத்தின் பிரதான சந்திப்புகள்! மனுக்களும் கையளிப்பு! (06.03.2018)
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அரசின் செயற்பாடுகள் இல்லை-இரா சம்பந்தன் (06.03.2018)
அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம்! (06.03.2018)
யாழ்ப்பாணம் கோட்டையைக் தம்மிடம் வழங்குமாறு இராணுவம் கோரிக்கை! (04.03.2018)
சிரியா படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! (03.03.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை கனடிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!-ஹரி (02.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan