.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
இலங்கையில் சிறுபான்மை இனத்தின் நிலை என்ன என்பதை வன்செயல்கள் காட்டுகின்றன-சுரேஸ்
Thursday, 08.03.2018, 09:45am (GMT)

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நிலை என்ன என்பதை கண்டி- திகன வன்செயல் தெளிவாக காட்டியிருக்கும் நிலையில், இந்த வன்செயல்களை காரணம் காட்டி அவசரகால தடைச்சட்டத்தை அமுல் செய்திருப்பது தொடர்பாக தமிழ்த் தலமைகள், மற்றும் இஸ்லாமிய தலமைகள் விழிப்பாக இருக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்தினர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்றதை போன்று மைத்திரிபால சிறிசேனா ஆட்சியிலும் முஸ்லிம் மக்கள் மீதான வன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. 

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் உரையாற்றும் போது, வெளியில் இருந்து வந்தவர்களே மக்களுடைய சொத்துக்களை அழித்து வன்செயலை தூண்டக்  காரணமானவர்கள் எனவும், இந்த வன்செயலுக்காக சிங்கள மக்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னி ப்பு கோரவேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அவ்வாறெனில் இந்த அரசாங்கத்தால் இவ்வாறான வன்செயல்களை கட்டுப்படுத்த இயலாமைக்கான காரணம் என்ன? இன்றும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்கள் இந்த நாட்டில் மிக சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடமாடுகிறார்கள், ஊடகங்களை சந்திக்கிறார்கள், கடந்த சில தினங்களுக்குள் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகிறார்! கொன்றால், கொல்வோம் என. 

அந்தளவுக்கு அவர்களுடைய செயற்பாடுகளும், கருத்துக்களும் அமையும் நிலையில்இவ்வாறானவர்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி என்ன? அதேபோல் இலங்கையில் பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புலனாய்வு அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

அவர்களால் இவ்வாறான பாரிய இனமோதல்கள் தொடர்பாக எதிர்வுகூற முடிய hமல் உள்ளதா? இதற்கான பதிலை ஜனாதிபதி, பிரதமர் மக்களுக்கு கூறவேண்டும். மேலும் அரசாங்கம்

இந்த விடயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் பிடிக்குள் இல்லையா? எது எவ்வாறாயினும் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நிலையை இந்த வன்செயல் தெளிவாக காட்டியிருக்கின்றது. அதே போல் இந்த வன்செயல்களை காரணம் காட்டி மீண்டும் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றது. 

இவ்வாறே ஆரம்பத்தில் அவசரகால சட்டம் கொண்டு வரப்பட்ட போது 6 மாதங்களுக்கு என கூறப்பட்டது. ஆனால் அது பின்னர் 30 வருடங்கள் நீடித்தது அதன் வலியை, வேதனையை தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்தவர்கள். எனவே தமிழ் தலைவர்கள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் இந்த அவசரகால சட்டம் தொடர்பாக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த அரசாங்கம் அரசியல் ஸ்திர தன்மையற்றதாக இருக்கும் அதேவேளை வன்செயல்கள் வடமாகாணத்தில் இல்லை. எனவே வட மாகாணத்திற்கும் சேர்த்து அவசரகால சட்டம் அமுல் செய்யப்பட்டிருப்பதன் பின்னணி தொடர்பாக தமிழ் தலமைகள் அவதானமாக இருக்கவேண்டும். வெறுமனே அரசுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என கூறிக் கொண்டு தமிழ் மக்களை மீண்டும் ஒரு பொறிக்குள் தள்ளிவிட கூடாது. 

அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எவ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்செயல்களை கண்டிக்கிறது. மேலும் இந்த அரசாங்கம் சிறுபான்மை தேசிய இனங்களின் பாதுகாப்பு தொடர்பாக சரியான நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்  (08.03.2018)
கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள்! (07.03.2018)
வே. பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது! முஸ்லிம் மக்கள் (07.03.2018)
ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணத்தின் பிரதான சந்திப்புகள்! மனுக்களும் கையளிப்பு! (06.03.2018)
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அரசின் செயற்பாடுகள் இல்லை-இரா சம்பந்தன் (06.03.2018)
அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம்! (06.03.2018)
யாழ்ப்பாணம் கோட்டையைக் தம்மிடம் வழங்குமாறு இராணுவம் கோரிக்கை! (04.03.2018)
சிரியா படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! (03.03.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை கனடிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!-ஹரி (02.03.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan