.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் சம்மந்தப்பட நாடுகள் கடுயைமான நிலை எடுக்கவேண்டும்!
Monday, 12.03.2018, 05:57pm (GMT)

இதுவரை காலமும் ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கிய நாடுகள், சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் கடுயைமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என mr.Stephane J Rapp அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் mr.Stephane J Rapp அவர்கள் கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப் போனது எனும் தொனிபொருளில் இடம்பெற்றிருந்த இப்பக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

நா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் திரு.மாணிக்கவாசகர் அவர்கள்  நிகழ்வினை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

இதில் சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய mr.Richard J Rogers அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

தாமதிக்கும் தந்திரத்தனை சிறிலங்கா கடைப்பிடித்து அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை தட்டிக்கழிக்கின்றது என சிறிலங்கா மீது கடுயைமான விமர்சனத்தை முன்வைத்த mr.Stephane J Rapp, அவர்கள் ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் கடுயைமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஒபமாவின் நிர்வாகத்தில் போர் குற்ற விவகாரங்களுக்கான தூதரகாக இருந்த mr.Stephane J Rapp, அவர்கள் பல தடவைகள் சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழர் தரப்பு ஏற்பாடு செய்திருந்த இப்பக்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பொறி முறைக்கு குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.

இந்நிகழ்வுக்கு தமிழர் இயக்கம், அனைத்துலக ஈழத் தமிழரவை, மற்றும் பசுமைத்தாயகம் ஆகிய அமைப்புக்கள் உறுதுணை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

செய்திப் பதிவு- தி.தமிழரசன்.

Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது அறிக்கை இன்று வருக்கிறது! (12.03.2018)
முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளைக் கண்டிக்கிறோம்!- நாடுகடந்த தழிழீழ அரசு  (09.03.2018)
இலங்கையில் சிறுபான்மை இனத்தின் நிலை என்ன என்பதை வன்செயல்கள் காட்டுகின்றன-சுரேஸ் (08.03.2018)
அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்  (08.03.2018)
கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள்! (07.03.2018)
வே. பிரபாகரன் அவர்கள் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திராது! முஸ்லிம் மக்கள் (07.03.2018)
ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணத்தின் பிரதான சந்திப்புகள்! மனுக்களும் கையளிப்பு! (06.03.2018)
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அரசின் செயற்பாடுகள் இல்லை-இரா சம்பந்தன் (06.03.2018)
அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம்! (06.03.2018)
யாழ்ப்பாணம் கோட்டையைக் தம்மிடம் வழங்குமாறு இராணுவம் கோரிக்கை! (04.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan