.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? -சீமான் கேள்வி
Thursday, 12.04.2018, 05:11pm (GMT)

தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும் போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க் கட்சிகள் இன்று மேற்கொண்டன.

சென்னை விமான நிலையம் அருகே நடைபெற்ற கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய சீமான், தமிழர்களை கடலில் மூழ்கி சாகும்போதும், குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த போதும் காப்பாற்ற வராத ராணுவத்திற்கு எதற்காக சென்னையில் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், நீட் விவகாரம், காவிரி பிரச்னை, நியூட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்பு என தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருவதால், இந்தக் கண்காட்சியை நடத்தி மக்களை மிரட்டப்பார்க்கிறார்கள்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று சொல்லும் முதல்வர், துணைமுதல்வர் இருவரும் கடந்த ஓர் ஆண்டில் தமிழர்களுக்காக சாதித்தது என்ன என்று சொல்ல முடியுமா என்றும் சீமான் கேள்வியெழுப்பி உள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
வடமாகாண முதலமைச்சரின் பதிலால் ஆடிப்போயுள்ள கூட்டமைப்பு! (10.04.2018)
முதல்வரை சிக்கலில் மாட்டும் வடக்கு அமைச்சர்கள்! - மீண்டும் மோசடிக் குற்றச்சாட்டுகள்! (10.04.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி மீண்டும் புனரமைப்பு! (07.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் வட மாகாணசபை முன் போராட்டம்! (31.03.2018)
ஈபிடியுடன் கூட்டமைப்பின் கூட்டும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பமும்! (29.03.2018)
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் கையேடு வெளியீடு! (19.03.2018)
தாய் சுடுகாடு செல்ல தந்தையுடன் சிறைக்கு செல்ல முயன்ற பிஞ்சு! கிளிநொச்சியில் துயரம்!! (18.03.2018)
இனவழிப்பின் சூத்திரதாரி மகிந்தவை பாதுகாக்கும் முயற்சியில் தமரா குண­நா­யகம்  (14.03.2018)
இலங்கை குறித்த முத­லா­வது விவாதம் வெள்ளிக்­கி­ழமை ஜெனி­வாவில் நடைபெறவுள்ளது: (13.03.2018)
லண்டனில் தமக்கு பாதுகாப்பு இல்லை என சிங்களவர் வெளிநாட்டு அமைச்சிடம் முறைப்பாடு: (13.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan