.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது
Friday, 13.04.2018, 02:55pm (GMT)

கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தோண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.

நேற்று முன் தினமும், நேற்றும் இந்த தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளி யார், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார், யாரால் கைது செய்யப்பட்டார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? -சீமான் கேள்வி (12.04.2018)
வடமாகாண முதலமைச்சரின் பதிலால் ஆடிப்போயுள்ள கூட்டமைப்பு! (10.04.2018)
முதல்வரை சிக்கலில் மாட்டும் வடக்கு அமைச்சர்கள்! - மீண்டும் மோசடிக் குற்றச்சாட்டுகள்! (10.04.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி மீண்டும் புனரமைப்பு! (07.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் வட மாகாணசபை முன் போராட்டம்! (31.03.2018)
ஈபிடியுடன் கூட்டமைப்பின் கூட்டும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பமும்! (29.03.2018)
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் கையேடு வெளியீடு! (19.03.2018)
தாய் சுடுகாடு செல்ல தந்தையுடன் சிறைக்கு செல்ல முயன்ற பிஞ்சு! கிளிநொச்சியில் துயரம்!! (18.03.2018)
இனவழிப்பின் சூத்திரதாரி மகிந்தவை பாதுகாக்கும் முயற்சியில் தமரா குண­நா­யகம்  (14.03.2018)
இலங்கை குறித்த முத­லா­வது விவாதம் வெள்ளிக்­கி­ழமை ஜெனி­வாவில் நடைபெறவுள்ளது: (13.03.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan