.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு!
Thursday, 03.05.2018, 09:52pm (GMT)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் கண்டி யாழ்ப்பாண வீதி ஓரமாக இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களது காணிகளை அதிகாரிகள் நிலஅளவை செய்வதற்காக சென்றவேளை, மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அதனைத் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் பகுதியில்கண்டி யாழ்ப்பாண வீதி ஓரமாக இராணுவத்தின் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ளது. குறித்த முகாம், மக்களது காணிகள் பலவற்றை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக சுவீகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மக்கள் இந்த காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியும் இந்த காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை.

இந் நிலையில் இன்று வியாழக்கிழமை நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவிட செல்வதனை அறிந்த மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து இராணுவ முகாம் வாசலில் வைத்து நில அளவீட்டு பணிக்காக சென்றவர்களை திருப்பியனுப்பியுள்ளனர்.

இதனை காணி உரிமையாளர்கள் யாருக்கும் அறிவிக்கவில்லை எனவும் இரகசியமான முறையில் அளவீடு செய்து இராணுவத்திற்கு வழங்கும் சதி திட்டமாக இதை பார்ப்பதாகவும் எல்லைப்படுத்தல் நடவடிக்கைக்காக காணிகளை அளவிடுவதாயின் உரிமையாளர்களான தங்களையும் அழைத்து காணிகளை அளந்து, தமது காணிகளை தம்மிடம் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து காணி அளவிடுவதற்காக சென்ற நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

இந்த நில அளவீட்டுக்கு எதிப்பு தெரிவித்து மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிரேம்காந்த் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச உறுப்பினர்களான மு.முகுந்தகஜன் சத்தியசீலன் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டு நில அளவீட்டு பணிகளை தடுத்துநிறுத்தியிருந்தனர்.

இந்த காணிக்கான ஆவணங்கள் மக்களிடம் இருப்பதாகவும் இராணுவம் அடாத்தாக பிடித்துள்ளதாகவும் இதனை தம்மிடம் மீட்டு தர சம்மந்தப்பட்டவர்கள் ஆவண செய்ய வேண்டுமெனவும் கோருகின்றனர்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! (28.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! (14.04.2018)
வவுனியா வடக்கு முல்லைத்தீவு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம்! (13.04.2018)
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது (13.04.2018)
தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? -சீமான் கேள்வி (12.04.2018)
வடமாகாண முதலமைச்சரின் பதிலால் ஆடிப்போயுள்ள கூட்டமைப்பு! (10.04.2018)
முதல்வரை சிக்கலில் மாட்டும் வடக்கு அமைச்சர்கள்! - மீண்டும் மோசடிக் குற்றச்சாட்டுகள்! (10.04.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி மீண்டும் புனரமைப்பு! (07.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் வட மாகாணசபை முன் போராட்டம்! (31.03.2018)
ஈபிடியுடன் கூட்டமைப்பின் கூட்டும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பமும்! (29.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan