.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - வடக்கு முதல்வர் 
Monday, 07.05.2018, 03:03pm (GMT)

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய அவசியமில்லை, அந்த மாவட்டங்களில் எமது தமிழ் மக்கள் கடமையாற்ற வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
   
வடமாகாணத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர், “ வடமாகாணத்தில் பணியாற்ற போதிய அலுவலர்கள் இல்லை. அரசாங்கம் தமக்கு ஏற்றவாறுதமக்கு வேலை செய்வதற்காக சிங்கள உத்தியோகத்தர்களை நியமிக்கின்றார்கள். 

பல வழிகளில் வேலை செய்வதற்கான செயற்திட்டங்கள் உள்ளன. அதில், அரசாங்கமும், மாகாண அரசும் இணைந்து செய்வதற்கான செயற்திட்டம் உள்ளது. அரசாங்கம் தனியாக செய்ய ஒருசெயற்திட்டம். மாகாண சபை தனியாக செய்ய ஒரு செயற்திட்டம் உள்ளது.

ஆனால், அரசாங்கத்திற்கு உள்ள உரித்துக்களின் அடிப்படையில் சிலஉத்தியோகத்தர்களை அனுப்புகின்றார்கள். அந்த உத்தியோகத்தர்களுக்கு இங்குள்ள இடங்கள் தெரியாது, மொழிப் பிரச்சினை உள்ளது. வடபகுதியைச் சேர்ந்தவர்களை நியமிக்க கோரினால், தாம் பார்த்துக் கொள்வதாக கூறுவார்கள். ஆனால், நியமிக்க மாட்டார்கள். சமூர்த்தி அலுவலர்களை நியமித்தது எனக்குத் தெரியாது.

இது அரசாங்கத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை. எம்முடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒருவிடயம். உதாரணமாக வவுனியா மற்றும் மன்னார் அரசாங்க அதிபர்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் பிரதேசங்களில் சிங்கள அலுவலர்களையும், சிங்கள பிரதேசங்களில் தமிழ் அலுவலர்களையும் நியமிப்பதாக கூறி, லோகேஸ்வரனை வடமத்திய மாகாணத்திற்கும் அனுப்பியுள்ளார்கள்.

சிங்கள உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதை விடுத்து, ஏன் வவுனியாவிற்கும், முல்லைத்தீவிற்கும், மன்னாருக்கும் அனுப்ப வேண்டும்? அந்த உத்தியோகத்தர்கள் இருக்கும் போது தான், பல விதமான குடியேற்றங்களும் நடைபெறுகின்றன. அந்தப் பிரதேசங்களில் தெற்கில் இருந்து வந்து குடியேறுகின்றார்கள்.

தமிழ் பிரதேசங்களில் சிங்கள அலுவலர்களும், சிங்கள பிரதேசங்களில் தமிழ் அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டால், அந்த சிங்கள அலுவலர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அந்த அலுவலர்கள் தமது வேலைகளைச் செய்யட்டும். வவுனியா உட்பட முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவர்கள் தமது வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. 

குறித்த மாவட்டங்களிலும், எமது தமிழ் மக்களே தமது வேலைகளைச் செய்யவேண்டுமென்றும் சுட்டிக் காட்டியுள்ளர்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு! (03.05.2018)
அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! (28.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! (14.04.2018)
வவுனியா வடக்கு முல்லைத்தீவு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம்! (13.04.2018)
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது (13.04.2018)
தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? -சீமான் கேள்வி (12.04.2018)
வடமாகாண முதலமைச்சரின் பதிலால் ஆடிப்போயுள்ள கூட்டமைப்பு! (10.04.2018)
முதல்வரை சிக்கலில் மாட்டும் வடக்கு அமைச்சர்கள்! - மீண்டும் மோசடிக் குற்றச்சாட்டுகள்! (10.04.2018)
தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி மீண்டும் புனரமைப்பு! (07.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் வட மாகாணசபை முன் போராட்டம்! (31.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan