.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்!
Sunday, 17.06.2018, 08:21pm (GMT)

தமிழ் மக்கள் பேரவை எமது இளைய சமுதாயத்தினருடன் சந்திப்பை நிகழ்த்த ஆவல் கொண்டுள்ளது. எமது பேரவையில் இளைஞர்கள் சிலர் இருந்தாலும், பெருவாரியான இளைஞர் யுவதிகளைச் சந்தித்து பரஸ்பரம் எமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதால் இரு சாராருக்கும் அது நன்மை பயக்கும். உரியகாலம் வந்ததும் யாவரும் ஒரு இயக்கரீதியான செயற்பாட்டுக்குள் இறங்க வேண்டிவரும் என்பது நிச்சயம். அதுவரையில் நீங்கள் உங்களைத் தயார்படுத்த வேண்டும். அறிவு பூர்வமாக எமது குறிக்கோள்கள் என்ன, அவற்றின் தாற் பரியங்கள் என்ன, பன்னாடுகளில் அவற்றை நோக்கி முன்னெடுத்த போராட்டங்களுக்கு என்ன நடந்தது, எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து எமது அரசியல் பவனியை ஆற்றுப்படுத்த வேண்டும் என்பது பற்றி எல்லாம் சிந்தித்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.  என வட மாகாண முதலமைச்சர் திரு. சீ.வி விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ். இளைஞர் களுடனான சந்திப்பு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கலைத்துறைக் கலாமன்ற கருத்தரங்க கூடத்தில் நேற்று 16,06,18 இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இங்கு’ இரு சாரார்’ எனும் போது நான் வயதில் மூத்தவர்களையும், இளைஞர்களையும் பிரித்துப் பார்ப்பதுபோலத் தெரியும், ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழ்ச் சமுதாயம் ஒரு குடும்பம் என்றால், பெற்றோரும் அவர்தம் மக்களும் பிரித்துப் பார்க்க முடியாதவர்கள். ஒரே குடும்பம். ஆனால் வயதில், அனுபவத்தில் வித்தியாசங்களுடன் இருப்பவர்கள்.

ஆகவே எமது தமிழ்ச் சமுதாய இளைய தரப்பினரை மூத்தோர் சந்திக்கும் ஒரு நிகழ்வே இது. ஒரு சில விடயங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.

இன்றைய சமுதாயத்தில் இளைஞரின் பங்கு என்ன? 

இளைஞர்கள் யுவதிகள் வயதில் குறைந்தவர்கள்.ஆனால் வாலிப வலிமை கொண்டவர்கள். பழையன கழிதலும், புதியன மலர்தலும் என்று கூறுவோமே! அதுபோல் தான் இளைஞர் யுவதிகள். அவர்கள் இடம் நிரப்பக் காத்திருப்பவர்கள்.

பகரமாகப் பதவி பெற காத்திருப்பவர்கள், எம் போன்ற வயோதிபர்கள் சமுதாயவானில் இருந்து மறைந்து போக எமது இடத்தை நிரப்ப இருப்பவர்கள் தான் நீங்கள். ஆகவே தான் உங்கள் செயல் பண்பு இடம் நிரப்புதல் ஆகிவிட்டுள்ளது. இன்னும் 20, 25 வருடங்களில் நீங்கள் தான் மக்களின் தலைவர்களாக இருப்பீர்கள்.

அதற்கான ஆரம்ப பயிற்சியை நீங்கள் பெறவேண்டும் என்றே நாங்கள் இளைஞர்களுடனான இந்த சந்திப்புக்களை ஆயத்தஞ் செய்து வருகின்றோம். பேராசிரியர் சரவணபவன் போன்றோர் பயிற்சியை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், விழுமியங்கள் போன்ற பலவற்றையும் எமது இளைய தலை முறையினர் ஆகிய உங்கள் கையில் கொடுக்க நீங்கள் அவற்றை உங்கள் காலத்தில் பேணிப் பாதுகாத்துச் சென்று அடுத்த தலை முறையினருக்குக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது அவற்றை மேம்படுத்தவும் நீங்கள் முன்வர வேண்டும்.

சிதைக்கவோ, சின்னாபின்னப் படுத்தவோ முனையக் கூடாது. அரசியல் அரங்கில் அதிகாரத்தைப் பெறப் போகின்றவர்கள் நீங்கள். அதற்கேற்றவாறு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உங்களுக்குக் கிடைத்த விழுமியங்களை இன்னும் மெருகூட்டி மேன்மை கொடுத்து அடுத்த தலை முறையினருக்குக் கொடுக்க முன்வர வேண்டும்.

ஒருநாட்டில் அரசியல்,பொருளாதார, சமூ கவளர்ச்சியானது. இளைஞர் யுவதிகள் கையிலேயே இருக்கின்றன. முதியோரான எமக்கு வலிமை குன்றக், குன்ற வளர்ச்சிக்கு முண்டு கொடுக்கப் போவது நீங்களே.

ஆகவே அனுபவத்திற்கும் ஆற்றலுக்கும் மதிப்புக் கொடுத்து அதே நேரம் வேகம், விவேகம் ஆகியவற்றை உள்ளடக்கி எமது பாரம்பரியங்களை முன் கொண்டு செல்ல நீங்களே முன்வர வேண்டும். முதியவரின் அனுபவமும் இளையோரின் வேகமும் ஒன்று சேர்ந்தால் ஒரு சமூகம் வெகுவாக முன்னேற்றமடையலாம். உங்களுள் தானாகவே எழும் ஒரு குணவியல்பு தான் புரட்சி என்ற மனோபாவம்.

இதுவரை நடந்தவற்றை எல்லாம் ஏற்க மனம் விடாது. புதியனவற்றைப் புகுத்த மனம் துடிக்கும். ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதே வேகம் இளைஞர்களாக இருந்த போது எங்களுக்கும் இருந்தது.

இன்று அமைச்சராக இருக்கும் ஜோன் அமரதுங்க, காலஞ் சென்ற முன்னைய அமைச்சர் ட்டெனிசன் எதிரிசூரிய போன்ற பலர் என்னுடைய தலைமைத் துவத்தின் கீழ் கொழும்பு நகர் வீதிகளில் அந்த நாட்களில் புரட்சி நடைகளில் ஈடுபட்டவர்கள். நான் அப்போது சட்ட மாணவர் தலைவராக இருந்தேன்.

எமது புரட்சிச் சிந்தனைகள், பேச்சுக்கள் எல்லாம் காலம் செல்லச் செல்ல அடங்கி விட்டன. அனுபவம் எமக்குப் பாடங்களைப் புகட்டின. முக்கியமாக எம்மை நாடி வரும் ஒவ்வொரு வரும் தாம் பகரும் காரணத்திற்காக மட்டும் எம்மிடம் வருவதில்லை என்பது. எனவே தான் கூறுகின்றேன் முதியோரின் அனுபவங்களை புறக்கணிக்காதீர்கள்.

உங்கள் இயல்பான வேகத்தையும் தடுக்காதீர்கள். இரண்டும் சேர்ந்தே உங்களை வழி நடத்த வேண்டும். ‘உந்தக் கிழடுகளுக்கு என்ன தெரியும்?’ என்ற மனோபாவத்தில் இருந்தீர்களானால் எங்கோ ஒரு இடத்தில் உங்கள் அனுபவமின்மை உங்களுக்கு இடர்களைத் தந்துவிடுவன. மிகவும் மனவருத்தத்துடன் நான் கூறுவது "தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் அனுபவமும், அறிவும் ஏற்றுக் கொள்ளப்படாதது பாரிய விளைவுகளை எமக்கு ஏற்படுத்தியது என்பது.

போர்க் காலத்தில் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டே எம்மவர் இயக்கங்களில் சேர்ந்தார்கள். அது வேறு இன்றைய நிலை வேறு. போரை மையமாக வைத்து நடந்தேறியதே அன்றைய வாழ்க்கை. ஆனால் இன்று அவ்வாறல்ல. ஜனநாயக சூழல் வேறு, போர்ச் சூழல் வேறு.

நீதியரசர் சட்டத்திற்கே முதலிடம் கொடுக்கின்றார். அவரை வைத்துக் கொண்டு புரட்சி நடவடிக்கைகளில் இறங்க முடியாது என்று கூறுவார்களும் இருக்கின்றார்கள். புரட்சி மட்டும் செய்து தெற்கிலும் எமது இளைஞர்கள் பயன் பெறவில்லை வடக்கிலும் எமது குறிக்கோளை நாங்கள் அடையவில்லை.

ஆனால் உரியகாலம் வந்ததும் யாவரும் ஒரு இயக்கரீதியான செயற்பாட்டுக்குள் இறங்க வேண்டிவரும் என்பது நிச்சயம். அதுவரையில் நீங்கள் உங்களைத் தயார்படுத்த வேண்டும். அறிவு பூர்வமாக எமது குறிக்கோள்கள் என்ன, அவற்றின் தாற்பரியங்கள் என்ன, பன்னாடுகளில் அவற்றை நோக்கி முன்னெடுத்த போராட்டங்களுக்கு என்ன நடந்தது, எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து எமது அரசியல் பவனியை ஆற்றுப்படுத்த வேண்டும் என்பது பற்றி எல்லாம் சிந்தித்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.

சட்டரீ தியாக சத்தியாக் கிரகம் செய்வது எப்படி என்பது பற்றி ஒரு கிறீஸ்தவப் பாதிரியார் அவுஸ்ரேலியாவில் ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்டுள்ளார் என்று அறிகின்றேன். எமக்குள் ஒற்றுமையை வளர்த்தல் அவசியம். எம்மவருக்கு இருக்கும் சந்தேகங்களைப் போக்குதல் அவசியம். அதற்காகத்தான் இந்தக் கருத்துப் பரிமாற்றம்.

ஆனால் எமது கடமைகளில் தீவிரம் அவசியம். இலஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு இடமளிக்கக் கூடாது. உங்கள் பவனியில் அறிவுடையோர், அனுபவமுடையோர் பல நல்ல விடயங்களை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் காத்திருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைச் செவிமடுப்பதில் குற்றமில்லை. தீர்மானங்கள் உங்களாலேயே எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் புதுமை காணும் விதத்தில் நீங்கள் சிந்திக்கப் பழகவேண்டும். பழைமையைப் புரிந்து புதுமையை வெளிக் கொண்டுவர நீங்கள் முன்வர வேண்டும்.மேலும், இளைஞர்கள் புதிய புதிய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடியவர்கள். இன்றைய கால கட்டத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப சிந்திக்க கூடியவர்கள். அவர்களை சரியாக ஆற்றுப்படுத்தினால் எமது வருங்காலம் பெருமை வாய்ந்ததாக அமையும் என சுட்டிக் காட்டியுளளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது! (15.05.2018)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்! (07.05.2018)
சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - வடக்கு முதல்வர்  (07.05.2018)
மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு! (03.05.2018)
அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! (28.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! (14.04.2018)
வவுனியா வடக்கு முல்லைத்தீவு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம்! (13.04.2018)
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது (13.04.2018)
தமிழர்களை காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? -சீமான் கேள்வி (12.04.2018)
வடமாகாண முதலமைச்சரின் பதிலால் ஆடிப்போயுள்ள கூட்டமைப்பு! (10.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan