.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர்
Friday, 22.06.2018, 03:02pm (GMT)

போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலைகளுக்கு பொறுப்பு கூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ்.

நோர்வேயில் நடந்த நிகழ்வு ஒன்றின் போது சிறிலங்காவில் நீதியை நிலை நாட்ட ஐ.நா தவறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு. எனவே, சிறிலங்காவில் என்ன நடந்தது என்பதற்கு இலங்கையர்களே பொறுப்புக்கூற வேண்டும். அதனை அங்கீகரிப்பது முக்கியமானது.

சிறிலங்காவில் போரை எதிர்கொள்வதற்கான வளங்களை ஐ.நா கொண்டிருக்கவில்லை. ஐ.நாவின் தவறுகள் அடையாளம் காணப்பட்டு, தற்போது ஐ.நா முறைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்  கூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது! (21.06.2018)
உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்! (17.06.2018)
விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது! (15.05.2018)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்! (07.05.2018)
சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - வடக்கு முதல்வர்  (07.05.2018)
மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு! (03.05.2018)
அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! (28.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! (14.04.2018)
வவுனியா வடக்கு முல்லைத்தீவு பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம்! (13.04.2018)
கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது (13.04.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan