.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!
Wednesday, 19.09.2018, 01:22pm (GMT)

அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) காலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஒன்று கூடிய மாவட்ட பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளால் குறித்தவிடயம் தொடர்பாக கலந்துரையாடப் பட்டிருந்தது.

இதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை 22ம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புகள், அரசியல்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றும் இதன் போது நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாடாhளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா, நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் (19.09.2018)
பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர் (22.06.2018)
சிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது! (21.06.2018)
உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்! (17.06.2018)
விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது! (15.05.2018)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்! (07.05.2018)
சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - வடக்கு முதல்வர்  (07.05.2018)
மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு! (03.05.2018)
அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! (28.04.2018)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! (14.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan