.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்
Thursday, 20.09.2018, 11:52am (GMT)

பல இன்னல்களுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவினர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் பிரஜைகள் குழுவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அருட்தந்தை இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அருட்தந்தை, ”தமது விடுதலைக்கு முன் நின்று உழைக்குமாறு அரசியல் கைதிகள் எங்களிடத்தில் கோரிக்கை விடுத்தனர்.

தாங்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை காலமும் தமக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

சுகயீனம் அடைந்துள்ள போதும் கைவிலங்கிடப்பட்டே வைத்திய சிகிச்சை வழங்கப்படுவது குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டனர். தங்களை விடுதலை செய்யாது விட்டாலும், தங்களை புனர்வாழ்வுக்கு அனுப்பும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக அரசியல் பிரமுகர்களை அணுகி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்நாட்டின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு வழங்க வேண்டும் என அரசினையும் அதனை சார்ந்துள்ளோரிடமும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! (19.09.2018)
6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் (19.09.2018)
பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர் (22.06.2018)
சிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது! (21.06.2018)
உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்! (17.06.2018)
விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது! (15.05.2018)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்! (07.05.2018)
சிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்! - வடக்கு முதல்வர்  (07.05.2018)
மாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு! (03.05.2018)
அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு! (28.04.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan