.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
திருகோணமலையில் இடம்பெற்ற “ஈழப் புரட்சிகர அமைப்பு- EROS மீளாய்வு பொதுக் கூட்டம்!
Tuesday, 30.10.2018, 03:55pm (GMT)

ஈழப் புரட்சி அமைப்பான EROS அமைப்பின் மீளாய்வு பொதுக்கூட்டம் கடந்த 28-10-2018 ஞாயிறு அன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

சம்பூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை உட்பட 9 நாடுகளில் பரந்து வாழ்ந்திருந்த ஆவ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 140 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இடம்பெற்ற இவ் மீளாய்வு கூட்டத்தில் கடந்த கால செயற்பாடுகளை மீளய்வு செய்துகொண்டதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்க வெண்டிய அரசிலச் செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இனி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியாக தமித்து களம் இறங்கும் நோக்கத்தோடு இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான காலப்பகுதியில் Telo, Epdp, Eprlf போன்ற அமைப்புக்கள் மெல்ல ஒருங்கிணைந்து மீள் உயிர் பெற்று அலுவலகங்களையும் திறந்து அரசியல் பணிக்கான போர்வையை போர்த்தியதன் வழியில் தற்போது Eros அமைப்பும் தமது அமைப்பின் ஒருங்கிணைவை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் Eros அமைப்பிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு இருப்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அதற்கு , அவர்கள் போராடிய  காலத்தில் செயற்பட்ட விதமும், பின்னர் இயக்கங்களுக்கு இடையே ஆன பிரச்சனைகளின் பின் தாமாக ஒதுங்கிக்கொண்டு எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லாது நடந்து கொண்ட விதமும் இம் மரியாதைக்கு, நம்பிக்கைக்கும் காரணமாக அமைந்தது.

இதே வேளை, முன்னர் Eros அமைப்பின் தலைவராக இருந்த க.வே.பாலகுமாரன் அவர்கள் 2009 இல் சிறீலங்கா படைககளால் கைதுசெய்யப்பட்டு இராணுவம் சூழ்ந்திருக்க நிலத்தில் இருத்தி வைத்திருந்த புகைப்படம் வெளியாகியிருந்தமையை நினைவு கொள்வதோடு, அவரை விடுவிக்கவோ, அல்லது அவர் தொடர்பான தகவலை சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெற்று வெளிப்படுத்த இவ் அமைப்பு முன்வரிமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தியாகி திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது! (26.09.2018)
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் ஒலித்த உரிமைக் குரல்! காணொளி  (24.09.2018)
திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்பது தவறான முன்னுதாரணம்- போராளி காக்கா  (20.09.2018)
போர்க் குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்-எம்.ஏ.சுமந்திரன (19.09.2018)
முல்லைத்தீவில் படையினரின் திட்டமிட்ட தேடுதல்கள் தீவிரம்! -பதற்றத்தில் பொதுமக்கள்! (22.06.2018)
கேப்பாபுலவில் காணிகளை இராணுவத்துக்கு வழங்க ஐவர் சம்மதமாம்!? (05.06.2018)
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...! (15.05.2018)
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை! (07.05.2018)
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)
இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!  (23.04.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan