.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் கவலையில்- மாவை சேனாதிராசா 
Monday, 05.11.2018, 04:31pm (GMT)

துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் என்பதே தற்போது எமக்குள்ள கவலையாகும்.இதற்காக நாங்கள் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்’ தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கவலை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் இன்று வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இனவிடுதலைக்கான போராட்டப் பயணத்தில் நன்றி எனும் வார்த்தையினை தேடியலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளளோம்.

இந்த விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எமது கண்முன்னே நிற்கன்றார்கள். ஒருவர் சட்டவிரோதமாக ஆட்சியை மாற்றியமைத்துள்ளார். மற்றொருவர் தான் அரசியலிற்கு வந்த பாதையினை மறந்து புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளார்.

இந்த துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் என்பதே தற்போது எமக்குள்ள கவலையாகும்.இதற்காக நாங்கள் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்’ என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சி – சமந்தா பவர் சீற்றம் (30.10.2018)
தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! -பேரம் பேசும் மகிந்த தரப்பு (30.10.2018)
ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- மைத்திரி விளக்கம் (28.10.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் (20.09.2018)
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! (19.09.2018)
6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் (19.09.2018)
பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர் (22.06.2018)
சிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது! (21.06.2018)
உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்! (17.06.2018)
விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த ஆன்மா வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது! (15.05.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan