.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
இரா சம்மந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்திப்பு!
Wednesday, 07.11.2018, 10:05am (GMT)

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

“நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்குத் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், “கடந்த வாரத்தில் பிரதமரை நீக்கியமை உள்ளடங்கலாக இடம்பெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவையாகும்.

நாடாளுமன்றம் கூடுவதை காலந்தாழ்த்தும் செயலானது, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு செயலை-  கட்சி தாவும் நபர்களுக்கு பல்வேறு பதவிகளையும் வேறு காரியங்களையும் கொடுத்து,-  சட்டபூர்வமான ஒன்றாக காட்டுவதற்கு வழிவகுக்கின்றது.

உடனடியாக செயற்பட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் சபாநாயகரை எழுத்து மூலமாக கேட்டுக் கொண்டேன்.

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை போதியளவு கையாளவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை,மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, போன்ற விடயங்களில் அரசாங்கம் மந்தகதியிலேயே செயற்பட்டது .

இந்த விடயங்களில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பிளவுபடாத -பிரிக்கமுடியாத நாட்டிற்குள் உண்மையான ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வொன்றினை அடைவது அவசியம்.

அத்தகைய தீர்வை அடைய முடியாத பட்சத்தில், இந்த நாடு எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது போகும்.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலகத்துக்கும், ஐ.நா.மனித உரிமை பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா தொடர்பில் ஆக்கபூர்வமான பங்களிப்பை கொடுக்க வேண்டும்  என அமெரிக்கத் தூதுவரிடம், இரா.சம்பந்தன்  கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர், “ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, அமெரிக்கா வலியுறுத்துகின்றது. தற்போது நிலவும்   சூழ்நிலைக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் .

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் நோக்கத்திற்கும் அதன் நடைமுறைப்படுத்தலுக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன்,  பிரதித் தூதுவர்  ரொபேர்ட் ஹில்டன் மற்றும் அரசியல் விவகாரப் பிரிவின் பொறுப்பாளர் அந்தனி ரென்சூலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் கவலையில்- மாவை சேனாதிராசா  (05.11.2018)
போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சி – சமந்தா பவர் சீற்றம் (30.10.2018)
தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! -பேரம் பேசும் மகிந்த தரப்பு (30.10.2018)
ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- மைத்திரி விளக்கம் (28.10.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் (20.09.2018)
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! (19.09.2018)
6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் (19.09.2018)
பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர் (22.06.2018)
சிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது! (21.06.2018)
உரிமைகளை மீட்டெடுக்க இளைஞ்ஞர்களை தயாராகுமாறு முதலமைச்சர் அறைகூவல்! (17.06.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan