.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
பிரதான செய்திகள்
 
மத்தியவங்கி குண்டுவெடிப்பு! விடுதலைப் புலி உறுப்பினர் மூவரின் மேன் முறையீடு நிராகரிப்பு!
Friday, 09.11.2018, 04:50pm (GMT)

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான வழக்கு அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் சாட்டுக்கள் அனைத்திலும் குற்றவாளிகளாக இனங் காணப்பட்ட மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

72 க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர் என்று, குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்த மூவரையும் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டு தண்டனை வழங்கியிருந்தது.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரியே மேற்படி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வேங்கபுலி ஆகியோரின் தலைமையிலான நீதியரசர் குழாமினால் இன்று அழைக்கப்பட்டது.

அந்த மனுவை பரிசீலனைக்கு எடுக்காமலே அதனை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த மேன் முறையீட்டு மனு, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான விக்கினேஸ்வரநாதன் பத்திரன், கதிராகுமனம் சிவகுமார், மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான வழக்கு அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் சாட்டுக்கள் அனைத்திலும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கும் கொழும்பு மேல்நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற விருதை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்புகிறார் கலானிதி தே.நேசையை! (08.11.2018)
இரா சம்மந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்திப்பு! (07.11.2018)
துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் கவலையில்- மாவை சேனாதிராசா  (05.11.2018)
போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சி – சமந்தா பவர் சீற்றம் (30.10.2018)
தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! -பேரம் பேசும் மகிந்த தரப்பு (30.10.2018)
ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- மைத்திரி விளக்கம் (28.10.2018)
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் (20.09.2018)
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! (19.09.2018)
6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் (19.09.2018)
பொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை! -ஜ.நா செயலர் (22.06.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan