.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
இன்றைய நிலவரம்
 
ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 01
Sunday, 24.04.2011, 03:44pm (GMT)

கடந்த சனியன்று பான் கீ மூனின் வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைத் தனித்துவமாக வழங்கியிருந்த 'ஐலண்ட்' பத்திரிகை சிறிலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அதன் இதர- பொருத்தமான பகுதிகளை தொடராக வெளியிட்டு வருகிறது.ஐ.நா நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளில் முக்கியமானதான, பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐலன்ட் நாளிதழ் முதலாவது பாகத்தில் விபரித்துள்ளது. இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி. வண்ணமதி.

சிறிலங்காவிற்கு எதிராக ஐந்து முதன்மையான குற்றச்சாட்டுக்களை வல்லுநர்கள் குழு சுமத்தியிருக்கிறது. தொடராக வெளியிடுவதற்கு எண்ணியுள்ள இந்த அறிக்கையின் முதலாவது பாகமாக போரின் போதான பொதுமக்கள் இழப்புகள் தொடர்பான தகவல்கள் தரப்படுகின்றன. இதுவிடயம் தொடர்பாக வல்லுநர்கள் குழு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

ஈ. கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை (பக்கம் 39 - 41)

132. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உறுதியான புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை. போரின் போது உண்மையில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதைச் சரியாகக் கணிப்பிடுவதை பல அம்சங்கள் கடினமாக்குகின்றன.

அவையாவன:

அ. போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆகக்கூடுதலாக 330,000 பேர் வசித்து வந்ததாகத் தெரிகின்ற போதும், போர் இடம்பெற்ற பிராந்தியத்தில் இருந்த மக்களின் மிகச்சரியான தொகை எதுவென யாருக்கும் தெரியாது.

ஆ. போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து வந்த மக்களைக் கையாண்ட நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை எதுவுமற்ற நிலையில், வன்னிப் பிராந்தியத்திலிருந்து எத்தனை பேர் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளை வந்தடைந்தனர் என்ற சரியான தகவல்கள் எதுவுமில்லை.

இ. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எத்தனை பேர் என்ற சரியான தவல்களின்மை. அத்துடன் இறுதி நாட்களில் கட்டாய ஆட்திரட்டல்களைப் புலிகள் மேற்கொண்டமை நிலைமையினை மேலும் சிக்கலாக்குகிறது.

ஈ. பல பொதுமக்கள் முறையான பதிவுகள் எதுவுமின்றி அவர்கள் கொல்லப்பட்ட இடத்திலேயே புதைக்கப்பட்டிருக்கிறார்கள், சில சமயங்களில் மரணமடைந்ததை யாரும் அறியாத நிலையில் பலர் இறந்த இடத்திலேயே கிடந்திருக்கிறார்கள்.

133. மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பகுதி ஆகியவற்றினால் திரட்டப்பட்ட காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் இறந்தவர்களின் தொகையினை ஊகிக்க முனைகிறார்கள்.

போரின் இறுதி நாட்களில் ஒட்டுமொத்தமாக 40,000 பேருக்குச் சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு 5,000 பேருக்கு அவயவங்கள் அகற்றப்பட்டிருக்கிறது எனச் சிலர் மதிப்பிடுகிறார்கள். 1:2 அல்லது 1:3 என்ற விகிதத்தில் காயம் மற்றும் இறப்புகள் இருப்பது தான் வழமை. இறந்தவர்களது தொகை அதிகமானது என்பதையே இந்த மதிப்பீடு காட்டுகிறது.

இறுதிப்போரின் பின்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தடைந்தவர்களது தொகையெதுவோ அதனை வன்னியிலிருந்த மக்கள் தொகையிலிருந்து கழித்து, இறுதிப்போரின் போது 75,000 பேர் கொல்லப்பட்டனர் என வேறு சிலர் கணக்கிடுகிறார்கள்.

(2009ம் ஆண்டு சனவரியில் போரற்ற பகுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டபோது 330,000 பொதுமக்கள் அங்கிருந்திருக்கிறார்கள் என்றும் இதற்கு முன்னரே 35,000 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டார்கள் என்றும் கூறும் இந்தத் தரப்பினர் இறுதியாக 290,000 பொதுமக்கள் வன்னிப் பகுதியிலிருந்து வந்ததை வைத்துக் கொண்டே மேற்குறித்த இந்தப் புள்ளிவிபரம் வெளியிடப்படுகிறது).

134. ஐக்கிய நாடுகள் சபையினது சிறிலங்காவிற்கான அணி இன்னொரு தகவல் மூலமாக அமைகிறது. ஓகஸ்ட் 2008 தொடக்கம் 13 மே 2009 வரையிலான காலப்பகுதியில் 7721 மரணமடைந்த அதேநேரம் 18479 பேர் காயமடைந்ததாக, ஒருபோதும் வெளியிடப்படாத ஐ.நாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

மே 13ம் திகதிக்குப் பின்னர் ஐ.நாவினால் புள்ளிவிபரங்களைத் திரட்ட முடியவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளுக்குள் சென்று வருவதற்கான அனுமதி பெரிதும் பாதிக்கப்பட்ட போதிலும் பெப்பிரவரி 2009 முதல் பொதுமக்கள் இழப்பு விபரங்களை ஐ,நா சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

பொதுமக்கள் இழப்புகள் மற்றும் இதர மனிதாபிமானக் கரிசனைகள் தொடர்பான நம்பத்தகு தகவல்களைத் திரட்டும் வகையில் 'நெருக்கடிகால செயற்பாட்டுக் குழு' என்ற ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினது புள்ளி விபரங்கள், வன்னிப் பகுதியில் செயற்பட்ட ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழு, மதத் தலைவர்கள் தரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குழு தனது புள்ளிவிபரங்களைத் திரட்டியது.

குறித்த ஒரு சம்பவத்தினை மூன்று தகவல் மூலங்களிலிருந்து உறுதிப்படுத்த முடியாமல் போனால், அந்தச் சம்பவத்தினை இந்தக் குழு உள்ளெடுக்காமல் தவிர்த்திருக்கிறது. 'தமிழ்நெற்' போன்ற வன்னிக்கு வெளியேயிருந்த தகவல் மூலங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற புள்ளிவிபரங்கள் நம்பத்தகுந்ததாக இல்லாத நிலையில் உள்ளெடுக்கப்படவில்லை.

135. ஐக்கிய நாடுகள் சபையினது சிறிலங்காவிற்கான அணியினரால் திரட்டப்பட்ட புள்ளிவிபரங்கள் ஒரு ஆரம்பமாக இருந்தாலும் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இந்தத் தொகை மிகவும் குறைவானதே எனத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செயற்பட்டு வந்த பல்வேறுபட்ட அவதானிப்பாளர்கள் நேடியாகக் கண்ட இழப்பு விபரங்களே ஐ.நாவினது குழுவினால் திரட்டப்பட்டது. பல இறப்புக்கள் யாரும் பார்க்காதவாறு இடம்பெற்றிருக்கலாம். மே 13ம் நாளுக்குப் பின்னர் ஐ.நாவின் இந்த அணி புள்ளிவிபரங்களைத் திரட்டுவதை நிறுத்திய நிலையில் இதற்குப் பின்னரே அதிகளவிலான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

இடைவிடாது தொடர்ந்த எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக, இறந்தவர்களை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு மக்கள் தப்பிச் சென்றனர். இந்த மரணங்கள் தொடர்பாக எந்தப் பதிவையும் அவர்கள் மேற்கொள்ளவுமில்லை, மருத்துவமனைக்குக் கொண்டு வரவுமில்லை ஏன் சில சமயங்களில் இறந்தவர்களைப் புதைக்கவுமில்லை. இதனடிப்படையில் நோக்குமிடத்து உண்மையான இழப்பு விபரமானது ஐ.நா குறிப்பிடும் தொகை எதுவோ அதனைவிடப் பன்மடங்கு அதிகமாய் இருக்கலாம்.

136. ஐக்கிய நாடுகள் சபையானது தான் சேகரித்த இந்த இழப்பு விபரங்களை ஒருபோதும் வெளியிடவில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். அரசாங்கத்துக்கு இந்தத் தகவல்களை வழங்குவதுடன் மாத்திரம் ஐ.நா நிறுத்திக்கொண்டது.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையினரால் வழங்கப்பட்ட இழப்புகள் தொடர்பான இந்தப் புள்ளி விபரங்களை முற்றாக மறுத்த சிறிலங்கா அரச அதிகாரிகள், இந்த இழப்பு விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டது என்றும் இதுபோல இழப்பு விபரங்களைச் சேகரிப்பது ஐ.நாவின் பணியல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

போரின் போதான மக்கள் இழப்புக்கள் தொடர்பாக ஐ.நா அப்போது தனது அறிக்கைகளில் குறிப்பிடும் போது, 'அதிகமான இழப்புக்கள்' என்றும் பொதுமக்கள் இழப்புக்கள் 'ஏற்றுக்கொள்ள முடியாதளவிற்கு அதிகரித்திருக்கிறது' என்றுமே கூறிவந்திருக்கிறது.

புள்ளிவிபரங்களை வெளியிடுவதில்லை என்ற தனது நிலைப்பாட்டினை 13 மார்ச் 2009 வரை ஐ.நா கடைப்பிடித்தது. ஈற்றில் 2009ம் அண்டு சனவரி 20ம் நாள் முதல் 2800 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 7,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் இவற்றில் பல போரற்ற பகுதிகளாகப் பிரகனடப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள்ளேயே இடம்பெற்றதாகவும் ஐ.நாவின் மனிதஉரிமைகளுக்கான உயர் ஆணையர் மார்ச் 13ம் நாளன்று குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து எழுந்த அழுத்தங்கள் மற்றும் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கான தங்களது நுழைவு அனுமதியினை இழந்து விடுவோமோ என்ற அச்சம் ஆகியன தான் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா அமைப்புகள் பெரிதாக எதனையும் குறிப்பிடாதமைக்கான காரணங்களாகும்.

வன்னிப் பிராந்தியத்தில் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த அந்த வேளையில் ஐ.நா இழப்பு விபரங்களை வெளியிடத் தவறியதாகப் பலர் குற்றம் சுமத்துகிறார்கள். ஏனைய பிராந்தியங்களில் இடம்பெற்ற மோதல் நிலையுடன் ஒப்பிடும்போது சிறிலங்காவில் தான் ஐ.நா இதுபோல புள்ளிவிபரங்களை வெளியிடுவதில் எச்சரிக்கையுடன் இருந்திருக்கிறது.

137. போர் முடிவுக்கு வந்தபின்னர் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், தங்களது உறவினர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அதிகளவிலான மக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் போரின்போது 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதாக நம்பத்தகு தகவல் மூலங்கள் கூறுகின்றன.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் போரின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பான உண்மையான புள்ளிவிபரங்கள் எதுவும் இன்னமும் இல்லை. ஆனால் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டார்கள் என பல்வேறுபட்ட நம்பத்தகு தகவல் மூலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை இந்தச் சூழமைவில் நிராகரித்துவிட முடியாது.

முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படுவதுதான் போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் உண்மையான தொகையினைக் கண்டறிவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுவதற்கும் வழிசெய்யும்.

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 02

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 03

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 04Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 02 (24.04.2011)
ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 03 (24.04.2011)
ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 04 (24.04.2011)
ஐ.நா வல்லுநர் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள்- பகுதி 05 (24.04.2011)
இலங்கையின் அரசர் ஆகிறாரா மஹிந்த ராஜபக்ஷே? கண்களில் முதன் முதலாகப் பயம் தெரிகிறது! (23.04.2011)
திருகோணமலை தென்னமரவாடி'' சிங்களவர்களிடம் பறிபோகும் நிலையில்?? (22.04.2011)
நாற்பது ஆண்டுகளின் முன்னர்: 'ஏப்பிரல் 05 1971' அன்று இரவு.. (13.04.2011)
ஓ! ஈழத்தின் தமிழ் இளைஞர்களே! உங்களை சோக்கிரட்டீஸ் அழைக்கிறார். (11.04.2011)
முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன? (09.04.2011)
''சோனியா பேச்சு... பித்தலாட்டம்!'' - பழ நெடுமாறன். (08.04.2011) 
::| Latest News
 

Site Created By: Thiliepan