.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
இன்றைய நிலவரம்
 
வடக்கில் கட்சி சாரா ஊடகத்தின் தேவை – பிரியா இராமசாமி
Tuesday, 13.02.2018, 10:39am (GMT)

வடக்கில் கட்சி சாரா ஊடகத்தின் தேவை – பிரியா இராமசாமி

தமிழ் மக்களை பொறுத்தவரை இன்றைய அரசியல் நிலைமை கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிப்போகும் ஒரு பனித்துகள்போல இருக்கின்றது.

காண்பவர் ,பார்ப்பவர் ,எல்லோருமே அரசியல் பேசும் நிபுணர்களாகவே தம்மை காட்டிக்கொள்கின்றனர் ,சமூக வலைத்தளங்களை தங்கள் அரசியல் பிரச்சார மேடையாக பயன்படுத்துபவர்கள் இப்போது அதிகம்.

ஆனால் – அரசியல், அரசியல் சார்ந்த நோக்கு என்பன சமுக வலைத்தளங்களில் பேசப்படுவதுபோல் சமூ கத்துக்குள் பேசப்படவில்லை காரணம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போல் எமது நாட்டு சமூக அமைப்பு தொழிநுட்ப அறிவு சார் சமூகம அமைப்பு இல்லை , ஒருகுறிப்பிட்ட வயதினரை மட்டுமே இந்த சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன, அவர்கள் பெரும்பாலும் நன்கு உணர்ந்த தேசிய ரீதியான அரசியல் விடயங்களை நேரில் காணாதவர்களும் ,அதேவேளை சரியான அரசியல் பின் புலம் பற்றி அறியாதவர்களாகவுமே இருக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் தம்மை இணைத்துக்கொண்டுள்ள அரசியல் பெருத்தகைகளும் இந்த சின்னப்பிள்ளைத்தனமான அரசியல் விமர்சனங்களுக்கு தலையாட்டிவிட்டு வாய்மூடி போய்விடுகின்றனர், சில விமர்சகர்கள் உண்மை நிலைகளை எடுத்தியம்பும்போது அவர்களுக்கு பலர் சேர்ந்து வீண் விமர்சனங்களை முன்வைக்கின்றனர் அதனால் அவர்களும் தமது கருத்து நிலையில் இருந்து பின் வாங்கிப்போகின்றனர்.

இதனால் சமூக வலைத்தளங்களிலும் அரசியல்சார் உண்மைகள் புறந்தள்ளப்பட்டு ஒரு உணர்ச்சிசார் அரசியல் நிலைமை ஓடவிடப்பட்டுள்ளது. தமிழனின் அரசியல் நோக்கம் என்ன என்பது பற்றியும் அவன் அதனை அடைய எவ்வகை வழிகள் உண்டு என்பதுபற்றியும் கருத்து சொல்ல அங்கே யாரும் இல்லை.

இதனால் உணர்ச்சி ரீதியான அரசியல் நிலவரம் இளம் சமூகத்துக்குள் இளையோடப்படுகின்றதே அன்றி உண்மை மற்றும் தேவையான அரசியல் நிகழ்வுகளும், விமர்சனங்களும் இடம்பெறாமல் போய்விடுகின்றன.

இதே நிலைமைதான் வடக்கின் ஊடகங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றமை பெரும் வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.

வடக்கில் புதிது புதிதாய் முளைக்கும் எந்த அச்சு ஊடகமாக இருந்தாலும் பக்கச்சார்பான கட்சி அரசியலையே முன்னெடுக்கின்றது, இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணுமே அன்றி நிலையான ஒரு முடிவுக்கு மக்களை கொண்டு வருவது மிகுந்த பிரயத்தனமான விடமாகிவிடுகின்றது.

வடக்கில் இயங்கும் ஒவ்வொரு ஊடகமும் தாம் சார்ந்த அரசியல் நிலைமைகளை மட்டுமே முன்னிருத்தித்தி செய்திகளை வெளியிடுகின்றனர் எந்த பத்திரிகையும் பொதுவான அரசியல் நோக்கத்தையோ, பொது அரசியல் விமர்சனத்தையோ முன் வைக்க தயாராக இல்லை, வெளிப்படையாக சொல்லப்போனால் சமூக ஊடகங்களில் பேசப்படும் அதே விடயங்களையே அவர்களும் அதே முறையில் கையாளுகின்றனர், இதனால் பாதிக்கப்படப்போவது மக்களும் எதிர்காலமும் என்பதை எந்த அச்சு ஊடகமும் கணக்கில் எடுப்பதாக இல்லை.

குறிப்பாக அரசியல் தலைவர்களுள் மூளும் பிரச்சனைகளை ஊடகங்கள் ஊதி பெருப்பித்துவிடுகின்றனர்.

அண்மையில் வெளிவந்த இரண்டுகோடி ரூபா இலஞ்ச பிரச்சனை கூட ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக கையாளப்பட்டு பேசப்பட்டது எந்த ஊடகமும் உரியவர்களை, உரியவர்கள் கருத்துக்களை வெளிப்படையாக பெறவில்லை அல்லது அது தொடர்பான நியாயமான கேள்விகளை எழுப்பவில்லை அரசியல் வாதிகள் கூறும் கருத்துக்களை அப்படியே கூறுவதும், அவர் இப்படி தெரிவித்தார் என அதை அப்படியே ஒப்புவிப்பதுமான தன்மையையே பேணி வருகின்றது. அதையும் மீறி பாசாங்குத்தனமாக அந்த விடயத்தை நையாண்டித்தனமாக மக்கள்முன் கொண்டு செல்வதுமாகவே ஊடகங்கள் செயற்படுகின்றன.

அந்த விடயங்களை மக்கள் சார்ந்த விடயமாக எடுத்து அவர்களை கேள்வி கேட்கவோ, அல்லது அதுதொடர்பான உண்மைகளை அறியவோ எந்த ஊடகங்களும் தயாராக இல்லை. ஒப்புவித்து நிலைமைகளை மக்கள்முன் விதைக்க ஊடகங்கள் தேவை இல்லை. மக்கள் சார்ந்த பிரச்சனைகளை தேர்வுக்கு கொண்டுவர உழைக்கும் ஊடகங்களே இப்போது மக்களுக்கு வேண்டியவையாக இருக்கின்றன.

அரசியல் நிலைமைகளை தெளிவோடு நடுநிலைமையோடு வெளிக்கொணரும் ஊடகங்கள் இப்போது மக்களுக்கு இன்றியமையாதவையாக போய்விட்டன. எல்லா பத்திரிகைகளையும் வாங்கி செய்திகளை ஒப்பிட்டு பார்க்கும் நிலைமையில் மக்கள் இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுவில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே அரசியல் சமூக விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் முக்கிய பணிகளை செய்கின்றனர் என்பதை மறந்த ஊடகங்களே இப்போது களத்தில் இருக்கின்றன. பொதுவாக அனைத்து ஊடகங்களும் இப்போது தாம் சார்ந்த தமது அரசியல் கட் சி சார்ந்த விடயங்களை பெரிதுபடுத்தியும் அதனை நியாயப்படுத்தியும் அந்த அரசியல் நோக்கை உண்மைப்படுத்தியும் செய்திகளை போடுவதால் எது உண்மை எது நியாயம் என்கின்ற கேள்வி மக்கள்முன் எழுகின்றது.

இதனை போக்க சமூக வலைத்தளம்களிலும் ,இணைய ஊடகங்களிலும் தம் பாட்டுக்கு செய்திகள் பகிரப்படுகின்றன இவை மக்கள்முன் குழப்பமான அரசியல் சூழலை உண்டுபண்ணுகின்றதே தவிர தெளிவான பார்வையை ஏற்படுத்தவில்லை.

முடிந்தமுடிவான அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தமுடியாவிடடாலும் மக்கள் விரும்பும் அரசியல் விடயங்களை தெளிவுபடுத்த எந்த பத்திரிகையும் தயாராக இல்லை. தாம் சார்ந்த அரசியல் விடயங்களை மக்கள்முன் கொண்டுசெல்லவும் தம் பத்திரிகை சார்ந்த அரசியலை தெளிவுபடுத்தவுமே ஊடகங்கள் முண்டியடிக்கின்றன. மக்கள்கருத்தையோ மக்கள் கோரும் விடயங்களையே அரசியல் வாதிகளுக்கோ அரசுக்கோ தெரிவிக்க யாரும் தயாராக இல்லை.

அரசு சார்ந்தோ அரசியல்சார்ந்தோ செயற்படாத ஊடகங்களால் மட்டுமே பொதுவான தீர்வுகளை கருத்துக்களை மக்கள்முன் கொண்டு செல்லவும் முடியும், அதேவேளை மக்கள் நிலைப்பாட்டை அரசுமுன் கொண்டு செல்லவும் முடியும்.

அது தவிர்ந்த விடயங்கள் எல்லாம் குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் நிகழ்வுக்கு சமனாகும், மக்கள் பத்திரிகைகளின் கருத்துக்களை கருத்தில் எடுக்கின்றனர் என்பது மிக முக்கிய சமூக பார்வையாக இருக்கின்றது, எந்த ஒரு விடயத்தையும் சமூகத்துக்குள் விதைக்க இந்த செய்திதாள்களால் முடியும்.

உதாரணமாக நாளை பாடசாலை இல்லை என சாதாரணமாக சிறுவர்களுக்கு சொன்னால் யார் சொன்னார்கள் என்று கேள்வி கேட்ப்பார்கள், பேப்பரில் இருக்கு என்று சொல்லிப்பாருங்கள் உண்மையில் அவர்கள் நம்பிவிடுவார்கள் அது போலவே சமூக அரசியல் கருத்துக்கள் பத்திரிக்கை வாயிலாக வரும்போது மக்களும் சமூகமும் அதனை ஏற்கின்றது.

எனவே உண்மைத் தன்மையை நடுநிலைமையான அரசியல் கட்சிகளுக்கு பக்கசார்பில்லாத, சாராத கருத்துக்களை நடுநிலைமையான உண்மைத் தன்மையை மக்கள்மத்தியில் கொண்டு செல்லும் ஒரு நடுநிலையான ஊடகமே தற்போது வடக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது வெள்ளிடைமலையே.

-பிரியா இராமசாமிRating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஜெனிவாவில் வெற்றி நிச்சயம் - ச. வி. கிருபாகரன் (02.02.2014)
பிரான்ஸ் வாழ் தமிழர்களாலும், தமிழ் அமைப்புக்களாலும் மறக்கப்பட்ட, ஒரு தேசிய செயற்பாட்டாளன் (30.01.2014)
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசியத் தலைவராம் சேர்.பொன். இராமநாதன்-சொல்கிறார் பொன்.செல்வராசா (26.01.2014)
புலம்பெயர் தமிழர்களது ஒற்றைக் குறியாக ஜெனிவா மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வே உள்ளது. (24.01.2014)
எங்களைக் கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன-தமிழ்க் கவி (23.01.2014)
தாயை இழந்த நிலையில், அப்பாவைத் தேடும் மூன்று குழந்தைகள்:-கிளி­நொச்சி  (23.01.2014)
”மார்ச் மாதத்தின் மறைவு”!-சூரியகாந்தி வீ.கே.எம் (22.01.2014)
அப்பாவை விடுவியுங்கோவன்?அண்ணனை இழந்த தங்கைகளின் கதறல்! நிதர்சனின் அம்மா சிவஜினி, (22.01.2014)
நளினியின் உயிருக்கு ஆபத்து: தமிழக முதல்வருக்கும் மனுவுடன் சாந்தன் தொடரப்போகும் உண்ணாவிரதம் (26.12.2013)
சுனாமி பேரலையில் சிக்கி பலியாகிய மக்களின் ஒன்பதாம் ஆண்டு நீங்காத நினைவு நாள் (26.12.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan