.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
இன்றைய நிலவரம்
 
பதிப்பித்தல் துறையில் அகரவரிசையிலேயே நிற்கும் புலம்பெயர் அமைப்புகள்! அ.ரகுநாதன்,
Sunday, 03.06.2018, 01:58pm (GMT)

கடந்த 21.04.2018 ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லண்டன் ஈஸ்ற்காம் பகுதியில் "யாழ் கோட்டையின் நாயகன்" ஒரு வரலாற்றின் பதிவு என்கின்ற,1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையில் வீரச்சாவைத் தழுவிய கப்டன் ஹீரோராஜ் அவர்களின் ஆவணப்பதிவு நூல் ரி.சி.சி என்றழைக்கப்படும் அனைத்தலக தொடர்பகத்தினால் வெளியீட்டு வைக்கப்பட்டது. பல வேலைப்பழுக்கள் காரணமாக இந் நூல் பற்றி விழா நடந்தகையுடன் எழுத முடியவில்லை.

கொழும்பில் பிறந்து சிங்கள மொழியில் கல்விகற்று, பின்னர் புலியாகி தமிழ் கற்று கவிதைகள் படைக்கும் கவிஞனாக, புலிகள் இயக்கத்தின் சமாதான முயற்சிகளின் மொழி பெயர்ப்பாளனாக, திகழ்ந்த ஹீரோராஜ் அவர்கள் 1990,ஆம் ஆண்டு யாழ் கோட்டை முற்றுகையில் (SIAI - MARCHETTI SF-260 ) சியாமா செட்டி ரக விமானத்தை சுட்டு வீழ்த்தி யாழ் கோட்டை புலிகளிடம் வீழ பலம் சேர்த்தவன். 

விமானம் வீழ்ந்து இரண்டாம் நாள் யாழ் கோட்டையின் மண்ணில் கப்டன் ஹீரோராஜ் வீரவரலாறானான் இதுதான் ஹீரோராஜ் இவனின் வரலாறு.

இந்த உன்னத வீரனின் முக்கியத்துவத்தை காட்ட மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் தனது 'புதிய உலக ஒழுங்கு" என்ற புத்தகத்தை ஹீரோராஜ்க்கு சமர்ப்பணம் செய்ததிலிருந்து அறியலாம்.

இனி நூல் பற்றிய விடயத்திற்கு வருவோம். ஹீரோராஜின் தந்தை தன் மகன் பற்றி தாம் சேர்த்த தகவல்கள், படங்கள், நினைவுகள் முதலானவற்றை தன்னை சாவுதின்னுமுன் புத்தகமாக வெளிக்கொணர வேண்டும் என்ற ஆசையில் அனைத்துக தொடர்பகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை அணுகினார்.

இதில் அணுகப்பட்ட நபர்களில் லண்டன் ரி.சி.சி.யின் முக்கியஸ்தர்களான கமல், தனம் ஆகியோரும் முன்னாள் யாழ்மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ராஜன் அவர்களும் அடக்கம். ஒரு வரலாறாக கொண்டுவரப்பட வேண்டிய நூல் 28 ஆண்டுகள் கழிந்தும் கண்ணீரஞ்சலி மலராக இவர்களின் முயற்சியால் வந்திருப்பது வேதனைக்குரியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய கட்டமைப்பாக இயங்கிய அனைத்துலக தொடர்பகத்தில் அறிவியல்சார், புலமைகள் சார் துறைகளில் யாரும் இல்லையா என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கிறது. இது அவமானமான செயல.; ஒட்டுமொத்த விடுதலைப் புலிகளையும் களங்கப்படுத்தும் செயல். ஒரு கட்டமைப்பால் வெளிவரும் நூல் எத்தகைய தரத்தில் இருக்கவேண்டும் என்பது கூட உணராதவர்களாக இருந்து இவ்வளவு காலமும் இந்த கட்டைமைப்பை வழிநடத்தியிருக்கிறார்களா இவர்கள். பதிப்பித்தல் துறையின் அகரவரிசையே என்னவென்று தெரியாமல் இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் ஒரு அறிமுகம் இல்லை, உள்ளடக்கம் இல்லை, சமர்ப்பணம் இல்லை. யார் பதிப்பித்தார்கள் என்கிற உரிமம் இல்லை அட்டைப்பட தலைப்பு எப்படி அமைக்கப்பட வேண்டும் என்கின்ற தெளிவு இல்லை. சர்வதேச நூல் இலக்கமான ஐ.எஸ்.பி.ன் (ISBN) இலக்கம் இல்லை, எழுத்துப் பிழைகள் வசணப் பிழைகள் அதிகமோ அதிகம்.. மொத்தத்தில் நூல் என்கின்ற வரையறையே இல்லாது ஒரு நூல் அனைத்துலக தொடர்பக முக்கியஸ்தர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இது அனைத்துலக தொடர்பகத்திற்கு மட்டுமல்ல, புலம்பெயர் அமைப்புக்களின் கட்டமைப்புக்களுக்கே அவமானம். புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக லண்டனில் பதிப்பித்தல் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களை அணுகியிருந்தால் கூட நல்ல தரத்தில் புத்தகம் வந்திருக்கும்

இதே போல் தான் அண்மையில் தளிர் என்கின்ற அமைப்பினால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவில் தேசியக் கொடி மற்றும் தேசியத் தலைவரின் மாவீர் உரைகள், போராட்ட வரலாறு அடங்கிய பொக்கிசம் என்று வெளிவந்த பிரபாகரன் நூல் கூட பல கருத்துப்பிழைகள் தகவல்கள் பிழைகள், பதிப்பித்தல் பிழைகள் என்பனவற்றுடன் வெளிவந்திருந்தமை புலம்பெயர் அமைப்புக்கள் பதிப்பித்தல் துறையில் அகர வரிசையிலிருந்து இன்னும் வளரவில்லை என்பதற்கு மற்றொரு சான்று.

அத்துடன் இந்த புத்தகத்தில் 12 வது பக்கத்தில் போராளிகள் காவல் கடமையில் ஈடுபட்டிருக்கும் படம் அச்சிடப்பட்டுள்ளது. இது புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் ஏ9 நொச்சிமோட்டை பாலத்தில் இராணுவத்துடன் சேர்ந்து பயணிகளை கண்காணிப்பதற்கு போடப்பட்ட காவலரண் படத்தை விடுதலைப் புலிகளின் காவலரண் என அச்சிடப்பட்டிருக்கின்றது. அவர்கள் அணிந்திருக்கும் உடுப்பே அவர்கள் புளொட் என்பதை தெளிவுபடுத்திகிறது.

இதுபல ஆவணப் புகைப்படங்களை வைத்திருந்து, பல வெளியீடுகளை வெளியிட்ட அனைத்துலக தொடர்பகத்திற்கு தெரியாமல் போனதேன்.

இதைவிட நிகழ்வின் மேடையில் கட்டப்பட்டிருந்த பனரில் கேப்டன் ஹீரோராஜ் என்றும், அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்றும் திருமண நிகழ்வுப் பாணியில் எழுதப்பட்டிருந்தது.

இது ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு பனர் கூட எப்படி அடிக்கப்பட வேண்டும் என்பதே தெரியாது இதுவரை காலமும் இந்த அனைத்துலக தொடர்பகம் இருந்திருக்கிறதா? அவமானம்.

நிதி திரட்டலுக்கும், மாவீரர் நாள் செய்வதற்கும் மட்டுமே தேர்ச்சி பெற்ற அமைப்பாக இந்த ரி.சி.சி எனப்படும் அனைத்துலக தொடர்பகம் இருந்திருக்கிறதாயின் இதைவிட வேறு அவமானம் இல்லவே இல்லை. இது இந்த அனைத்துலக தொடர்பக கட்டமைப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்குமே ஏற்பட்ட அவமானம்.

மேலும் அனைத்துலக தொடர்பக லண்டன் பொறுப்பாளர் கமல் தலைமையில் இடம்பெற்ற இந்த புத்தக வெளியீட்டில் தலைமை தாங்கி, தொகுத்து வழங்கிய முன்னாள் யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள் கூட நிகழ்வு ஒருங்கமைப்பு, நிகழ்வின் வரண் முறைகள் எதுவுமின்றி நிகழ்வை நடாத்திச் சென்ற விதம் நிகழ்வு ஒருங்கமைப்பில் இன்னும் கத்துக் குட்டியாகவே இவர் இருக்கிறார் எனக் காட்டுகிறது.
இது யாழ்மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளனாக இருந்த இவர் தகுதியை, அறிவை, ஆளுமையை சீர்தூக்கி பார்க்கவே தோணுகிறது.

இந்த நிகழ்வில் முன்னாள் போராளி றூட் ரவி, அனைத்துலக தொடர்பக முக்கியஸ்தர் தனம் ஆகியோர் பேசியிருந்தனர். றூட் ரவி அவர்கள் பேசும் போது தனது அனுபவ பகிர்வுக்குள் ஹீரோராஜை கரைத்து விட்டிருந்தார். அதன்பின் பேசிய அனைத்துலக தொடர்பக முக்கியஸ்தர் தனம் ஹீரோராஜ் பற்றி எதுவுமே பேசாது தனது மனம் போன போக்கில் பேசிவிட்டு சென்றிருந்தார்;.
இந்த புத்தக வெளியீட்டில் முன்னாள் போராளி காந்தள் வாணன் தனது கவிதையினூடு ஆஸ்தான கவி புதுவை இரத்தினதுரையின் நினைவுகளை மனக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார். இந்த கவிதையை மட்டுமே இந்த யாழ் கோட்டையின் நாயகன் ஹீரோராஜ் புத்தக வெளியீட்டில் ரசிக்ககூடியதாக இருந்தது.

ஒட்டு மொத்தத்தில் விடுதலைப் புலிகளின் ஒரு கட்டமைப்பால் நூல் என்ற வரண்முறையே இல்லாது வெளிவந்த இந்நூலின்; வெளியீட்டு விழா என்றுவிட்டு நூல் பற்றிய விமர்சணமே, நூலின் நாயகன் பற்றிய மீள்பார்வையோ இல்லாது இந்நூல் வெளியீட்டு விழாவை நடத்தியதானது இனியும் போலியாகத்தான் நிற்கப் போகின்றோமா என்ற வினாவை இந்நிகழ்வு எம்முன்னே முன்வைக்கிறது.

வயோதிப காலத்தில் தன் இறுதி விருப்பை நிறைவேற்றத் துடிக்கும் அந்த தந்தைக்கு தலைவணக்குகிறோம். இம்மாவீரனின் தந்தைபோல் பல்லாயிரக்கணக்கான பெற்றோரின் விருப்பங்களை அர்த்த புஸ்தியுடன் இனியாவது நிறைவேற்ற முனையுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

'தெரியாதவற்றை கேட்டறிதலில் எந்த தவறுமில்லை"

நன்றி,
அ.ரகுநாதன்,
உலகத்தமிழர் ஆவண மையம்.
செய்திப் பதிவு! தி.தமிழரசன்


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
செயல்தான் எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகிறது” "தேசியத் தலைவர்" (31.03.2018)
விடுதலை செய் அதை உடனே செய்!- வ.சிவரதன் (18.03.2018)
வடக்கில் கட்சி சாரா ஊடகத்தின் தேவை – பிரியா இராமசாமி (13.02.2018)
ஜெனிவாவில் வெற்றி நிச்சயம் - ச. வி. கிருபாகரன் (02.02.2014)
பிரான்ஸ் வாழ் தமிழர்களாலும், தமிழ் அமைப்புக்களாலும் மறக்கப்பட்ட, ஒரு தேசிய செயற்பாட்டாளன் (30.01.2014)
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசியத் தலைவராம் சேர்.பொன். இராமநாதன்-சொல்கிறார் பொன்.செல்வராசா (26.01.2014)
புலம்பெயர் தமிழர்களது ஒற்றைக் குறியாக ஜெனிவா மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வே உள்ளது. (24.01.2014)
எங்களைக் கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன-தமிழ்க் கவி (23.01.2014)
தாயை இழந்த நிலையில், அப்பாவைத் தேடும் மூன்று குழந்தைகள்:-கிளி­நொச்சி  (23.01.2014)
”மார்ச் மாதத்தின் மறைவு”!-சூரியகாந்தி வீ.கே.எம் (22.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan