.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
திருமலையில் 1803 ஹெக்டயர் பரப்பில் உப்பளம் அமைப்பதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் பாதிப்பு
Tuesday, 10.01.2012, 10:54am (GMT)

அபிவிரித்தி அரசியல் என்ற பெயரில், தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் தமிழர்களின் வளங்களை சுரண்டுவதோடு, மக்களின் இருப்பினையும் கேள்விக்குறியாக்கி வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் 1803 ஹெக்டயர் பிரதேசதில் உப்பள உற்பத்திக்காக றைகம் நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதனால், இப்பகுதி வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக திருகோணலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருகோணலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில், இறால்- நண்டுபிடித்து வாழ்ந்து வரும் 500க்கும் அதிகமான தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்றைய இந்த நிலை இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிரித்தித் திட்டம் இவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி உள்ளது என குற்றஞ் சாட்டியுள்ளார்.

இதேவேளை இப்பிரதேசத்தில் உப்பளம் அமைக்கப்படுவதனால் நண்டு, இறால், மீன்வகைகள் வளர்வதற்கான இயற்கை சூழலும், கண்டல் தாவர வர்க்கமும் அழிவடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஜெர்மனி தமிழ் தேசிய செயற்பாட்டாளர், வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்கள் சாவடைந்துள்ளார். (10.01.2012)
தமிழாராச்சி மாநாட்டின்போது யாழில் படுகொலையான தமிழர்களுக்கு வணக்க நிகழ்வு நடைபெற்றது! (10.01.2012)
சென்னையில் மலையாள மனோரமா பத்திரிக்கையை எதிர்த்து மே17 இயக்கம் நடத்திய ஆர்பாட்டம்-காணொளி (09.01.2012)
856 பேரை பலி கொடுத்து 2000 பேர் வரையில் ஊனமாகியவர்களை சுமக்கின்ற வடமாராட்சி கிழக்கு மண் (09.01.2012)
கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு தொடர்பாக திரு,பொ.கஜேந்திரகுமார் வழங்கிய செவ்வி- காணொளி (08.01.2012)
தமிழீழ மக்களுக்கான நீதி கோரி நாடாளுமன்றத்தில் விவாதம்! பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு! (08.01.2012)
தமிழர் தாயகப் பகுதிகளில் அவர்களுக்குரிய காணிகளை திட்டமிட்டு சூறையாடும் சிங்களப் படைகள்! (08.01.2012)
ஜெனீவா ஐ.நா முன்றலில் நீதிக்காய் ஒன்றிணைவோம்! தமிழீழ அரசாங்கம் அழைப்பு (07.01.2012)
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? தமிழர்கள் கேட்க வேண்டிய பாடல்-காணொளி (03.01.2012)
புலத்தில் தஞ்சமடைந்த போராளிகளை போர்க் குற்றவாளிகள் ஆக்க சிங்கள அரசு திட்டம். (02.01.2012) 
::| Latest News
 

Site Created By: Thiliepan