.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு
Friday, 03.10.2014, 09:30pm (GMT)

தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெறும்
 
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் விசமிகளால் பரப்பப்பட்டு வருகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சிங்களமும், இந்தியாவும் தெரிவித்துவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவாக இருந்த புலம்பெயர் கட்டமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை புறக்கணித்து, தாமே இனி வரும் காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு என்ற போக்கில் செயற்பட ஆரம்பித்துள்ளதும் அனைவரும் அறிந்ததே.

முல்ளிவாய்க்கால் பேரழிவின்  பின்னர் பல்வேறு குழப்பங்களின் மத்தியிலும் பிரித்தானியாவில் வழமை போன்று 2009,2010 ஆம் ஆண்டுகளில் மாவீரர் நாள் நிகழ்வு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் எக்ஸ்செல் மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 2011,ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வு வழமை போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் எக்ஸ்செல் மண்டபத்தில்  நடைபெறவிருந்த மாவீரர்நாள் நிகழ்வை புலம்பெயர் புல்லுருவிகள் பலரின் நய வஞ்சக செயற்பாடுகளினால் tcc.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற போர்வையில் முன்னை நாள் E.P.R.L.F உறுப்பினர் ஒருவரின் தலைமையில் செயற்பட்ட குழுவினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. 

அத்தோடு அதே எக்ஸ்செல் மண்டபத்தில் TCC,யினர் தாம் மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு முடியாமல் போன நிலையில் ஐந்திற்கும் மேற்ப்பட்ட இடங்களில் சிறு சிறு நிகழ்வாக நடத்தி அதில் ஒரு மண்டபத்தில் தமிழீழ தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி தேசியக் கொடிக்கு களங்கம் ஏற்படுத்தியதொடு மாவீரர் நாள் நிகழ்வையும் களங்கப்படுத்தினர் TCC,என்கிற குழு. 

அதேவேளை இந்த நயவஞ்சக செயற்பாட்டை முறியடிக்கும் வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் உடனடியாக செயற்பட்டு வேறு ஒரு இடத்தை தெரிவு செய்து அங்கு வழமையை விட மிகப்பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வு ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த எழுச்சி முக்கு நிகழ்விற்கு முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறியிருந்த போராளிகள் தம்மாலான சகல விதமான ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர்.

TCC,என்கிற குழுவை தமிழீழ தேசியத் தலைவர் உருவாக்கியதாகவும் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். உண்மையில் இந்தக் குழுவை யார் உருவாக்கினார்கள், எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது, முதல் முதல் எந்த நாடில் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை அப்படி தெரிந்திருந்தால் தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது என்ற உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட மாட்டார்கள்.

இதை எதிர்பார்த்திராத E.P.R.L.F இன் முன்னைநாள் உறுப்பினரின் தலைமையிலான குழு 


 இந்தக் குழுவின் செயற்பாடுகளை நம்பிய பல தேசிய செயற்பாட்டாளர்கள் அவர்கள் பின்னால் செயற்பட ஆரம்பித்தன. இந்தச் செயற்பாடுகளை எதிர்த்து 


பல தேசிய செயற்பாட்டாளர்களையும், முள்ளிவாய்க்கால் பேரழிவில் இருந்து உயிர் தப்பிய போராளிகளை, துரோகிகள் என முத்திரையும் குதியதொடு, பல்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தி மக்கள் மத்தியில் இருந்து அவர்களைப் புறந்தள்ளவும் திட்டமிட்டனர்.

 அனைவரும் அறிந்ததே.

அதன் பின்னர் ஒரு வார கால நேர இடைவெளியில் லண்டனில் முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் 2011 மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றதையும், அதனைத் தொடர்ந்து 2012, ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வும் ஏதே நினைவுத் திடலில் நடைபெற்றதும் வரலாற்றுப் பதிவு.இம்முறையும் பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதனைக் குழப்பும் வகையில் பிறிதொரு குழு அனைவரும் ஒன்றுபட்டு ஒரே நிகழ்வாக EXCEL மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என தெரிய வருகிறது.

எதிர்வரும் நவம்பர் 27, இல் உலகப் பரப்பெங்கும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளிலெல்லாம் நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வு தொடர்பில் பிரித்தானியாவில் வெளிவந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பிரித்தானியா தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தை ஈழம்5.இணையத்தின் சார்பில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தை தொடர்புகொண்டு கேட்டபொழுதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..

குறிப்பாக 2009 இன் பின்னரான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விரோதமாக, தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்த, சில முன்னணி செயற்பாட்டாளர்கள், தமக்கு கீழ் செயற்பட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சில சலுகைகளை வழங்கி தமக்குக் கீழ் தொடர்ந்தும் செயற்படும் நிலையை உருவாக்கியுள்ளதோடு, அவர்களின் சலுகைகளை ஏற்று செயற்பட மறுத்தவர்கள் அனைவரையும் துரோகிகள் என முத்திரை குத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியதும் அனைவரும் அறிந்ததே.

மாவீரர் நாள் எமது மக்களுக்கான தேச விடுதலை நோக்கி அனைவரையும் தெளிவான பாதையில் உறுதியுடன் எழுச்சி கொண்டு பயணிக்க வைக்கும் ஒரு மாபெரும் எழுச்சிமிகு புனித நாள். அதனை தான் தோன்றித் தனமான முறையில், தன்னிச்சையான ஒரு நிதி சேகரிப்பு நிகழ்வாகவும், தமது குழுவின் பெயரை தொடந்தும் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாகவும் நடத்துவதற்கு சிலர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். இதில் உண்மைக்குப் புறம்பான வகையில் அனைவரையும் ஒன்றிணைத்து இம்முறை மாவீரர் நாள் நிகழ்வை  EXCEL மண்டபத்தில் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்தக்கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை.

அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே நிகழ்வாக நடத்துவதற்கு பல முயற்சிகள் நடைபெற்ற பொழுதும் அதில் பயன் எதுவும் கிடைக்கவில்லை, திட்டமிட்ட வகையில் சம்மந்தப்பட்ட நபர்கள் உரிய பதில்களை வழங்காமல், காலம் கடத்தப்பட்டு இழுத்தடிப்பு வேலைகளை நயவஞ்சக சூழ்ச்சியுடன் செயற்பட்டு வந்த நிலையில் இந்த தகவலை இன்று நாம் உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.

இந்த சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்ட விடையங்கள் தொடர்பிலும் ஆதாரங்களுடன் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத அமைதிப்படுத்தலின் பின்னர் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும், போராளிகள் மத்தியிலும் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் பின்னணியிலான பட்டறிவுகளின் அடிப்படையில், தவறுகளைத் திருத்தி எதிர்வரும் 27-11-2013, புதன் கிழமை அன்று லண்டனில் மாவீரர் நாள் நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் மாபெரும் எழுச்சிமிகு நிகழ்வாக நடைபெறவுள்ளது.

வெளிப்படைத் தன்மையுடன் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் இவ்வருட 2013 தேசிய மாவீரர் நாள் நிகழ்வுக்கான செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச் செயற்குழுவின் ஊடாக ஆரம்ப கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகளை நோக்கி உறுதியாக நகர்கின்றோம். இச் சூழலில் சில குழப்பகரமான செய்திகள் சில விசமிகளாலும், சுயநலன் விரும்பிகளாலும் சுவரொட்டிகளாகவும் மின்னஞல்கள் ஊடாகவும், கைத்தொலைபேசி ஊடான குஞ்செய்திகள் வாயிலாகவும் பரப்பப்பட்டும் வருகிறது. 

அத்தோடு "தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்" எனும் பெயரில் போலியான விளம்பரங்களையும், செய்திகளையும் மக்களைக் குளப்பும் நோக்கோடு வெளியிட்டும் வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. 

மாவீரர்களைக் களங்கப்படுத்தும் இவ்வகையான செயற்பாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்களாகிய நீங்கள் போலியானதும், குளப்பகரமானதுமான இவ்வாறான செய்திகளை புறம்தள்ளி எவ்வித குழப்பங்களும் இன்றி இவ் வருடமும் வழமைபோல் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நாள் எழுச்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழீழ தேசத்தின் பிறப்பிற்காக, சகல விதமான சுகபோக வாழ்வையும் துறந்து தம்மையே அர்ப்பணித்த மாவீரர்ச் செல்வங்களை நினைவுகூரும் இந்த புனித நாளில், அவர்களின் தியாகத்தை எம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாக, அனைவரும் ஓரிடமாக ஒன்றுகூடி ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை சாய்த்து அகவணக்கம் செலுத்தி, அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளிலும், அவர்களின் திருவுருவப் படங்களிலும் மலர்களைத் தூவி வணக்கம் செலுத்தி, எத்தடை வரினும் எமது மாவீரர்களின் இலச்சியக் கனவுகளை நனவாக்கும் வரை நாம் எந்த தீய சக்திகளுக்கும் அடிபணிந்துவிடப் போவதில்லை என்பதை உறுதி கூறி,  தமிழீழ காவல் தெய்வங்களான எங்கள் புனிதர்கள் மீது சத்தியம் செய்துகொள்வோம். 

இதுவே இன்றைய காலச் சூழலில் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

எமது மக்கள் சிந்திய இரத்தமும், எமது மாவீரர்கள் புரிந்த தியாகமும் வீண் போகாதிருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தற்போது செயற்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் செயற்குழுவானது வெளிப்படையானது. இக்குழு யாரையும் ஒதுக்கியோ, யாரையும் புறம்தள்ளியோ செயற்படவில்லை. சுயநலமற்று இதயசுத்தியோடு தமிழ்த் தேசிய விடுதலையை நேசிக்கும் அனைவரையும் இணைத்தே செயற்படுகிறது.

இதுவரை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றிருந்தால் அதனை சுட்டிகாட்டும் கடமை தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது. இதே போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் மக்களாகிய நீங்கள் வழங்க முடியும் எனவும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கடந்த காலங்களில் தெரிவித்துருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எம்மால் செயற்படுத்தப்படும் சகல பணிகளும் ஊடகங்கள் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் என்பதையும், அவை எம்மால் அனுப்பப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த எமது இணையத்தளத்தில் http://www.tnrf.co.uk/ சென்று அவற்றை உறுதி செய்து கொள்ளலாம். என தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தினை எமது செய்தியாளர் தொடர்புகொண்டு மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக கேட்டபொழுது தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் விபரமாக ஊடக அறிக்கையின் மூலம் தமது இணையத்தில் இணைக்கப்படும் எனவும் பின்னர் உடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தால் எமது இணையத்திற்கு தெரிவிக்கப்படுள்ளது.

பின்குறிப்பு:-

அண்மைக்காலமாக குழப்பகரமான பல செய்திகளை வெளியிட்டு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் குழப்பங்களை விளைவிக்கும் செயலில் இறங்கியுள்ள சில ஊடகங்கள் தொடர்பிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடம் ஈழம்5 இணையம் கேட்டுக் கொள்கிறோம்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)
சர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)
மன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)
போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன்  (31.01.2014)
சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)
ஜெனிவா செல்வதை தவிர்க்க முடியாத காரணங்களால் தவிர்த்துள்ளார்-அனந்தி சசிதரன் (30.01.2014)
விடுதலைப் புலிகள்-கூட்டமைப்பு உறவு குறித்து விசாரிக்கப் போவதாக மிரட்டும்-சிறிலங்கா (29.01.2014)
மூவரின் தண்டனைக் குறைப்பு இன்று முடிவு (29.01.2014)
முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல அதற்கு முன்னரே இனவழிப்பு நடைபெற்றுள்ளது-G.T.F (28.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan