.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில்
Wednesday, 22.10.2014, 06:20pm (GMT)

பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் யார்? இலங்கை, இந்திய புலனாய்வாளர்களா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்துவந்த தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழியிலான போராட்டம் சர்வதேச அரசியல் நகவுகளுக்கு அமைவாக முன்னெடுக்க வேண்டிய காலம் இட்ட கட்டளையின் படி முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்து ஜனநாயக அரசியல் ரீதியிலான தொடர் போராட்டத்திற்கு முகவுரை எழுதி தமிழ்மக்களில் கைகளில் ஈழவிடுதலைப் போராட்டத்தை கையளித்தனர்.

அதன் பின்னரான காலப்பகுதிகள் தம்மிழீழ விடுதலைக்கான போராட்டம் அரசியல் இராஜதந்திர நகர்வுகளின் ஊடாக தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் பல்வேறு  அமைப்புக்கள் முன்னெடுத்து வந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? விடுதலைப் புலிகள் வருவார்களா? இல்லையா? இப்படியான பல்வேறு கேள்விகழுக்கும், குழப்பங்கழுக்கும், மத்தியில் குழம்பிப் போயிருந்த நிலையில், முள்ளிவாய்க்கால், இனவழிப்பின் பின்னர் ஒருங்கிணைந்த போராளிகளை புலம்பெயர் தேசத்தில் புலித்தோல் போத்திய நரிகள் மறுத்தன.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் தொடர்புகள் ஏதும் இல்லாத காரணத்தால், அவற்றை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைந்த சில முன்னணி செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய போராளிகளையும், இயக்கத்தின் பல்வேறு தேவைகளின் நிமிர்த்தம் புலம்பெயர் தேசங்களில் செயற்பட்டு வந்த போராளிகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, அவர்களை துரோகிகள் என்றும் முத்திரை குத்தினர். 

இந்த செயற்பாட்டாளர்களின் இத்தகைய நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த உண்மையான தேசிய செயற்பாட்டாளர்கள் பலர் போராளிகளுக்கு ஆதரவாக செயற்பட முடிவெடுத்தனர், அவ்வாறு போராளிகளுடன் இணைந்து செயற்பட்ட வர்களையும் இந்தக் குழுவினர் விட்டு வைக்கவில்லை, அவர்களையும் துரோகிகள் எனவும், கேபி குழு எனவும், பட்டம் வழங்கி அவமானப் படுத்தி புறந்தள்ள முனைந்தனர். 

இந்த நிலையில் தான் பணவாதிகளுக்கும், தேசிய வாதிகளுக்கும் நேருக்கு நேராக முட்டி மோதத் தொடங்கினர். பணபலம் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலம்பெயர் அனைத்துகலக செயற்பாட்டாளர்கள் எனக் கூறிக் கொள்பவர்களுக்கும், பணபலம் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கும் இடையில் எதிரும் புதிருமான நிலை உருவானது. 

அதன் பின்னணியில் நடைபெற்ற பல்வேறு விடையங்கள் தொடர்பாகவும், மாவீரர் நாள் நிகழ்வை நடத்திவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் நீங்கள் அறிந்தவை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என மக்களால் வழங்கப்பட்ட பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடியவர்களுடன், புலித்தோல் போத்திய நரிகள் பலவும் இணைந்து தேசிய சொத்துக்களை தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதும், சுருட்டிக் கொண்டதும், அந்தப் பணத்தின் ஊடாக இன்று வர்த்தக நிலையங்களையும், சொகுசு வாகனங்களையும் அனுபவித்து ஏப்பம் விட்ட இந்தக் குழு இன்று தமது நெருங்கிய உறவினர்களுக்கு பல்வேறு நாடுகளிலும், நகரங்களிலும் வர்த்தக நிலையங்களை வாங்கிக் கொடுத்துள்ளது பல்வேறு ஆதாரங்களுடன் வெளிக்காட்டி நிற்கின்றது.

இப்படியான நிலையில் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகிவரும் தீபம் தொலைக்காட்சியை விலைக்கு வாங்கியிருப்பதும், அதனை வாங்கியவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து வெளியேறியிருப்பதும் இவர்களின் செயற்பாடுகளை வெளிப்படையாக காட்டி நிற்கின்றது.

தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பணம் இல்லை என்று கூறியவர்கள், இன்று தொழிலதிபர்களாகவும், செல்வந்தர்களாகவும், வலம் வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாடசாலைகளுக்குச் சென்று படிப்பைத் தொடர முடியாத நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கும், எந்த விதமான உதவிகளும் செய்யாது இருந்துகொண்டு, உதவிகளை வழங்குபவர்களை துரோகிகள் என முத்திரை குத்துவது வேடிக்கையானது.

மாவீரர் நாள் நிகழ்வும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும்.

கவிஞர்.திரு.இராஜமனோகரனும், மாவீரர் நாள் நிகழ்வும் 

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் பிரித்தானியா உருவாக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விற்கு, மாறி மாறி பல்வேறு பொறுப்பாளர்களாக வந்த தனம், கமல், மகேஷ், அருட்குமார், உதயனன், இராஜமனோகரன், உள்ளிட்ட பலர் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் பிளவுகளை ஏற்படுத்தி வந்தார்களே தவிர, உருப்படியாக எந்தவித ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பது இந்தக் குழுவின் கடந்தகால பதிவு.

இப்படியாக குழப்பங்களை ஏற்படுத்திவந்த நிலையில் இன்று கவிஞர்.திரு.இராஜமனோகரன் அவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

கவிஞர் இராஜமனோகரன் அவர்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழுவை பொறுப்பேற்று நடத்தத் தொடங்கியுள்ள நிலையில் அவர் முன்னெடுத்த சில செயற்பாடுகள் வரவேற்றத் தக்கதாக அமைந்திருந்தது. 

பிளவுபட்ட மாவீரர்நாள் நிகழ்வை ஒன்றுபடுத்தியது.

பிரித்தானியாவில் கடந்த இரண்டு வருடங்களாக இரு நிகழ்வுகளாக பிளவுபட்டு, மாபெரும் மக்கள் கட்டமைப்பாக உணர்வெழுச்சியுடன் தாயக உணர்வுகளைத் தாங்கி போராளிகளும், மக்களும் இணைந்து ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில்  மாவீரர் நாள் நிகழ்வை நடத்தியது அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததோடு, ஒரு வகையான மன நிறைவையும் ஏற்ப்படுத்தி இருந்தது. 

மறுபுறத்தே ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வழமை போல் பணம் சேகரிக்கும் நிகழ்வாக   பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டதும், கடந்த இரண்டு மாவீரர்நாள் நிகழ்வு எச்செல்லில் என்ற பிரமாண்டத்தைக் காட்டி, சிறு மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்தியதும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை சினம் கொள்ள வைத்தது.

கடந்த வருடம் எக்ஸ்செல்லில் சிறிய மண்டபத்தில் மாவீரர்நாள் நிகழ்வை நடத்தி மக்களை ஏமாற்றிய நிலையில், எக்ஸ்செல் என்ற பிரமாண்டத்தைக் காட்டி வழமையான மண்டபத்தில் என பரப்புரை செய்து,  சிறிய மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்தியது அங்கு சென்ற மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. 

பின்னர் முருகதாசன் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்ளாததையிட்டு மனம் வருந்தியதும், 2013,இல் முருகதாசன் திடலில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்வதென முடிவும் எடுத்திருந்தனர்.

முருகதாசன் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு எந்தவொரு ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் அமைதியாய தாயக உணர்வுகளைத் தாங்கி மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்வில் குளிரையும், மழையையும், பொருட்படுத்தாமல் 25,முதல் 30, ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர், நிகழ்வு நிறைவடையும் நேரம் வரை மக்கள் வருகை தந்த வண்ணம் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

முருகதாசன் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுக்கு மக்களின் ஆதரவுவும், வரவேற்பும் அதிகரித்து வந்த நிலையில், 2013, இல் நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வை தடுத்து நிறுத்த பல முயற்சிகளை முன்னெடுத்திருந்த ஒருங்கிணைப்புக் குவினர் அதில் வெற்றியும் அடைந்தனர்.

இம்முறை எக்ஸ்செல் மண்டபத்தில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்விற்கு 5,ஆயிரம் மக்கள் கூட வரமாட்டார்கள் அதனால் சிறிய அளவிலான மண்டபத்தை எடுத்தால் போதும் என்ற முடிவுக்கு தனம் அவர்களின் திட்டமிடலின் கீழ் கவிஞர் இராஜமனோகரன் அவர்களின் தலைமையிலான குழு வந்துள்ளது. அதுவும் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வை தடுத்து நிறுத்தினால் கொஞ்சம் அதிகமான மக்களை இங்கு வரவழைக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில், எப்படியாவது முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள நிகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தீவிர முயற்ச்சியில் ஒருங்கிணைப்புக் குழுவினர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் எக்ஸ்செல் மண்டபத்தை பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் பொறுப்பு நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் சுதா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் தான் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வை ஒரே இடத்தில் நடத்துவதற்கான திட்டத்தின் அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல்களை டேவிட், சுதா, ஆகிய இருவரும் முன்னெடுத்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தை குழுவில் ஒருங்கிணைப்புக் குழு சார்பில். சுதுமலைக் கவிஞர், இராஜமனோகரன், மதுரா, சோபனா, ஆகியோருக்கும். தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வை பிரித்தானியாவில் வழமையாக நடத்திவரும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் http://www.tnrf.co.uk/ சார்பில் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த போராளி தும்பன், மற்றும் அமர்நாத், கண்ணன், ஆகியோருக்கும் இடையிலான பல சுற்று பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.

மாவீரர் நாள் நிகழ்வு இம்முறை ஒரே நிகழ்வாக நடத்துவதற்கு கவிஞர், இராஜமனோகரன் அவர்களின் தலைமையிலான குழு முன்னெடுத்திருந்த செயற்பாட்டில் வெற்றியும் கண்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இது தொடர்பில் தெரியவருவதாவது..

பிரித்தானியாவில் கடந்த காலங்களில் இரு பிரிவுகளாக நடைபெற்றுவந்த மாவீரர் நாள் நிகழ்வு, இம்முறை ஒரே நிகழ்வாக இரு பிரிவினரும் ஒன்றுபட்டு வேலைத்திட்டங்களைப் பகிர்ந்து 2013, தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வு இம்முறை எக்ஸ்செல் மண்டபத்தில் நடத்துவதற்கான ஒரு பேச்சு வார்த்தையில் இராஜமனோகரன் தலைமையிலான அணி ஈடுபட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பான தலைமைச் செயலகத்தின் பிரித்தானியாவுக்கான செயற்குழுவின் பொறுப்பாளர் தும்பன் அவர்களை, தேசிய செயற்பாட்டாளர்களான, சுதா,மற்றும் டேவிட் பரராஜசிங்கம், ஆகியோரின் துணையுடன் ஒருங்கிணைப்புக் குழுவின் கவிஞர் இராஜமனோகரன் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இந்தக் கலந்துரையாடலின் போது லண்டனில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வை ஒரே இடத்தில் ஒரே நிகழ்வாக அனைவரும் ஒன்றிணைந்து நடத்துவதற்கு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து நடைபெற்ற பல சுற்று சந்திப்புக்கள் கலந்துரையாடல்களின் பயனாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர்  போராளிககளை ஏற்க மறுத்து, அவர்களைத் துரோகிகளாக சித்தரித்து தான் தோன்றித் தனமாக செயற்பட்ட முன்னை நாள் செயற்பாட்டாளர்கள் எடுத்த தவறான முடிவுகள்  போராளிகளுக்கும், அவர்களுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளை வலுப்படுத்தியது. போராளிகள் மக்களின் ஆரதவுடன் தமது அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளை சில அமைப்புக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் செயற்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் இந்த முரண்படும் நிலை தொடர்ந்துக் கொண்டு போனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் உருவாகிவரும் தடைகளையும், சிக்கல்களையும் கணிப்பிட்டு, மக்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும், தாயகத்தில் தேர்தல் ஊடக ஒன்றுபட்ட சக்தியாக மக்கள் வழங்கிய அணையையும் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளையும் கருத்தில் கொண்டு அதற்கு அமைவாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற போராளிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக சில நிபந்தனைகளுடன் இந்தவருட மாவீரர் நாள் நிகழ்வை இணைத்து உணர்வெழுச்சியுடன் நடத்துவோம்.

அதுவே இன்றைய சூழலில் பல்வேறு மன விரக்தியில் வாழ்ந்து கொடிருக்கும் தமிழீழ விடுதலைக்காய் தமது, தாய், தந்தையர்களை, பிள்ளைகளை, கணவனை, மனைவியை, உறவுகளை, சக போராளிகளை, நண்பர்களை மாவீரர்களாக கொடுத்த அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் முகமாகவும்,  இந்த ஒன்றினைவை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

யாரும், யாரையும் ஏமாற்றும் நோக்கங்கள் இல்லாமல், மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களையும், அவர்களின் இலச்சியக் கனவுகளையும் மதித்து, அவர்களின் இலக்கை அடையும் வழிகளின் ஊடாக நாம் பயணிக்க வேண்டும்.

எமது தேசத்தின் புதல்வர்களை வணங்கி உறுதி எடுத்துக் கொள்ளும் மாவீரர்நாள் நிகழ்வு இம்முறை அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே இடத்தில் நடைபெருவுள்ளது எனும் செய்தி மக்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ள நிலையில் அதனை தகர்த்தெறியும் வகையில், எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இன்னும் ஒரு குழு தனியாக வேறு ஒரு இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகிறது.

இது தொடர்பாக நாம் தகவல்களை அறிந்துகொள்ள முயன்ற பொழுது எமக்குக் கிடைத்த தகவல் எம்மை மிகவும் குழப்பத்திற்குள் தள்ளியது. ஆம் அவர்கள் யார் என்பதை அறிந்தால் நீங்களும் தான் குழம்பிப் போவீர்கள்.

ஒன்றாக நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வை இரண்டாவது இடத்தில் நடத்துவதற்கு முயற்சிகளை எடுத்திருப்பவர்கள் வேறு யாரும் அல்ல. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் தாமே புலிகள் என முட்டை இடாமல் கொக்கரித்துக் கொண்டு திரியும் சிவன்தன், பரமேஸ்வரன், வைத்தியர் அருட்குமார், சங்கர், மதுரா, சோபனா, உள்ளிட்ட குழுவினரே  லண்டன் அலைக்ஸ் சாண்டர் பலஸில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் நோக்கில் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். 

லண்டன் அலைக்ஸ் சாண்டர் பலசை நிகழ்வுக்காக பதிவு செய்ய கடந்த 20,ஆம் திகதி அங்கு சென்ற சிவன்தான், சோபனா, தலைமையிலான குழுவினர் மண்டபத்தை பார்வையிட்டதோடு ஏற்படப்போகும் செலவு விபரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர். அனால் அங்கு இரண்டாயிரம் இருக்கைகள் மட்டுமே கிடைக்கும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ள காரணத்தால் அவேகள் வேறு ஒரு மண்டபத்தை நோக்கியும் சென்றுள்ளனர்.

திடீரென இந்தக்குழு ஏன் இரண்டாக நிகழ்வை செய்ய முயற்சிக்கின்றது என்ற குழப்பத்தில் மேலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் ஒரு சிலரிடம் வினவிய பொழுது மேலும் ஆத்திரமடையச் செய்யும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அவை யாதெனில்,,,,

மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்காக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு எக்ஸ்செல் மண்டபத்தை பதிவு செய்து கொடுப்பவர் சுதா என்கிற தேசிய செயற்பாட்டாளர் என தெரியவருகிறது, அந்த மண்டபத்தை சோபனா என்பவரின் தாயாரின் பெயரில் தான் சுதா என்பவரால் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாயார் தான் எக்ஸ்செல் மண்டபத்தில் மாவீரர்களுக்கான பிரதான சுடரினை வழமையாக் ஏற்றுபவர்.

மண்டபத்தை பதிவு செய்து கொடுத்த சுதா என்கிற தேசிய செயற்பாட்டாளர் மண்டபத்தை பதிவு செய்து கொடுக்கும் பொழுதே ஒரு நிபந்தனையை கவிஞர் ராஜமனோகரன் அவர்களின் தலைமையிலான குழுவி டம் முன்வைத்துள்ளார். 

அது என்னவெனில், இம்முறை மாவீரர் நாள் நிகழ்வு இரண்டு பிரிவுகளாக நடக்காமல் ஒரே நிகழ்வாக நடக்க வேண்டும், அதற்காக போராளிகளையும் ஒருங்கிணைத்து வேலைகளையும் பகிர்ந்தளித்து அனைவரையும் உள்வாங்கி மிகப்பெரும் உணர் வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை ஆகும். 

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டே கவிஞர் இராஜமனோகரன் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை எடுக்கிறார், அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார், ஆனால் இந்த ஒருங்கிணைவை விரும்பாத சிவந்தன், சோபனா குழுவினர், போராளிகளுடன் இராஜமனோகரன்  அணியினர் இணைந்து கொண்டதை தவிர்த்துக் கொள்ளுமாறும், ஒரே ஒரு மாவீரர் நான் நிகழ்வுதான் நடக்க வேண்டும் அதுவும் நாம் செய்யும் நிகழ்வு  மட்டும் தான் நடக்க வேண்டும். 

இதற்குள் இந்தப் போராளிகள் என்றோ, தலைமைச் செயலகம் சார்ந்தோ எவரும் எமது குழுவுக்குள் உள்வாங்கப்படக் கூடாது. அவர்களை இதில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் இதில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் அதற்கு இராஜமனோகரன் அவர்களும் சுதாவும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சிவந்தன், சோபனா குழு அடம்பிடித்தது.

இதனை இராஜமனோகரன் அணியினர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர், அனைவரும் ஒன்றுபட்டே இந்த மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும், அவர்கள் உள்ளே வரக் கூடாது என்றால் அவர்கள் முருகதாசன் திடலில் மாவீரர் நாள் நிகழ்வை வழமை போன்று செய்வார்கள் அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என வாதிட்ட நிலையில், இந்த விடையம் சுதா,டேவிட் இருவரின் கைகளுக்குப் போகிறது, 

சுதா அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நிகழ்வாகவே இம்முறை மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் அதனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது, தடுத்து நிறுத்த முனையவும் கூடாது  அப்படி தடுத்து நிறுத்த முனைந்தால் விளைவுகள் வேறு விதமாக அமையும், இன்றைய தேவை உணர்ந்து அனைவரும் ஒன்றினைந்தே நிகழ்வை செய்ய வேண்டும் என கண்டிப்பாக் கூறிய நிலையில் தான் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் விரிசல் ஏற்படுகிறது. 

அதற்கான மறைமுக காரணமும் உண்டு என விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சுதாவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சுதாவை இந்தக் குழுவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் சிவன்தன்,பரமேஸ்வரன், அருட்குமார், சோபா, மதுரா, நித்தி, பகி, சங்கர் உள்ளிட்ட பலர்,எக்ஸ்செல் மண்டப நிர்வாகிகளிடம் சென்று,சோபனா அவர்கள் தமது தாயாரின் பெயரில் தான் மண்டபம் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆகவே இனிவரும் நாட்களில் மண்டப ஒழுங்குகள் தொடர்பாக தம்முடன் மட்டுமே தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும், மண்டபத்தை பதிவுசெய்ய உதவிய சுதா என்பவர் எமது நிர்வாக உறுப்பினர் இல்லை, அவர் ஒரு இடைத் தரகர் மட்டுமே, அவருக்கு நாங்கள் வளங்க வேண்டிய தரகுப் பணத்தை வழங்கிவிட்டோம் ஆகவே அவர் இனி மண்டபம் தொடர்பில் தலையிட மாட்டார் தமது பெயருக்கே அனைத்தையும் மாற்றித் தருமாறு தெரிவித்துள்ளனர்.

இதனால் குழப்பமடைத்த எக்ஸ்செல் நிர்வாகம் சுதா அவர்களைத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளனர், அதற்கு சுதா வழங்கிய பதில் வருமாறு; 

எமது நிர்வாகத்திற்குள் ஒரு சிறிய கருத்து முரண்பாடு அதனால் தான் சம்மந்தமில்லாத சிலர் முரண்பட்டு நிற்கின்றனர், அதனையிட்டு நீங்கள் குழம்பத் தேவையில்லை அனைத்தும் ஏற்கனவே ஒப்பந்தத்தில் வரையடுக்கப்பட்டதன் படி நடைமுறைப் படுத்துங்கள். நான் இது தொடர்பில் நாளை உங்களை நேரில் வந்து சந்திக்கும் பொழுது மேலதிக தகவல்களை வழங்குகிறேன் என சுதா அவர்கள் எக்ஸ்செல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு இராஜமனோகரன் அவர்களைத் தொடர்புகொண்டு நடந்தவற்றை தெளிவுபடுத்தியுள்ளார்.

அதைக் கேட்டு ஆத்திரமடைத்த கவிஞர் இராஜமனோகரன் சம்மந்தப்பட்டவர்களுடன் கொஞ்சம் காரசாரமாக கததிதுள்ளார், அத்துடன் எச்செல் நிர்வாகத்திடமும், சுதாவிடமும் மன்னிப்புக் கேட்க்கும் படி கண்டிப்புடன் உத்தவிட்டுள்ளார், இதனை சிவன்தன் சோபனா குழுவினர் ஏற்க மறுத்துள்ளதோடு, எக்ஸ்செல் மண்டபத்திற்கு சுதாவை வரவளைத்து மிரட்டியும் உள்ளனர். இத்துடன் அடங்கிப் போகவேண்டும் இல்லையெனில் நடப்பதே வேறு என சிவந்தன்,பரமேஸ்,பகி,அருட்குமார், சங்கர் குழு மிரட்டியுள்ளனர்.

சோபனா அதைவிட ஒருபடி மேலே பேய் போராளிகளைக் கொண்டுவந்து எங்களுடன் சேர்ப்பதற்கு நீ யார்? என்றும் அதற்கு உனக்கு என்ன தகுதி உள்ளது? என்றும் உன்னுடைய வேலை முடிந்துவிட்டது அம்மாவின் பெயருக்கு அனைத்தையும் மாற்றித் தந்துவிட்டு சத்தம் போடாமல் இங்கிருந்து போய்விடு என மிரட்டியதை தொடர்ந்து, மேலதிகமாக எதுவும் கதைக்காமல் அங்கிருந்து சுதா வெளியேறிவிட்டார். 

அதன் பின்னர் நடந்த சில சம்பவங்கள் கவிஞர் இராஜமனோகரன் குழுவின் கைகளில் இருந்து பறிபோகும் நிலையும் உருவாகிய நிலையில் அதனை விட்டுவிட்டு வேறு மண்டபத்தில் நிகழ்வை நடத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர் இந்தக் குழுக்கள்.

அதன் பின் இந்தக் குழு தலையில் கையை வைத்தபடி we want exsel என கத்த ஆரம்பித்துள்ளனர், ஆனால் அங்கிருந்து கத்துவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி சிவன்தன் சோபனா குழுவை எக்ஸ்செல் நிர்வாகம் வெளியேற்றியது.

அதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோர மறுத்ததோடு, தாம் வேறு இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வை செய்யப் போவதாக கூறி வேறு மண்டபம் தேடி அலையத் தொடங்கியுள்ளனர் இந்த சிவன்தான், சோபனா குழுவினர். அதன் முதற் கட்டமாக அலைக்ஸ்சாண்டர் மாளிகையை பார்வையிட்டுள்ளனர், அதைத்தொடர்ந்து வேறு மண்டபங்களையும் பார்வையிட்டு வருகின்றனர். அத்தோடு இந்தக்குழுவை சமாதானப் படுத்தும் நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தான்தோன்றித் தனமாக செயற்படும் சிவன்தன் தலைமையிலான குழு கேபியின் நெருங்கிய நண்பரும், கேபியை பலதடவை இரகசியமாக சந்தித்தவரும், தொடர்ந்தும் கேபியுடன் தொடர்பில் இருக்கும் வைத்தியர் அருட்குமார் அவர்களின் துணையுடன் குழப்பங்களை ஏற்படுத்தி, போராளிகளைத் துரோகிகள் ஆக்கிவிட்டு, தாங்கள் தான் புலிகள் என்ற நினைப்பில் தெய்வீகத் தம்பியின் பின்னால் நின்று கோகுல அண்ணனின் மாவீர நாள் நிகழ்வையும் பிளவுபடுத்தக் குறிவைக்கும் இந்தக் குழு யாரின் பின்னணியில் செயற்படுகின்றது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு (03.10.2014)
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)
சர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)
மன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)
போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன்  (31.01.2014)
சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)
ஜெனிவா செல்வதை தவிர்க்க முடியாத காரணங்களால் தவிர்த்துள்ளார்-அனந்தி சசிதரன் (30.01.2014)
விடுதலைப் புலிகள்-கூட்டமைப்பு உறவு குறித்து விசாரிக்கப் போவதாக மிரட்டும்-சிறிலங்கா (29.01.2014)
மூவரின் தண்டனைக் குறைப்பு இன்று முடிவு (29.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan