.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்
Wednesday, 29.10.2014, 09:56am (GMT)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்
 
ராம்- தெய்வீகன் குழுவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு!

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு செயற்குளுவாக செயற்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் அங்கம் வகிக்கும் போராளிகள் சிலரை சலுகைகளை வழங்கி தமது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஒருங்கிணைப்புக் குழுக்களின் வியாபாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அண்மையில் பிரித்தானியாவுக்கு வந்து குடும்பத்துடன் வசித்துவரும் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் இருவரை அணுகி அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தாம் செய்து தருவதாகவும், வீட்டு வசதி, வாகன வசதி, உதவியாளர்கள் உட்பட மாதாந்தம் 2000 - 3000,பவுன்ஸ் வரை கையில் தருவதாகவும் தேவைப்படின் வர்த்தக நிலையம், அல்லது எரிபொருள் விற்பனை நிலையம் வாங்கித் தருவதாகவும், தங்களுடன் வந்து இணைந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்த நிலையில் பிரித்தானியாவில் முருகதாசன் நினைவுத் திடலில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 27, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நெருங்கிவரும் நிலையில் பிரித்தையாவில் திருமதி.இரத்தினேஸ்வரி அம்மா அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால், போராளிகள், மக்களின் ஆதரவுடன் பல இடங்களிலும் எக்ஸ்செல், மண்டபத்திலும், 2011,இன் பின்னர் முருகதாசன் நினைவுத் திடலிலும் நடைபெற்று வந்த மாவீரர் நாள் நிகழ்வை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் இந்தக் குழு இறங்கியுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

வன்னியில் போர் உக்கிரமடைந்த காலப்பகுதிகளில் பல போராளிகள் அவசர சிகிச்சைகளுக்காக தாயகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், சிகிச்சைகளை முடித்துக்கொண்ட நிலையிலும் அவர்கள் தாயகம் திரும்பாமல் சிகிச்சை பெற்றுவந்த நாடுகளில் தங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தாயகத்தை விட்டு வெளியேறி புலம்பெயர் தேசங்களுக்கு வந்த போராளிகள் பல்வேறு நாடுகளில் இருந்தும் மீள் ஒருங்கிணைந்து அரசியல் ரீதியிலான அடுத்த கட்டப் போராட்டத்திற்கான செயற்பாடுகளை மக்களின் ஆதரவுடன் முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் 2011 காலப்பகுதியில் பிரித்தானியா வந்த (வயதில்) மூத்த போராளி ஒருவர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களையும் போராளிகளுடன் இணைத்து செயற்படும் முயற்சிகளை  சுதந்திரமாக நகர்வுகளின் ஊடாக முன்னெடுத்து வந்த நிலையில், அந்தப் போராளியுடன் நட்பு ரீதியில் தொடர்புகளை பேணிவந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள், இன்னள் பொறுப்பாளர்களான தனம் கமல், மற்றும் இன்றைய பொறுப்பாளரான இராஜமனோகரன் தலைமையிலான குழுவினரும் அண்மையில் அந்தப் பிரதிநிதியை தொடர்புகொண்டு உரையாடிய பொழுதே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஒருங்கிணைப்புக் குழுக்களுக்குள் அண்மைக் காலமாக சீரற்ற நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாகவும், பிரித்தானியாவுக்கான பொறுப்பாளர்கள் குழுக்களைக் கைவிட்டு ஒதுங்கும் நிலையில் உள்ளதனால் வல்வை ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான உதயனன், என்பவர் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே இராஜமனோகரன் அவர்கள் இந்தக் குழுவின் தலைமை ஒருங்கினைப்பாளராக தனம் என்பவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பொழுது மாவீரர் நாள் நிகழ்வை இலக்கு வைத்து ஒருங்கிணைந்த மாவீரர் நாள் என்ற போர்வையில் சலுகைகளுக்கு அடிபணிந்து தலைமைச் செயலகத்தின் இரண்டு உறுப்பினர்கள்  ஒருங்கிணைப்புக் குழுக்களின் கால்களில் விழுந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

இம்முறை முருகதாசன் திடலில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வுக்காக இறக்குமதி செய்யப்பட்ட கார்த்திகைப் பூக்களையும் எக்ஸ்செல் இல் நடைபெறவுள்ள நிகழ்வில் கொண்டுவந்து தருமாறும் இந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளனர்.

முள்ளி வாய்க்காலின் பின்னர் அனைத்தும் முடிந்து விட்டது என்று மூலைகளில் முடங்கிக் கிடந்த செயற்பாட்டாளர்களை மீளவும் எழுச்சிகொள்ள வைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை துரோகிகள் எனவும், பல்வேறு பெயர்களில் குழுக்களாகவும் அடையாளப்படுத்தி, போராளிகள் என்று யாரும் தங்களுடன் இணைந்து கொள்ளக் கூடாது என்று கூறிவந்த இந்த குழுக்கள் இன்று சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் பலரை கே.பி அவர்கள் வெளியில் எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதும், அதில் நிமலன் என்ற போராளி தான் தலைவருடனும், தலைவரின் சமையல் பகுதியிலும் (கிச்சினில்) நின்றதாகவும் கூறிக்கொண்டு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை நிர்வகிக்க எடுத்த முயற்சிகளும் இந்தக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்படடுள்ளதாக தெரியவருகிறது.

இதில் தெய்வீகன் என்பவர் மிக முக்கியமானவர், அதேநேரம் மிகவும் ஆபத்தானவர். இவர் சிறிலங்கா புலனாய்வாளர்களின் பிடியில் இருக்கும் ராம் அவர்களினால் தாயகத்தில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் இந்திய ரோவினரால் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும், அங்கிருந்தவாறுதமிழகத்திலும்  தாயகத்தில், இருக்கும் பல போராளிகளின் உறவினர்களையும், போராளிகளையும் மிரட்டி மிரட்டி பணம் சம்பாதித்து வருவதும் ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது.
 
தெய்வீகன் என்பவர் முள்ளிவாய்க்காலில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் தலைவரை வன்னியில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு ராம் அவர்களிடம் அழைத்துச் செல்வதற்கான பாதை தெரிவிசெயும் நடவடிக்கை ஒன்றுக்காக சிறுய படையணி ஒன்றுடன் அங்கிருந்து வேறு காட்டுப் பகுதி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர். 

ஆனால் இவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை உரிய நேரத்தில் செய்து  முடிக்காமல் காலம் கடத்தி வந்த நிலையில் தலைவர், மற்றும் தளபதிகளான பொட்டம்மான், சூசை, பாணு, ஜெயம், மாதவன், நடேசன், புலித்தேவன், போராட்டம் ஆயுத மௌனிப்புடன் நிறைவுக்கு வந்தது தாங்கள் மட்டும் தப்பினால் போதும் என்ற நிலையில் தலைவரை வெளியேற்றுவதற்கான.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
உண்ணா விரதங்களும்-தமிழீழ விடுதலைப் போரும்- 

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி 04.11.2013 திங்கட்கிழமை முதல் தொடர் பட்டினிப் போராட்டத்தை சுப்ரமணியம் பரமேஸ்வரன் என்பவர் முன்னெடுத்து வருகிறார்.

இலண்டனில்10 டவுணிங் வீதியில் அமைந்துள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக திங்கட்கிழமை இன்று மாலை 5:30 மணிக்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் பரமேஸ்வரன். இவருடன் இன்னும் இரண்டு உணர்வாளர்கள் உண்ணாவிரதப் ஒராட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை பிரித்தானியா மீளப்பெறும் வரை தொடரவுள்ள இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கில் இணைந்து அடையாள உண்ணா நோன்பை மேற்கொள்ளுமாறு பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளுக்கு பரமேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க.


உண்ணாவிரதப் போராட்டம் என்றால் என்ன? அதனை எவ்வாறு நெறிப்படுத்தி தொடரப்பட வேண்டும் என்பதை நாம் எவரும் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லை. அதற்கான முன் உதாரணமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முதல் லெப்,கேணல்,தியாகி திலீபன், மற்றும் தியாகி அன்னை பூபதி அம்மா அவர்கள் வரை உண்ணாவிரதம் என்றால் என்ன? அதை எவ்வாறு நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக தமிழீழ விடுதைப் போராட்ட வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.

தமிழக காவல்த் துறையினரால் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகளை மீளக் கையளிக்கும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தான் முன்வைத்த கோரிக்கையில் வெற்றியடைந்த பின்னர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டிருந்தார்.

அந்த வகையில் தாம் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் சம்மந்தப்பட்டவர்களால் நிறைவேற்றப்படாத நிலையில் தமது கொள்கையின் வழி நின்று, இறுதிவரை தமது  இலச்சியத்திற்காக கொண்ட கொள்கையின் வழி நின்று விலகாமல் வீரச் சாவடைந்  லெப்,கேணல்,தியாகி திலீபன், மற்றும் தியாகி அன்னை பூபதி அம்மா அவர்கள் வரை உண்ணாவிரதப் போராட்டத்தின் சிகரங்களாக தமிழீழ வரலாற்றில் பதிவாகியது மட்டுமல்லாது, உலக வரலாற்றிலும் பதிவாகும் நாளுக்காகவும் தமிழீழ தேசம் காத்துக் கிடக்கின்றது.

தமிழ்தேசிய தொலைக் காட்சியின் பணியாளராக இருந்த இசைப்பிரியா அவர்களை இராணுவத்தினர் பிடித்துச் செல்லும் காட்சியும், பின்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரில் உயிர் அற்ற சடலமும் , ஆதாரங்களுடன் சனல்4, ஊடகம் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், பிரித்தானிய இளவரசர், மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினை இலங்கை சென்று மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது, பிரித்தானியாவில் தமிழர்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருந்து பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இவர்களின் வற்புறுத்தல்கள்  காரணமாக பிரித்தானியக் குழுவின் பயணத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர், சில வேளைகளில் பிரித்தானியப் பிரதமரின் பயணம் இடை நிறுத்தப்படவும் சந்தர்ப்பங்கள் உள்ளது. 

இந்த தகவல்களை எப்படியோ நன்கு அறிந்த சிலர் தாம் திடீரென முன்னெடுக்கும் இத்தகைய ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாகவே பிரித்தானியக் குழுவின் இலங்கைக்கான பயணத்தை மாற்றங்களைச் செய்ய முடிந்தது என்றும், பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளனர் என பிரித்தானியாவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது வேறுகதை அதையும் இந்த இடத்தில் நிறுத்திக் கொள்வோம்.

சுப்ரமணியம் பரமேஸ்வரன் என்பவர் முள்ளிவாய்க்காலில் போர் உச்சக்கட்டத்தை அடைத்த வேளை, பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்த மக்கள் மீது இலங்கை அரசு இரசாயன பொசுபரசுக் கூண்டுகளை வீசி படுகொலை செய்த சந்தர்ப்பத்தில்,  தாயகத்தில் உத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதானமாகவும், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னாள் அமைந்துள்ள சிறிய, பூங்காவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தவர்.

தொடர்ச்சியாக பல நாட்கள் உண்ணா விரதத்தை முன்னெடுத்து வந்த நிலையில் பிரித்தானிய அரசு தனக்கு இரகசிய வாக்குறுதி ஒன்றை தந்துள்ளனர், அதனால் தனது உண்ணா விரதத்தை இப்பொழுது முடித்துக் கொள்வதாகக் கூறி திடீரென உண்ணா விரத்தத்தை இடைநிறுத்திய நிலையில் முச்சக்கர வண்டியின் துணையுடன் அவசர சிகிச்சை வன்டியில் அழைத்துச் செல்லப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக 30 ஏப்ரல் 2009 வெளிவந்த செய்தி;

பிரி்த்தானிய அரசின் உறுதிமொழியை அடுத்து பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கடந்த 24 நாளாக பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் “தமிழ் மறவன்”; பரமேஸ்வரனால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் பிரித்தானியா அரசாங்கத்தின் உறுதி மொழியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.இன்று மதியம் 12 மணியளவில் ஊடகங்களுக்கு உரை வழங்கும் போது பரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார்.

பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது. பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். 

அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்.

பரமேஸ்வரன் வழியில் 4 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலை

பரமேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் கைவிடப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் பரமேஸ்வரனின் வழியில் என குறிப்பிடப்பட்டிருப்தில் உள்ள நோக்கம் என்ன? அதற்கான விளக்கத்தையும் உண்ணா விரதத்தை ஆரம்பித்துள்ள மாணவர்களும் பின்வருமாறு கொடுக்கின்றனர்.

பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனுக்கு கொடுத்த உறுதி மொழி நிறைவேற முன் தமிழீழ தாயக்கத்தில் தமிழினம் அழிந்து விடுமோ என்ற பயத்தில், அந்த உறுதி மொழி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை தங்களுடைய முதன்மை கோரிக்கையாகவும், அதேவேளை  பரமேஸ்வரன் முன்வைத்த 5 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளித்தும் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்றிரவு (01.05.09) 10 மணியில் இருந்து ஆரம்பித்துள்ளனர். 

பரமேஸ்வரனுடன் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த சிவாவும் இதில் உள்ளடங்குகிறார். இது தொடர்பில் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் “எங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தின் கோரிக்கையை ஆதரித்து பல ஆயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் சுழற்சி முறையில் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடி, தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் வரை தொடர்ந்து போராட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை செய்திகள் வழியாக கேள்வியுற்ற மக்கள் அணி அணியாக நாடாளுமன்ற சதுக்கத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு புறத்தில்..

மாணவர்களின் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சில நாட்களில் பரமேஸ்வரன் மீண்டும் உண்ணாவிரத அறிவிப்பு 

சில நாட்கள் கழிந்த நிலையில் திடீரென ஒருநாள் தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் அவசர அழைப்பு ஒன்று பரமேஸ்வரனால் விடுக்கப்பட்டிருந்தது, அந்த அழைப்பின் பயனாக ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்தின் முன்னாள் குவிந்தனர். காரணம் முள்ளிவாய்க்களில் இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடத்தப் பட்டுக் கொண்டுருக்கும் இனவழிப்பு யுத்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி தமது உறவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே எந்த மூலையில் எவர் போராட்டம் நடத்தினாலும் ஆயிரக்கணக்கில் உணர்வுள்ள மக்கள் அனைவரும் அணி திரண்டு வருவது வழக்கமாக இருந்தது. 

அதனை சிலர் தாம் அழைப்பு விடுத்ததன் காரணாமகவும், தாம் அழைத்ததால் மட்டுமே  மக்கள் திரண்டு வந்தார்கள் என்று நினைப்பார்களானால் அதைவிட முட்டாள்த் தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி இன்றும் சில சுயநலவாதிகள் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். இது அவர்களின் பேராசையையும், அதைவிட அறியாமையையும் வெளிக்காட்டி நிற்கின்றது. 

அன்றைய காலப் பகுதியில் இந்தப் போராட்டங்களுக்கு முழு ஆதரவையும் திரு.சுகந்தகுமார் அவைகளின் தலைமைலான அன்றைய பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்கள், மற்றும் மக்கள் மத்தியில் பரமேஸ்வரன் பின்வருமாறு தெரிவித்திருந்தார்....

பிரித்தானியா அரசு தனக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தனக்கு வழங்கிய வாக்குறுதிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும், என்றும் வன்னியில் யுத்தம் நிறுத்தப்படும் வரை  தான் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் இந்தச் செய்தி பரவியது. அன்று மாலை பரமேஸ்வரனின் சாகும் வரையிலான உண்ணாவிரதம்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையில், இரண்டாம் நாள் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் அறிவித்தல்கள் எதுவும் இன்றி கைவிடப்பட்டிருந்தது.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் நாளில் உண்ணா விரதத்தை இடையில் நிறுத்திவிட்டு யாருக்கும் சொல்லாமல்க் கொள்ளாமல் பரமேஸ்வரன், கமல் என்பவருடன் சென்று விட்டார். அத்துடன் இவரின் உண்ணாவிரதக் கதையும் முடிந்துவிட்டது.

இதன் பின்னணியில்  

பின்னர் பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த கூடாரத்துக்குள் இருந்து இரவு நேரத்தில் மைக் டொனால் சாப்பிட்டதாக ஸ்கொட்லாந் யார்ட் காவல்த்துறையை அடிப்படையாக வைத்து பிரித்தானியாவின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் அதற்கு  எதிராகா வழக்கு நடத்தப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இருந்து சம்மந்தப்பட்ட ஊடகங்கள் பின்வாகி பரமேஸ்வரனிடம் மன்னிப்புக் கோரியதுடன், எண்பது ஆயிரம் பிரித்தானியப் பாண்ட்சை நஷ்ட்ட ஈடாக பரமேஸ்வரனுக்கு வழங்கியதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் இன்றுவரை பிரித்தானிய அரசு இவருக்கு என்ன வாக்குறுதிகளை வழங்கியது என்பது தொடர்பில் இன்னமும் ஊடகங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தெரிவிக்கப்பட வில்லை.

இந்த நிலையில் நம்பிக்கையில்லாத வகையில் அர்த்தமற்ற முறையில் சில போராட்டங்கள் தன்னிச்சையாக முன்னெடுப்பதும், பின்னர் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி இடை நிறுத்துவதும், தாம் முன்வைக்கும் கோரிக்கைகளில் இருந்து பின் வாங்குவதும், திடீர் திடீர் என தவறான செய்திகள   வெளியிடுவதும், தாம் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக கற்பனை கட்டி அறிக்கைகளை விடுவதுமான செயற்பாடுகள் இவர்களை மக்கள் மத்தியில் இருந்து இன்னும் விளக்கி வைக்குமே தவிர இவர்களை மக்களுடன் இணைத்துவைக்க உதவப் போவதில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், என வகைப்படுத்தப்பட்டே போராட்டத்திற்கான ஆதரவை வழங்கி வந்தனர். இந்தநிலையில் ஆதரவாளர்களாக செயற்பட்ட சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாக தம்மை அடையாளப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளே இன்று பல பிரிவுகளை உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது, என்பது மிக வேதனையான விடையம்.

அதே வேளை மறு புறத்தில் 

வன்னியில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் யுத்தமும் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது, எவராலும் யுத்தம் நிறுத்தப்படவில்லை, யாரும் மக்களையும் மீட்கவும் இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வேறு வழியின்றி தமிழ் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தற்காலிகமாக தஞ்சம் புகுந்தனர், அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களுக்கு என்ன நடந்தது என்பது, வேறு விதமாக இன்று இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது. 

இவ்வாறு தஞ்சம் புகுந்த நிலையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க புலத்தில் இருந்த எந்தவொரு கிளைகளோ, குழுக்களோ, அமைப்புக்களோ முன்வரவில்லை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் வவுனியாவின் புறச் சூழல் தமிழர்களின் அவலக் குரலால் அதிர்ந்த காலம் அது! குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் தமிழர்கள் தவித்த காலம் அது. இதன் பின்னனியி சிந்தித்தால் தமிழர்கள் எவ்வாறான அவல வாழ்வில் அன்று சிக்கியிருந்தனர் என்பது புரியும், ஆனால் இன்றும் மீள் குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் மெரும் துன்பத்தில் மூள்கியுள்ளனர். இது ஈழத்தமிழர்களின் தொடர்கதையாக மீண்டும் மீண்டும் தெடர்கிறது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அடுத்ததாக, தற்காலிகமாக தமிழ் மக்கள் நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நேரில் சென்று பார்வையிடுவதோடும், வாக்குறுதிகளை வழங்குவதோடும், நின்றுவிடுகின்றனர், மேலதிகமாக எதுவும் செய்யமுடியாத நிலையில் அவர்களின் பித்தலாட்டம் தொடர்கிறது.

இன்று வரை யுத்தத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் எதுவும் உரிய வகையில் வழங்கப்படவில்லை, சிறைகளில் தடுத்து வைத்திருக்கப்படும் தமிழர்களின் குடும்பங்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, பாடசாலை செல்வதற்கான வசதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை, குடியிருப்பதற்கு உரிய வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  மருத்துவ தேவைகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை, மாகாண சபைக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், அவர்களின் திட்டமிடல்கள் என்ன என்பது தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை, தாயக மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் புலத்தில் சேகரிக்கப்படும் எந்த ஒரு வருவாய்க்குமான தகவல்களும் இல்லை இப்படியான நிலையில் தாயக மக்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுக்காக பிரித்தானியாவில் மட்டும் இரண்டு இலச்சம் பவுஸ் செலவிடுவதற்கு ஒரு குழு தயாராக இருக்கிறது, இவர்களிடம் தாயகத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ ஏதாவது கேட்டால் அதற்கான பதில்கள் இல்லை. 

அமைதியும், மழுப்பல்களுமாக புறக்கணிப்பு நிலைகள் மட்டுமே நிறைய கிடைக்கிறது. தாயகத்தில் இலங்கை இனவெறியர்களால் நடத்தப்பட்ட இனவழிப்பு தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டி தமிழர்களுக்கான, தனிநாட்டுக் கோரிக்கையினை வலுப்படுத்த எந்த ஒரு உருப்படியான செயற்பாடுகளையும் தமிழர் தரப்புக்கள் முன்னெடுக்கவில்லை என்பது இன்றுவரையான பதிவு.

பிரித்தானியாவின் சனல்4- என்கிற ஊடகத்தின், ஊடகவியலாளருக்கு இலங்கையில் ஒரு அவமதிப்புச் செயல் நடைபெற்றிருக்காது போயிருந்தால் இன்று சனல்4- வின் காணொளிகளும் வெளிவந்திருக்காது. ஏதோ சனல்4- வின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையின் பயன் யாருக்கு என்றால் அதுவும் யாருக்கும் தெரியாது.

இப்படி தொடர்ச்சியாக ஆதார பூர்வமாக கிடைக்கப்பெறும் பல காணொளிகளை வெளியிட்டு வரும் சனல்4- ஊடகம் கூட இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனவழிப்பு என்று இன்றுவரை சுடிக்காடவில்லை என்பது வேதனையானது, அதற்கும் தமிழர்கள் உரிய வகையில் செயற்படவில்லை என்பதே உண்மை, புலத்தில் ஒரு பகுதி தமிழர்கள் இலங்கையில் நடந்தது போர்க் குற்றம் என வரையறுக்கின்றனர், இன்னும் ஒரு பகுதியினர் இழைகையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட இனவழிப்பு என வரையறுக்கின்றனர், இப்படியான இழுபறி, மற்றும் நான் பெரிது நீ பெரிது எனும் போக்கினால் தொடர்ந்தும் பாதிக்கப்படப் போவது தாயகத்தில் வாழும் எமது மக்களே தவிர, புலத்தில் வாழும் தமிழ் மக்கள் அல்ல என்பதை இந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சனல்4, ஊடகம், வெளியிடும் சில காணொளி செய்திகள் இலங்கை அரசும் அதன் படைகளும் தமிழ் மக்கள் மீது நடத்திய இனவழிப்பு, மற்றும் போர்க் குற்றங்கள் அடங்கிய ஆதரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதும், அந்தக் காணொளிகளின் காரணமாக சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான அமைப்புக்கள் தமது கண்டனத்தை வெளியிடுவதும், சில நாடுகள் இலங்கையின் இத்தகைய செயற்பாடுகளையும் கண்டிப்பதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

ஆனால் சனல்4, ஊடகம், வெளியிட்டுவரும் ஆதாரம் அடங்கிய காணொளிப் பதிவுகளின் ஊடாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள என்ன நடவைக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்றால்? எதுவுமே இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.

சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தி இதுவரை புலத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, அல்லது தமிழர்கள் வாழும் உலக நாடுகளின் எந்த மூலையில் என்றாலும்,தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள், தமிழக அரசியல் தலைவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்களும் பிரதி நிதிகளும் இந்தக் காநோளிகளை அடிப்படையாக வைத்து தமது பரப்புரைகளையும், விசாரணை கோரிய போராட்டங்களையும் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பது வேதனையான விடையம்.

இந்த வகையில் இரண்டு நாக்களுக்கு முன்னர் சனல்4, ஊடகம், வெளியிட்ட காணொளி செய்தியில் 2009, மே,நடுப்பகுதியில் தமிழீழ முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள், தமது ஆயுதங்களை மௌனித்ததுடன், ஆயுதப் போராட்டத்தையும் இடைநிறுத்தியிருந்தது, அத்தோடு ஐநாவின் பிரதிநிதிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் அவர்களை நம்பி போராளிகள் அனைவரையும் இராணுவத்திடம் சரணடையுமாறும், களத்தில் இறுக்கமான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர், மகளிர் போராளிகளும் அதே போல் பிரித்து எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். 

நந்திக்கடல் பகுதியில் இருந்து இராணுவத்தால் பிடிக்கப்பட்ட ( மகளிர் உள்ளிட்ட )  போராளிகள் மிகக் கொடூரமான முறையில் நிர்வாணப்படுத்தப்பட்டு, கண்கள், கைகள்  கட்டப்பட்டு இழுத்து வீசப்பட்டு சிங்கள இனவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும், இசைப்பிரியா உள்ளிட்ட பெண் போராளிக் கலைஞர்கள் பலரை உயிருடன் பிடித்த சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தினர் அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி படுகொலை செய்தது.

இன்னொரு புறத்தில் சரணடைந்த போராளிகளில், மக்கள் மத்தியில் நின்று செயற்பட்ட அரசியல் துறையின் கீழ் செயற்பட்ட அனைத்து கட்டமைப்புக்களின் மூத்த, உயர்நிலைப் போராளிகள் தனியாக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர், இது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வேறு ஒரு பகுதியில் நடைபெற்றது. 

இதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளிவராத போதிலும் காலப்போக்கில் நிச்சயம் வெளிவரும் என்பது உண்மை.
இதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளிவராத போதிலும் காலப்போக்கில் நிச்சயம் வெளிவரும் என்பது உண்மை.
xxxxx

இது பரமேஸ்வரனும் சிவாவும் இணைந்து விடுத்த ஊடக அறிக்கை.

பிரித்தானியா ,
08-04-2009 . 

எங்கள் அன்பான தமிழீழ மக்களே,
இது தமீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை.

எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள்.
தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை. அனைவரும் எமது நன்பர்களே. எமது எதிரி எதைக்கொண்டு தாக்கினானோ அதைக்கொண்டே திருப்பித்தாக்கி எமது விடுதலை போராட்டத்தை துவக்கிவைத்தார் எமது தலைவர், பாசமிகு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

எமது விடுதலைப்போராட்டத்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நம் கரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எவ்வித பின்வாங்கலும் செய்யப்போவதில்லை. எமக்கு அடுத்த சந்ததிக்கு நாம் எமது அழகான தமிழீழத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டுமே தவிர ஆயுதப்போராட்டத்தையோஅல்லது அறவழிப்போராட்டத்தையோ அல்ல.

தமிழீழத்தை போராடி பெற வேண்டியதே எமது முக்கிய கடமை. எமது இந்த அறவழிப்போராட்டமானது இந்நாட்டின் சட்டதிட்டத்திற்கு அமைவாகவே நாம் நடத்துகிறோம். ஆகவே மக்களே எவ்வித தயக்கமுமின்றி விரைந்து திரண்டு வந்து குரல் கொடுங்கள். இங்கே நாம் விதைக்கும் இந்த விதை அனைத்து நாட்டிலும் ஆழவிருச்சமாக அகண்டு விரிந்து ஆழ வேரூண்ட வேண்டும்.

அந்தந்த நாட்டில் வாழும் தமிழீழ மக்களே! கிளர்ந்தெழுந்துங்கள். இது எமக்கான நேரம், தேசியத்தலைவரே கூறியிருக்கின்றார், மாணவர்களே எமது தூண்கள். தமிழர்களையும் தமிழீழத்தையும் தாங்க அனைத்து நாடுகளிலும் அணி அணியாக திரண்டுவாருங்கள் தூண்களே! இந்த தூண்கள் என்றும் எதற்கும் சாயாத தூண்கள்.

கிபிராலும் அடிக்க முடியாதது, ஆட்லரியாலும் வீழ்த்த முடியாது, மல்ட்டிபரலாலும் மடிக்க முடியாத தூண்களே! திரண்டு கிழர்ந்து எழுந்து வாருங்கள்.

தமிழீழம் பெற விரைந்து வாருங்கள்.

அன்புடன்
பரமேசுவரன் 
சிவாRating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு (03.10.2014)
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)
சர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)
மன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)
போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன்  (31.01.2014)
சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)
ஜெனிவா செல்வதை தவிர்க்க முடியாத காரணங்களால் தவிர்த்துள்ளார்-அனந்தி சசிதரன் (30.01.2014)
விடுதலைப் புலிகள்-கூட்டமைப்பு உறவு குறித்து விசாரிக்கப் போவதாக மிரட்டும்-சிறிலங்கா (29.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan