.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்ன
Thursday, 30.10.2014, 01:02pm (GMT)

வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன்.

செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட வரலாறாக பதிவாக்க வேண்டியதன் அவசியம் என்பது காலத்தின் தேவையாகும்.

வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தப் படாதிவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படும் இனத்தின் வரலாற்றை இல்லாது ஒழிப்பதில் ஆக்கிரமிப்பாளர்கள் பிகப்பெரும் கவனம் எடுக்கின்றனர்.

தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்ததே. 

தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடி உள்ளனர்.

இதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவ மாவீரன் பண்டாரவன்னியன் எனும் தமிழ் அரசன்.

இருநூற்றிப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தாயகத்தில் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய மாவீரன் பண்டார வன்னியனின் வரலாற்றுக் கதைகள் தமிழர்களாக எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. இந்த வீரனின் தலைமையில், வரலாற்றுப் போர்  நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது வீரம் நிறைந்த கர்வம் எமக்குள் எழுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

இதற்கெல்லாம் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணியின் வீரம் நிறைந்த போராட்ட உணர்வுகள் தான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயிர் விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று இன உணர்வுதான் காரணமாக இருக்கின்றது.

பண்டாரவன்னியன் போன்று, தமிழீழ மண்ணின் விடுதலைக்காக களமாடி விதையாக வீழ்ந்த வீரப் புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலை உணர்வை ஊட்டிக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
xxx

வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம். 

ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கு எதிராக வாள் ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் சாவுச் செய்தி கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம்,ஸ்ழுழவ  அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் பூண்டு களம் சென்று சமராடிய வீரம் போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது ஏராளமானவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே யாவரும் அவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும், தோட்டாக்களுமே, பதில் சொல்லிக் கொண்டிருக்கும். 

இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது, புதையுண்டு கிடக்கும் தமிழர் வரலாறுகளை வெளிக் கொண்டுவர விளையும் சமகால புத்திஜீவிகளுக்கு, கண்டறியப்பட்ட சில தகவல்களை மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாளில் மீள் நினைவு கொள்ள வைப்பதே எனது நோக்கமாகும். 

இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை" என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திருகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராக பண்டார வன்னியன் நடத்திய போரின் உச்சம் எது என்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான். 

அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்து போய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது. 

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு, திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பிரபாகரன் அவர்களின் ஆட்சிக் காலத்திற்கு 180, ஆண்டுகளுக்கு முன்னர் வன்னி பெருநிலப்பரப்பின் மத்திய பகுதியை ஆட்சி செய்த இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் என்பது வரலாற்றுப் பதிவு.

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னி மண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு வந்த நிலையில் காக்கை வன்னியனால் காட்டிக் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் சாவடைதார். 

ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.

1997,ஆம் ஆண்டுவரை பண்டார வன்னியனின் நினைவு நாளாக ஒக்ரோபர் 31ம் நாள் தான் நினைவு கூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் மாவீரன் பண்ண்டார வன்னின் நினைவாக நிறுவப்பட்டுள்ள  நினைவுக்கல்லில் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்தத் திகதிதான். 

வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தான் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவும் இந்த நினைவுக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 

மாவீரன் பண்டாரவன்னியன் நினைவாக 1803, ஆம் ஆண்டு ஒக்ரோபர் 31ம் நாள் நாட்டப்பட்ட இந்த நினைவுக்கல், 2009,மே மாதம் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத மௌனிப்பின் பின்னர், 2010, மார்ச் முதல் வாரத்தில், 6ஆம், அல்லது 7ஆம் திகதிகளில் இந்த நினைவுக்கல் சிங்கள இனவெறியர்களால் உடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இந்த நினைவுக்கல்லை நிறுவியவர்கள் யார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இந்த நினைவுக் கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட திகதியைத்தான் மாவீரன் பண்டார வன்னியனின் நினைவு நாளாக 1997,ஆம் ஆண்டுவரை தமிழர்கள் நினைவு கூர்ந்து வந்துள்ளார்கள் என்பது வரலாற்றுப் பதிவு.

பண்டார வன்னியனின் நினைவு நாளாக நினைவு கூறப்பட்டு வந்த ஒக்ரோபர் 31ம் நாள்,1997, இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆய்வுப் பிரிவால்  ஓகஸ்ட் 25 ஆம் நாள் மாவீரன் பண்டார வன்னியனின் நினைவு நாள் என பிரகடனம் செய்யப்பட்டது. இதுவோ பண்டார வன்னியனின் நினைவு நாளுக்கு பொருத்தமானதாக அமைந்ததற்கும் வரலாற்றுப் பதிவுகள் ஆதாரமாக அமைந்துள்ளது.

ஓகஸ்ட்,25, ஆட்டிலறி பீரங்கி கைப்பற்றப்படதும், ஆட்டிலறிப் பீரங்கிப் படையணியின் தளபதியுன் வீரச்சாவும்!

பண்டார வன்னியன் ஆட்சிக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னி மண் வெள்ளையர்களால் முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

பண்டார வன்னியன் வெள்ளையர்களின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய 25.08.நாளையும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொறியியல் துறை வல்லுனரும், ஆட்டி லறிப் பீரங்கிப் படைப்பிரிவின் சிறப்புத் தளபதியுமான கேணல் ராயு அவர்கள் சாவடைந்த 25.08. நாளையும் நினைவுகூர்ந்தே தற்போது மாவீரன் பண்டாரவன்னியனின், கேணல் ராயு ஆகியோரின் நினைவு நாளாக தமிழர்களால் நினைவு கூரப்படுகிறது.

ஓகஸ்ட் 25,ஆம் நாள் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் அமைந்திருந்த ஆங்கிலேயர்களின் படை முகாமை பண்டாரவன்னியன் அழித்து, அங்கிருந்த இரண்டு ஆட்டி லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளாகவும்.

1996, ஜூலை,18இல் முல்லைத்தீவில் அமைத்திருந்த இலங்கை இராணுவத்தின் படைத்தளத்தைத் தாக்கி அழித்து, அங்கிருந்த இரண்டு ஆட்டி லறிப் பீரங்கிகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பறி, முல்லைத் தீவில் இலங்கை இராணுவ படைகளை வெற்றிகொண்ட நாளாகவும், தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆட்டி லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைகள் கைப்பற்றிய வெற்றி நாளாகளாக ஜூலை,18 - ஓகஸ்ட் 25, ஆகிய மாத நாட்கள் வரலாற்றில் பதிவாகிறது.

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படை முகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளான-25.08.2002 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொறியியல் துறை வல்லுனரும், ஆட்டி லறிப் பீரங்கிப் படைப் பிரிவின் சிறப்புத் தளபதியுமான கேணல் ராயு அவர்கள் சாவடைந்துள்ளார்.

பண்டாரவன்னியன் வெள்ளையர்களின் ஆட்டி லறி பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நாளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிப் பீரங்கிப் படையணியின் தளபதி கேணல் ராயு அவர்களும் வீரச்சாவடைந்த இந்த வீரம் மிகு வரலாற்றுப் பதிவுகளின் பின்னணியில் தான், ஓகஸ்ட் 25ஆம் நாள் மாவீரன் பண்டாரவன்னியன், கேணல் ராயு, ஆகியோரின் நினைவு நாளாகவும் தமிழர்களால் நினைவு கூரப்படுகின்றது.
XXXX
தம்பி பெரியமைனர்-"அண்ணா நமது வன்னி நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் அந்த வெள்ளைக்கார கும்பலுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நமது சகோதரர்களாகிய சிங்களவர் வாழும் கண்டிப் பிரதேசத்தை கைப்பற்ற பெரும்படைகளை அநுப்பியிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள மக்களுக்கு துணையாகவும் ஆங்கிலேயருக்கு எதிராகவும் வீறு கொண்டு சீறியெழும் எங்கள் படைகளை அனுப்பிவைத்தால் நன்மையாக இருக்கும்."

பண்டரா வன்னியன்: "நல்லது தம்பி கைலாயா உமது யோசனை என 

தம்பி கைலாய வன்னியன். "அண்ணா கண்டிக்கு நமது படைகளை அநுப்புவதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று சிங்களமக்களை காப்பற்ற உதவி புரிந்ததாக இருக்கும். அடுத்தது இந்த சந்தர்பத்தில் நமது படை பலத்தை வெள்ளையருக்கு காட்ட கூடியதாயிருக்கும். சுணங்காமால் நமது படைகளை கண்டிக்கு அனுப்புதல் நலம்"

பண்டாரவன்னியன்: "தம்பி பெரியமைனர் நமது நாட்டில் விளைகின்ற ஏலம் கறுவா கராம்பு முதலிய திரவியங்களை கொள்ளையடித்து வயிறு வளர்க்கும் வெள்ளைக்கார கும்பலுக்கு இடம் கொடுக்கலாகாது. எமது உடன் பிறப்பாகிய சிங்கள மக்களையும் கண்டி நாட்டையும் காப்பற்றியாக வேண்டும். எனவே தயங்காது நமது படைகளைக் கண்டிக்கு ஆயுத்தம் செய்வாயாக..."

கட்டப் பொம்மன் பாணியில் தேசாதிபதியுடனான சந்திப்பிலிருந்து ஒரு பகுதி

தேசாதிபதி: வன்னியர் வேந்தே நாங்கள் பரஸ்பர அன்பு கொண்டாடி தங்களுடன் சிநேகதர்களாக நடக்க ஆசைப்படுகிறோம்.
பண்டாரவன்னியன்: அதற்கு எந்தவித தடையுமில்லை.
தேசாதிபதி: நாங்கள் காக்கை வன்னியனிடமிருந்து கரிகட்டு மூலையையும் முல்லைத்தீவையும் பெற்றுக்கொண்டோம். 
பண்டராவன்னியன்: அதனால் என்ன காக்கைவன்னியன் கொடை வள்ளல். தருமபூபதி பாரிக்கும் அடுத்தவன், இல்லாதருக்கு உள்ளதை கொடுத்தான். இதில் என்ன அதிசயம்.
தேசாதிபதி: அதிசியம் இல்லாமலில்லை யாழ்ப்பாண நாடும் வன்னிபிரதேசத்தில் ஒரு பகுதியும் எமது ஆங்கில ஆட்சிக்குட்பட்டது என்பது கருத்து. நீங்கள் மாத்திரம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை. 
பண்டராவன்னியன்:அப்படியானால் அந்த அர்த்தத்துக்கு பயன் சொல்லிகொடுக்கவா அழைத்தீர்கள். 
தேசாதிபதி:அப்பிடியில்லை பணிந்து வாழ்ந்தால் பலனுண்டு 
பண்டராவன்னியன்:பணிந்து வாழ்தல் எங்கள் பரம்பரையிலையே கிடையாது.
தோசாதிபதி:ஆணவமாக பேசினால் ஆபத்து நேரிடும்.
பண்டரா வன்னியன்: ஆபத்து உங்களைத்தான் நாடி வருகின்றது என்னையில்லை
தேசாதிபதி:வாயை அடக்கி பேசு 
பண்..வன்னியன்: ஆண்டவனுக்கு அஞ்சாத பண்டரானா ஆங்கிலனுக்கு அடங்க போகிறான்
தே-பதி: வாயை பெரும் அழிவை தேடப் போகிறீர்
பண்-வன்னி: அதற்காக நீங்கள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறீர் தேசாதிபதி:ஆங்கிலேயரைப் பகைத்தால் 
பண்டரா: அழிவென்று சொல்லுகிறீர்கள் அதற்கு அஞ்சுபவனல்ல நான் 
தேசா: பாம்புடன் விளையாடுகிறீர் 
பண்டரா: பாம்புக்கும் பருந்தாயிருப்பேனன்றி விருந்தாயிருக்கமாட்டன்

பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னி நிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனூப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.

இது ஒரு புறமிருக்க.. வன்னிநிலப்பரப்பில் பண்டாரவன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகு காட்டி பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். 

அத் தருணத்தில் காக்கை வன்னியன் பண்டரா வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். 

தம்பிமார்களான மந்திரியும், தளபதியும், காக்கை வன்னியனை சேர்க்க வேண்டாமென்ற ஆலோசனையையும் மீறி மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக்கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்பட வைக்கிறான் இந்த காக்கை வனனியன்.

ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண் வேடமிட்டு போர்கோலம் பூண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

எனவே யாவரும் அவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கும். 

இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும் சமகால புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும். இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.

இதை உனது சொந்தக் கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும், தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்.

வன்னி மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடு என வழங்கப்பட்டது. 

கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில் வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. 

பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும் செந்நெற் களனியாக விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.

முதற்கண் வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். வன்னி என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழி வந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.

எவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்கனே வன்னியர்களாவர் இனி வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள் கட்டு (இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) முன்பொரு காலத்தில் இராசதானியாக விளங்கியதா என்பதற்கு விடைகாண முனைந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர். கே. இந்திரபால தலைமையிலான குழுவினர் 1973ம் ஆண்டளவில் ஆராய்ச்சி மூலம் பெற்றுக் கொண்ட தொல்பொருள் சான்றுகள் பற்றிப் பார்ப்போம்.

டாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த குளம், கோரமோட்டை, வெடுக்கு நாறி மலை, வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில் அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை ஆராயப்பட்டது. 

வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் ஆராயப்பட்டது. 

இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி மலையிலுள்ள குகைகளில் காணப்பட்டன. இவை இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளிற்கு முற்பட்டவை. இக்குகைகளில் மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைக் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது. எனவும் கூறும் டாக்டர். இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.

முத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வியப்பை ஊட்டுவனவாகவும், காணப்பட்டன. அது ஒரு பெரிய அரண்மனை கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும் அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட விசாலமான அரண்மனையாக அது காணப்பட்டது. அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச் செதுக்கப்பட்ட வாசல்கள் கதவுகள் காணப்பட்டன. அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல் ஆசனம் ஒன்றும் உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.

இந்த அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன் கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப் பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள் தடைப்பட்டிருக்கலாம். இனி, வெட்டு நாறி மலையில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப் பார்ப்போம். அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார். அதனை சில சுருக்கங்களுடன் தருகிறேன்.

பெரிய கல்லுருண்டைகள், அதனிடையே படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள் அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய செவ்வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு உயர்ந்து ஒன்றிற்கொன்று சமாந்தரமாகவும், குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே செங்குத்தாக இருந்தது. 

அம்மாதிரியான பாரிய கற்கள் அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை. குறுக்கே கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும் இருக்கும். அக்கல்லு வழமையாக படம் எடுக்கும் நாகத்தின் தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது வடிந்து வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. 

குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள், இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின் மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.

பின் நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும் அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம். திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன். அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு என்று கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது என்ன? விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும்? ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து உசாராகிவிட்டீர்கள். பாறை செவ்வகவடிவம் அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம் உண்டு.

அங்கே சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன. அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின் பாறை உச்சியில் விழும் நீர் வடியும் போது மண், சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது தூசுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது தூசுகள், குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. 

நில நீர் இல்லாத இடங்களில், ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில் குடிநீரைச் சேமிக்கும் பழக்கம் இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள் அளவிலும் ஐயமில்லை. பின், பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும் நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம். பக்கவாட்டில் இருந்த ஒன்றுக் கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப் பாறைகள் உள்ளே வளைந்து ஒன்றையொன்று முட்டத் துடித்துக் கொண்டிருந்தன.

மண்டபத்தினுள் இருந்து மேலே அண்ணாந்து பார்த்தால் ஒன்று, ஒன்றரையடி அகலத்தில் அறுபது அடி நீளத்தில் இரு சமாந்தரக் கோடுகளின் வழியாக நீல வானம் தெரிந்தது. அப்போது மழை சற்று பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. இருப்பினும் எங்கள் மேனியில் ஒரு துளி கூட நீர் படவில்லை. 

ஆனால் மழைநீர், வளைந்த கற்பாறைகளின் சுவர் வழியாக வழிந்து மண்டத்தின் தரையை அடைந்தது. எல்லாம் ஒரே விந்தையாக இருந்தது. மண்டபத்தின் மூடிய பகுதியில் தான் மூன்றாவது பாரிய கல் அடைத்துக் கொண்டிருந்தது. அதன் மத்தியில் இருந்தது சற்று வலது கைப்புறமாக இரண்டரை அடி விட்டத்தில் சீரற்ற உருவில் வழி ஒன்று இருந்தது. அதனு}டே எட்டிப் பார்த்தேன். 

அங்கு இருட்டு நிரம்பியிருந்தது. நீண்ட தடியை அவ்வழியின் ஊடாக விட்டு உள்ளே சகல திசைகளிலும் அசைத்துப் பார்த்தேன். உள்ளே எல்லாத் திசைகளிலும் பத்து அடிக்கும் மேலாகவே குகையின் விஸ்தீரணம் இருந்தது. குகை தரைமட்டத்திற்கு செல்ல ஆயத்தமானார். ஆனால் நான் அவரைத் தடுத்து விட்டேன்.

எங்களிடம் டோர்ச் லைட்டோ, ஏன் கேவலம் ஒரு தீப்பந்தமோ இருக்கவில்லை. இப்படியான குகைக்குள் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகமாக இருக்கும். அது உயிராபத்தை விளைவிக்கக் கூடியது எவ்வித தற்காப்பு வழிகளும் இல்லாமல் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அறிவற்ற செயலாகும்.

மண்டபத்திற்கு வெளியே சிறிய கற்களால் ஓட்டுச் சல்லிகளாலும் ஆன சிறிய மேடை, அதை ஒரிரு காட்டு மரங்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. அதில் குரங்குக் கூட்டங்கள் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே கரடி எச்சங்கள் மூக்கை அரித்தது. ஆதிகால மட்பாண்டத் துண்டுகள் அங்கும் இங்குமாக வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன. 

அவற்றைக் குழப்பவோ, அன்றேல் கிண்டி எடுக்கவோ நான் விரும்பவில்லை. தகுந்த முறையில் புதைபொருளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவோடு அவ்விடத்தை விட்டு அகன்று, மீண்டும் குகையின் முன்பக்கம் வந்து ஆராய்ந்தோம். குகையின் இடப்புறத்தில் அதாவது இரண்டு பாறைகள் சந்திக்கும் இடத்தில் இருந்த இடைவெளியில் சிக்கிக் கிடந்த மண்ணில் முளைத்து சிறு மரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது ஆலமரமொன்று. 

அதன் வேர்கள் கல்லின் இடுக்கின் ஊடாக தரையை எட்டிப் பிடிக்க துடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பிடித்து ஏறி நாம் எல்லோரும் பாறையின் உச்சியினை அடைந்தோம். அங்கே ஒரு பீடம், அப்பீடத்தின் வெடிப்புகளில் ஓர் இரு நாகதாளி மரங்கள் ஆள் ஆளவு உயரத்திற்கு வளர்ந்திருந்தன. 

அங்கே ஓர் பத்தடி உயரமுள்ள கற்தூண் நிலைக்குத்தாக இருந்தது. இத் தூணானது எதோடும் பொருத்தப்படாமல் சுகந்திரமாக இருந்தது. அத்து}ணில் எந்த விதமான குறியீடுகளும் காணப்படாத போதிலும், அவை எகிப்திய நாட்டில் காணப்படும் கற்தூண்களை ஒத்திருந்தன. இது மட்டுமல்ல அங்கே யாரோ விகாரை கட்ட எடுத்த முயற்சியை பறை சாற்று முகமாக அண்மையில் குவிக்கப்பட்ட சிறு கற்களும் சலித்த மணல் குவியலும் விகாரையின் கோபுரத்திற்கு தேவையான வட்டக் கற்களும் கிடந்தன.
ஆத்திரம் மீறிக் கொண்டு வந்தது. 

வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். அவ்வளவு தூரம் மதவெறி இலங்கையரை ஆட்டிப் படைக்கிறதா? வெட்டி நாறி மலையின் மூன்று பாறைகளும் மனிதனின் படைப்பல்ல! இயற்கையாய் அமைந்தனவே. வடக்கு சமதரையின் முடியில் இப்படியான கனக்குற்றி வடிவில் கற்பாறைகள் உண்டு (மகா இலுப்பள்ளம்) இப்படி இயற்கையாக அமைந்த கோடிக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய இடங்கள் எப்படி பௌத்த சின்னமாக முடியும்? 

இயற்கையான அவ்விடத்தை ஆதிக் குடிகள், தமது இருப்பிடமாக்கிக் கொண்டார்கள். அங்கு எவ்வித மத வழிபாட்டுக்குரிய சின்னங்கள் கூட இல்லை. அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளின் தெய்வவமாகப் பகலில் தெரியும் சூரியன் விளங்கியிருக்கலாம் (சூரியனுக்கு கோவில் கட்டி வழிபடும் வழக்கம் மிக அரிதாகவே பழங்குடிகளிடம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு). என மேலும் கட்டுரையை யாழ்ப்பாண தொல்பொருள்கள் நோக்கி நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். 

ஆனாலும் எனது கட்டுரைத் தலையங்கத்திற்கு உட்பட்டு இத்துடன் அவர் கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.

அடுத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நெடுங்கேணியிலுள்ள வெடிவைத்த கல்லு (வெடிவிச்ச கல்லு) என்னும் விவசாயத் குடிமக்கள் வாழ்கின்ற புராதன கிராமத்தில் உள்ள ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பாழங்கிணறு ஒன்றை ஆழமாக்க முற்பட்ட போது. 1980ம் ஆண்டளவில் பெரும் பிரியத்தனத்தின் பின் வெளியே எடுக்கப்பட்ட இரண்டடி நீளமும் ஒன்றேமுக்கால் அடி அகலமும் உள்ள கல் உள்ளடக்கிய ஒரு அடி உயரமான முத்துமாரியம்மனின் பாதவிம்பம் பதிந்த, இயந்திரம் பொதித்த பாதார விம்பம் மேலும் ஒரு வரலாறு சொல்லக் கூடிய அரும் பொருளாகத் திகழ்கிறது. 

இது வன்னியர் ஆட்சிக் காலத்தில் சிறப்புடன் மிளிர்ந்த ஆலயத்தினதாகும். இச்சிலை அவ்வாலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவை யாவும் அறியப்பட்ட தொல் பொருட்களே இவற்றை விடவும் வேறும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கக் கூடிய தொல்பொருட்கள் வன்னி மண்ணில் இருக்கலாம். அவையாவும் சமாதானம் ஏற்படும் ஒரு நாளில் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அவை மூலம் எமது வரலாற்றுப் பாதைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். 

வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும் கூட, வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.
xxxxxxxxxxxxxxxxxx
முல்லைத்தீவில் தமிழர்களின் காணிகளில் சிங்களவர் குடியேற்றம் - அமைச்சர் ஐங்கரநேசனிடம் மக்கள் தெரிவிப்பு Top News 


முல்லைத்தீவில் தமிழர்களின் காணிகளை அபகரித்தும், காடுகள் அழிக்கப்பட்டு சிங்களவர்கள் மிக வேகமாக குடியேற்றப்பட்டு வருகின்றனர். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி, எல்லைக் கிராமங்களை அண்டிய பகுதிகளில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை கையகப்படுத்தியும் இந்த சிங்களக் குடியேற்றத்தை இராணுவம் மேற்கொண்டு வருகிறது.

விவசாய நிலங்களில் சிங்களவர்களை அத்துமீறி இராணுவம் குடியேற்ற முயற்சிகள் எடுத்துவருவதை அறிந்த வாடா மாகாண சபையின் விவசாய, கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை அமைச்சர் நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளதுடன் மக்களுடனும் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்டு அறிந்துகொண்டுள்ளார்.அதன் பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் 

இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு இதே நிலைமை தொடர்ந்தால்  எஞ்சியிருக்கின்ற தமிழ்க் கிராமங்களும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு முல்லைத்தீவு முற்று முழுதாக சிங்கள மயப்படுத்தப்படும் அமையம் உள்ளதாகவும்  அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அவர்களிடம்,கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி ஆகிய எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கவலையும் தெரிவித்துள்ளனர். 

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் 

தங்களுடைய விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலம் வாழ்வாதாரத்துக்கு எதுவுமே அற்ற நிலையில் பொருளாதார வலுவற்ற சமூகமாக மாற்றி தமிழர்களை முற்றாக வெளியேற்றுவதும், இந்தச் சதித் திட்டத்தின் ஒரு அங்கம் எனவும். இந்தப் பகுதி மக்கள் தன்னிடம் கண்ணீருடன் சுட்டிக் காட்டியதாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். 

தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது உனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால் முல்லைத்தீவு முழுமையாகப் பறிபோதை தவிர்க்க முடியாது எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் அந்த மக்கள் தன்னிடம் தெரிவித்த கருத்துக்கள் கவலைகள் தொடர்பாக அமைச்சர் ஐங்கரநேசன் மேலும் தகவல் தருகையில், 

கொக்குத்தொடுவாய் எல்லைக்கிராமத்தில் மட்டும் சுமார் 2581 ஏக்கர் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக 1984ம் ஆண்டின் பின் கிட்டத்தட்ட 10 ற்கு மேற்பட்ட தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு மூன்றே வருடங்களில் 1987ம் ஆண்டு முதல் படிப்படியாக இங்கு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்க்ப்பட்டது.

கொக்குத்தொடுவாயில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற 2581 ஏக்கர் விவசாய நிலங்களுக்குமாக உறுதிகள் இந்த மக்களிடம் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த நிலங்கள் தமிழ் மக்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. இந்நிலையில், தற்போது தமது விவசாய நிலங்களுக்குச் செல்லும் தமிழ் மக்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்களால் விரட்டப்படுகின்றனர். 

நாங்கள் இந்த இடத்தில் 22 வருடங்கள் இருக்கிறோம். இங்கிருந்து வெளியேற முடியாது என்கின்றனர். அரச அதிகாரிளிடம் கேட்டபோது காணிகளின் பெர்மிட் புதிப்பிக்கப்பட வேண்டும். அவை புதிப்பிக்கபடாததால் சிங்கள மக்களுக்குக் கொடுத்துவிட்டோம் என்கின்றனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தமது இடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. பலரின் ஆவணங்கள் தொலைந்துவிட்டன. அவற்றை மீளப்பெறக்கூட இந்த மக்களுக்கு அவகாசம் அழிக்கப்படாமல் சிங்கள் மக்கள் குடியேற்றப்படுகின்றனர்.

2009ம் ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முல்லைத்தீவு மாவட்டம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகிறது. கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாற்றுக்கேணி எல்லையோரக் கிராமங்கள் மிகத் தீவிரமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. வீடு கட்டித் தந்ததாகவும், வீதி போட்டதாகவும் அதிகாரிகள் கூறுவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 

வாழ்வாதாரத்துக்கான விவசாய நிலத்தைப் பறித்துவிட்டு வீடுகட்டி என்ன பயன் என இந்த மக்கள் கேட்கின்ற்னர். மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் காடுகள் அழிக்கப்பட்டு எல்லை வகுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்கிராம மக்களின் காணிகளை அவர்களிடமே கொடுக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபர் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். 

எனினும் எந்தவித பதிலுமின்றி ஆக்கிரமிப்பு தொடர்கிறது என மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதேவேளை, இதனை நாங்களும் நேரில் அவதானித்தோம் என அமைச்சர் பொ.ஐங்கரநோசன் அவர்கள் தெரிவித்துள்ளார்..Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப் (29.10.2014)
பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு (03.10.2014)
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)
சர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)
மன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)
போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன்  (31.01.2014)
சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)
ஜெனிவா செல்வதை தவிர்க்க முடியாத காரணங்களால் தவிர்த்துள்ளார்-அனந்தி சசிதரன் (30.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan