.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால்
Sunday, 02.02.2014, 09:23pm (GMT)

சிறிலங்காவில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரும். எனினும், அது சிறிலங்கா மக்களின் நட்புணர்வுடன் இசைந்து போவதாக இருக்கும்” என்றும் அமெரிக்காவின் தெற்கு, மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான தனது இரண்டு நாள் நிலவர ஆய்வுப் பயணத்தின் முடிவில் நேற்று மாலை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியுள்ளேன். சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன் போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால உறவு என்பது, இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல, இருநாட்டு மக்களுக்கும் இடையிலானது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன். சிறிலங்காவில் நடந்த சந்திப்புகள் ஆக்கபூர்வமானவையாகவும் ஒத்துழைப்பு சார்ந்ததாகவும் அமைந்தன.

நீதி, நல்லிணக்கம், போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் சிறிலங்கா போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்காவின் கவலைகளை சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா சொந்தமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதற்கே அமெரிக்கா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது.

ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் சிறிலங்கா முன்னேற்றம் காட்டவில்லை என்பதால் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கான மதிப்பு மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு - ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காததன்மையும் சிறிலங்காவின் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிக்கிறது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஏற்கமுடியாது.

எனவே சிறிலங்காவில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வரும். அந்த தீர்மானத்தில் எந்தவகையான வாசகங்கள் இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது.

எனினும், அது சிறிலங்கா மக்களின் நட்புணர்வுடன் இசைந்து போவதாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)
சர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)
மன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)
போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்? முதல்வர் விக்னேஸ்வரன்  (31.01.2014)
சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)
ஜெனிவா செல்வதை தவிர்க்க முடியாத காரணங்களால் தவிர்த்துள்ளார்-அனந்தி சசிதரன் (30.01.2014)
விடுதலைப் புலிகள்-கூட்டமைப்பு உறவு குறித்து விசாரிக்கப் போவதாக மிரட்டும்-சிறிலங்கா (29.01.2014)
மூவரின் தண்டனைக் குறைப்பு இன்று முடிவு (29.01.2014)
முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல அதற்கு முன்னரே இனவழிப்பு நடைபெற்றுள்ளது-G.T.F (28.01.2014)
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த யோசனை மட்டுமே முன்வைக்கப்படும்- அமெரிக்கா (28.01.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan