.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது.
Monday, 12.02.2018, 07:25pm (GMT)

ஈகைப் பேரொளி வ.முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவரின் கல்லறையில் இன்று நடைபெற்றது.

ஈகைப் பேரொளி வ.முருகதாசன் அவர்களின் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு வணக்க நிகழ்வில், தேசிய செயற்பாட்டாளர்கள் பலரும், மக்களும் கலந்துகொண்டு தீபம் ஏற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நண்பகல் 12.15 மணிமுதல் 14.00 மணிவரை நடைபெற்ற வணக்க நிகழ்வில் அரசியல் செயற்பாட்டாளர்களும் உரை நிகழ்த்தியிருந்தனர்.

ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா இனவெறி அரசு நடத்திய இனவழிப்பைத் தடுத்து நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கேரிக்கை முன்வைத்து சுவிஸ் நாட்டில் ஜெனிவா மாநகரில் அமைந்துள்ள ஜநா சபையின் முன்னால் தீ மூட்டி வீரச்சாவடைந்தார்.

இலங்கைத் தீவின் தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் துன்னாலை என்றழைக்கப்படும் அழகிய கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட, 27 அகவை உடைய வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்கள், தனது குடும்பத்தினருடன் புலம் பெயர்ந்து, பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மாநிலத்தில் வசித்து வந்தவர்.

தமிழர் தாயகத்தில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனவழிப்பை தடுத்து நிறுத்தக் கோரிகையை முன்வைத்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாநிலத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை அன்று இரவு 9.15 மணியளவில் தமிழீழ விடுதலைக்காக தீக்குளித்து வீரச்சாவடைந்தார்.

"உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் 7 பக்கங்களைக் கொண்ட தனது மரண சாசனம் ஒன்றையும் எழுதி, தனது கைகளில் வைத்துக் கொண்டும், ஒரு பிரதியை ஐநா முன்றலில் பத்திரமாக வைத்து விட்டு தன்னைத் தானே தீமூட்டி தமிழீழ விடுதலைக்கு தன்னை உரமாகவும், விதையாகவும் ஆக்கிக் கொண்டவர் இந்த ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்கள்.

இலங்கையின் உள்நாட்டுப் போரை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 2009, பெப்ரவரி 12 தீக்குளித்த முருகதாசன் அவர்கள் விரும்பியிருந்தார் என லண்டன் பிபிசி செய்தி நிறுவனம் தனது செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தது.

ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் இறுதி வணக்கம் நிகழ்வும், வித்துடல் விதைப்பும் 2009, மார்ச் 7ஆம், திகதி அன்று பிரித்தானியாவில் லண்டன் மாநகரில் நடைபெற்றது.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. (11.02.2018)
இழந்தவை யாவும் தர்மத்தின் அடையாளம் இருப்பவையாவும் சத்தியத்தின் அடையாளம்! (05.02.2015)
 பிரெஞ்சுக் கிளைக்குள் அத்துமீறி நுழைந்து கூட்டம் ஒன்றை நடத்திய இரும்பொறை, (30.12.2014)
தமிழ் மாணவர்களும் தமிழீழ விடுதலைப் போரும் (12.12.2014)
கேணல் பருதி கொலையின் பின்னணியில் சிறீ ரெலோ : (07.11.2014)
வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்ன (30.10.2014)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் தமிழர் ஒருங்கிணைப் (29.10.2014)
பிரித்தானியாவில் மீண்டும் மீண்டும்  பிளவுபடுத்தப்படும் மாவீரர் நாள் நிகழ்வு பின்னணியில் (22.10.2014)
தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு (03.10.2014)
சிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014) 
::| Latest News
 

Site Created By: Thiliepan