.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை இழந்­து­விட்டோம் எமது பிள்­ளை­களை ஐ.நா. மீட்டுத் தர­வேண்டும்!
Monday, 12.03.2018, 10:20am (GMT)

ஜெனிவா உப­குழுக் கூட்­டத்தில் காணா­மல்­ போ­னோ­ரது உற­வினர் சங்­கத்தின் பிர­தி­நிதி வலி­யு­றுத்தல்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது நாம் நம்­பிக்கை இழந்து விட்டோம். காணாமல் போனோர். எவரும் இல்­லை­யென்று அவர் கூறி­விட்டார். எனவே எமது பிள்­ளை­களை ஐ.நா.வே மீட்டுத் தர வேண்டும் என்று முல்­லைத்­தீவு மாவட்ட காணாமல் போனோர் சங்­கத்தின் பிர­தி­நிதி திருமதி சத்­தி­யா­தேவி அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற நிலையில் இதில் கலந்து கொள்­வ­தற்­காக காணாமல் போனோர் சங்­கத்தின் பிர­தி­நி­திகள் இருவர் ஜெனிவா சென்­றுள்­ளனர். இதில் முல்­லைத்­தீவு மாவட்ட பிர­தி­நி­தி­யான திருமதி சத்­தி­யா­தேவி அவர்கள் கடந்த வெள்ளிக்­கி­ழமை ஐ.நா. மனித உரிமை ஆணை­ய­கத்தில் நடை­பெற்ற உப குழுக் கூட்­டத்தில் கலந்துகொண்டு அறிக்கைய வழங்கிய போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த உப குழுக் கூட்­டத்தில் வட மாகா­ண­சபை உறுப்­பினர் திரு. எம்.கே.சிவா­ஜி­லிங்கம் அவர்கள் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர்.

இங்கு மேலும் கருத்து தெரி­வித்த திருமதி.சத்­தியா­தேவி அவர்கள் எனது பிள்­ளை­க­ளையும் மரு­ம­க­ளையும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வட்­டு­வாகல் செல்­வ­புரம் பகு­தியில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தோம். அதன் பின்னர் அவர்கள் காணாமல் போயுள்­ளனர்.

அவர்­களைத் தேடி சகல இடங்­க­ளுக்கும் அலைந்து திரிந்தோம். காணாமல் போன எமது பிள்­ளை­க­ளுக்­காக 2013 ஆம் ஆண்டு ஆட்­கொ­ணர்வு மனுவும் தாக்கல் செய்தோம் ஆனால், இதுவரை அதற்கான எந்தவிதமான பதிலும்  எமக்கு கிடைக்­க­வில்லை.

காணாமல் போன எமது பிள்­ளை­களை தேடித் தருமாறு கோரி கடந்த ஒரு வரு­ட­கா­ல­மாக தொடர்ந்தும் வீதியில் போராடியும் வரு­கின்றோம். எமது பிள்­ளைகள் இன்­னமும் இருக்­கின்­றனர், நாம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து எமது பிள்­ளை­களின் புகைப்­ப­டங்­க­ளையும் கைய­ளித்­த­துடன் அவர்­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரினோம்.

ஆனால், ஜனா­தி­பதி காணாமல் போன எவரும் உயி­ருடன் இல்லை என்று கையை விரித்து விட்டார். இதனால் அவர் மீதும் நாம் நம்­பிக்கை இழந்­து­ விட்டோம். இதனால் தான் நாம் ஐ.நா.வுக்கு வந்­துள்ளோம். எமது பிள்­ளை­களைக் கண்டுபிடித்து மீட்டுத்தர ஐ.நா. நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.  

எம்மைப் போல் எத்­த­னையோ அம்­மாமார் தமது பிள்­ளை­களை மீட்டுத்தருமாறு கோரி வீதியில் நின்று போராடி வருகின்றனர். ஆனால், எந்தவித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. எமது விடயத்தில் ஐ.நா. தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஜெனி­வா ஐநா நோக்கி புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் மாபெரும் பேர­ணி! (12.03.2018)
பெண்களுக்கு 2009இற்கு முன்னரான நிலை வடக்கு கிழக்கில் மீண்டும் தோன்றவேண்டும்! முதல்வர் விக்கி (09.03.2018)
இலங்கையில் பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றமில்லை!-ஐ.நா (08.03.2018)
தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையே வன்முறைகளுக்குக் காரணம்!- சுமந்திரன் (08.03.2018)
தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன்! (07.03.2018)
சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும்! (06.03.2018)
மகளீர் தினத்தன்று  முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு! (06.03.2018)
 உறுதி மொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை- ஆசிய ம. உ. ஆ. குற்றச்சாட்டு  (02.03.2018)
மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை! (02.03.2018)
கடுங் குளிரின் மத்தியில் ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் ஐநா நோக்கிய ஈர் உருளிப் பயணம்! (02.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan