.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
இலங்கை விவகாரம்-ஜெனிவாவில் அமெரிக்க முன்னாள் போர்க்குற்ற ஆய்வாளர் ஸ்டீபன் ராப்!
Monday, 12.03.2018, 10:31am (GMT)

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, பல்வேறு பக்க அமர்வுகள் பேரவை வளாகத்தில் இடம்பெற்று வருகின்றன.

“பாரிய கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு அனைத்துலக முறைமை எவ்வாறு தோல்வி கண்டது: சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நீடிக்கும் சட்டவிரோத தடுத்து வைப்பு, சித்திரவதை, பாலியல் வன்முறைகள்” என்ற தொனிப்பொருளில், பக்க அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

12 ஆம் இலக்க பக்க அறையில், இன்று மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பக்க அமர்விலேயே, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் நிபுணரான ஸ்டீபன் ராப் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன், கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளர் றிச்சாட் ரொஜெர்சும் இதில் பங்கேற்கிறார். இந்த பக்க அமர்வை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்கு செய்திருக்கிறது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை இழந்­து­விட்டோம் எமது பிள்­ளை­களை ஐ.நா. மீட்டுத் தர­வேண்டும்! (12.03.2018)
ஜெனி­வா ஐநா நோக்கி புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் மாபெரும் பேர­ணி! (12.03.2018)
பெண்களுக்கு 2009இற்கு முன்னரான நிலை வடக்கு கிழக்கில் மீண்டும் தோன்றவேண்டும்! முதல்வர் விக்கி (09.03.2018)
இலங்கையில் பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றமில்லை!-ஐ.நா (08.03.2018)
தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையே வன்முறைகளுக்குக் காரணம்!- சுமந்திரன் (08.03.2018)
தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன்! (07.03.2018)
சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும்! (06.03.2018)
மகளீர் தினத்தன்று  முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு! (06.03.2018)
 உறுதி மொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை- ஆசிய ம. உ. ஆ. குற்றச்சாட்டு  (02.03.2018)
மரைன் படைப்பிரிவை வேகமாகப் பலப்படுத்தும் சிறிலங்கா கடற்படை! (02.03.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan