.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
இனவழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கி நடைபெற்ற மாபெரும் பேரணி!
Monday, 12.03.2018, 04:04pm (GMT)

தமிழர் தாயகத்தில் ஸ்ரீலங்கா அரசும், அதன் படைகளும் மேற்கொண்ட இனவழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் பேரணி ஒன்று ஜெனிவாவில் இன்று கொட்டும் மழையின் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களால் இன்று நீதி கோரி முன்னெடுக்கப்படட மாபெரும் பேரணி ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகிய பேரணி ஜெனிவா ஐநா சபையின் முன்றலான முருகதாசன் திடலை சென்றடைந்தது.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது.

*1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

*2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

*3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

*4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில்கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

*5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என்கிற கோரிக்கைகள் உள்ளிட்ட மனித நேய ஈர் உருளிப் பயணத்தை மேற்கொண்டவர்களால் முன்வைக்கப்படட ஐந்து அம்சக் கோரிக்கை அடங்கிய மனுவும் ஐநா மனித உரிமைகளுக்கான செயலாளரிடம் கையளிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செய்திப் பதிவு தி-தமிழரசன் 

புகைப்பட உதவி- ராயுRating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
இலங்கை விவகாரம்-ஜெனிவாவில் அமெரிக்க முன்னாள் போர்க்குற்ற ஆய்வாளர் ஸ்டீபன் ராப்! (12.03.2018)
ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை இழந்­து­விட்டோம் எமது பிள்­ளை­களை ஐ.நா. மீட்டுத் தர­வேண்டும்! (12.03.2018)
ஜெனி­வா ஐநா நோக்கி புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் மாபெரும் பேர­ணி! (12.03.2018)
பெண்களுக்கு 2009இற்கு முன்னரான நிலை வடக்கு கிழக்கில் மீண்டும் தோன்றவேண்டும்! முதல்வர் விக்கி (09.03.2018)
இலங்கையில் பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றமில்லை!-ஐ.நா (08.03.2018)
தண்டனை கிடைக்காது என்ற நம்பிக்கையே வன்முறைகளுக்குக் காரணம்!- சுமந்திரன் (08.03.2018)
தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன்! (07.03.2018)
சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும்! (06.03.2018)
மகளீர் தினத்தன்று  முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு! (06.03.2018)
 உறுதி மொழிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை- ஆசிய ம. உ. ஆ. குற்றச்சாட்டு  (02.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan