.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன்
Tuesday, 10.04.2018, 11:17pm (GMT)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று ஒன்று இல்லாத நிலையில் அதன் முதலமைச்சர் வேட்பாளர் எனும் கதை கேலிக்குரியது என வடமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன்அவர்கள் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தங்களை நிறுத்துவதற்கு முன் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

வடக்கு கிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். அதனடிப்படையில் மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சர் ஆக்கினார்கள். 

அதே கொள்கையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா?   இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாத இடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் திரு.எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வடமாகாண சபைக்கான கூட்டமைப்பின் அடுத்து வேட்பாளர் திரு.சி .வி.விக்கினேஸ்வரன் அவர்கள் இல்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு திரு.சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பே இல்லை என முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா (08.04.2018)
ஆனந்த புரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் புரட்டிப் போடப்பட்டது! (05.04.2018)
மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட ரீதியிலான செயற்குழு விபரம்! (01.04.2018)
"புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்”!-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (28.03.2018)
தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்! (20.03.2018)
போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது!-ஐ.நா (19.03.2018)
வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­றப்­படும் ஆபத்து! திரு.சி.வி.வி (19.03.2018)
வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதியொருவர் சாவடைந்துள்ளார்! (18.03.2018)
காலத்தின் தேவை உணர்ந்து தாயகத்தில் உருவாக்கம் பெறுகிறது "மக்கள் நலன் காப்பகம்"  (17.03.2018)
சிறிலங்காவில் வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்! (14.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan