.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
காணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில்  பூசா தடுப்பு முகாமில்! - விடுவிக்கப்பட்ட போராளி
Thursday, 12.04.2018, 08:39am (GMT)

வவுனியாவில் காணாமல் போனதாக தாய்மார் கூறும் பலர் பூசா தடுப்பு முகாமில் சுய நினைவிழந்த நிலையில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக- பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட போராளியான 31 வயதுடைய நவரத்தினம் நிசாந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

“என்னைப் போலவே பலரும் தடுப்பில் பல இன்னல்களை சந்தித்து வேதனைகளுடன் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பல தாய்மார் தங்கள் பிள்ளைகள் காணாமல் போய்விட்டதாக கூறுகின்றார்கள். ஆனால் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுய நினைவிழந்த நிலையில் உள்ளார்கள். இதனை நான் கூறுவதால் எனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நான் எனது அம்மா அப்பாவை இறுதி யுத்தத்தில் 2009ம் ஆண்டு இழந்தேன். இரண்டு அண்ணாவும் அக்காவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்து மாவீரர்கள் ஆகி விட்டனர். என்னை 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 26 ஆம் திகதி தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றனர். தடுப்பு முகாம் காவலில் என்னை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள். என்னை சின்னா பின்னமாக்கி வேதனைப்படுத்தினார்கள். எனது கால் பெருவிரல் நகத்தை பிடுங்கினார்கள். பல வேதனைகளையும் இழப்புக்களையும் சந்தித்தேன்.

பின்னர் 2017.12.26 அன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன். தற்போது 85 வயது அம்மம்மாவுடன் வவுனியாவில் வசித்து வருகின்றேன். எனக்கு முல்லைத்தீவு வற்றாப்பளையில் 4 ஏக்கர் காணி உள்ளது. அதில் 2 ஏக்கர் தென்னந் தோப்பு. அதனையும் தற்போது இராணுவம் தன்வசப்படுத்தி வைத்துள்ளது அதை என்னிடம் தர மறுக்கின்றனர்.

உதவி அரசாங்க அதிபர் ஊடாக கடிதங்கள் கொடுத்தும் தற்போது அதனை தரமுடியாது என சொல்கின்றனர். நான் எனது வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். அதற்கு எனது காணியை பெற்றுத் தருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தால் நல்லது. 

எனக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு உதவிகள் கிடைத்தால் எனது வாழ்வை கொண்டு செல்லவும் வசதியாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் !  (11.04.2018)
இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் (10.04.2018)
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா (08.04.2018)
ஆனந்த புரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் புரட்டிப் போடப்பட்டது! (05.04.2018)
மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட ரீதியிலான செயற்குழு விபரம்! (01.04.2018)
"புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்”!-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (28.03.2018)
தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்! (20.03.2018)
போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது!-ஐ.நா (19.03.2018)
வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­றப்­படும் ஆபத்து! திரு.சி.வி.வி (19.03.2018)
வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதியொருவர் சாவடைந்துள்ளார்! (18.03.2018)



 
::| Latest News
 

Site Created By: Thiliepan