.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி!
Thursday, 12.04.2018, 11:05pm (GMT)

அனுராதபுரம் சிறையில் சித்திரவதைக்கூடமொன்றினில் தனித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் மூன்றாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியினை சேர்ந்த 37வயதுடைய இராசபல்லவன் தவரூபன் எனும் அரசியல் கைதியே உணவு தவிர்ப்பு போராட்டத்தை கடந்த 8ம் திகதி முதல் முன்னெடுத்துள்ளனர்.

அனுராதபுரம் விமானப்படை தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலிற்கான தகவல்களை வழங்கியதாக கூறி கைதாகியுள்ள இவர், தற்போது அனுராதபுரம் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்.

நோய் வாய்ப்பட்டுள்ள இவரிற்கு விசேட மருத்துவ சிகிச்சைகளை வழங்க யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது தப்பித்து செல்ல இராசபல்லவன் தவரூபன் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல மறுத்து வருகின்றனர்.

அத்துடன் திட்டமிட்டு தமது குற்றச்சாட்டை நியாயப்படுத்த ஏதுவாக இராசபல்லவன் தவரூபனை ஏனைய தமிழ் அரசியல் கைதிகளிலிருந்து பிரித்து தனி சித்திரவதை கூடத்தில் அடைத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது. 

நோய் வாய்ப்பட்டுள்ள இராசபல்லவன் தவரூபன் தன்னை ஏனைய அரசியல் கைதிகளுடன் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கான மருத்துவ சிகிச்சையினை அனுமதித்துதவுமாறு கோரியுமே உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது. 

வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடக்கின்ற பெருமளவிலான அரசியல் கைதிகள் அனுராபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
காணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில்  பூசா தடுப்பு முகாமில்! - விடுவிக்கப்பட்ட போராளி (12.04.2018)
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் !  (11.04.2018)
இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் (10.04.2018)
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா (08.04.2018)
ஆனந்த புரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் புரட்டிப் போடப்பட்டது! (05.04.2018)
மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட ரீதியிலான செயற்குழு விபரம்! (01.04.2018)
"புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்”!-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (28.03.2018)
தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்! (20.03.2018)
போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது!-ஐ.நா (19.03.2018)
வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­றப்­படும் ஆபத்து! திரு.சி.வி.வி (19.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan