.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்!-வி.எஸ்.சிவகரன்
Friday, 13.04.2018, 02:32pm (GMT)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானத்திற்கு மாறாக சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்த பிரதேசசபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளுள் ஒன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.வி.எஸ்.சிவகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
   
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, கொள்கை பற்றோடும் விசுவாசத்தோடும் வாக்களித்த மக்களிற்கு தேர்தல் அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இந்த இழி செயலில் ஈடுபட்டனர். அவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறான ஒரு சில சந்தர்ப்ப வாதிகளால் தமிழ் தேசியம் ஒருபோது தளர்வடையப் போவதில்லை.

குறித்த நபர்களே அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போவார்கள் என்பது கடந்த காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.தவறான பாதை வகுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழின அழிப்பாளர்களுடனும் தமிழ்த் தேசிய விரோத சக்திகளுடனும் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, கருணா குழு போன்றவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது போல எமது அங்கத்தவர்களும் நிலை மாற முடியாது என்பதே எமது திடமான முடிவு.

வடக்கு, கிழக்கு எங்கும் எவரையும் ஆதரிப்பதில்லை என்பது எமது கட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம்.ஆகவே இந்த தீர்மானத்தை மீறிய உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி! (12.04.2018)
காணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில்  பூசா தடுப்பு முகாமில்! - விடுவிக்கப்பட்ட போராளி (12.04.2018)
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் !  (11.04.2018)
இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் (10.04.2018)
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா (08.04.2018)
ஆனந்த புரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் புரட்டிப் போடப்பட்டது! (05.04.2018)
மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட ரீதியிலான செயற்குழு விபரம்! (01.04.2018)
"புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்”!-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (28.03.2018)
தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்! (20.03.2018)
போரில் பங்கேற்ற இலங்கைப் படையினர் அமைதிப்படையில் இணைய முடியாது!-ஐ.நா (19.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan