.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!
Friday, 13.04.2018, 03:34pm (GMT)

பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னா் மக்களின் பாவனைக்கு கட்டுப்பாட்டுடன் இன்றையதினம் (13-04-2018) திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை- பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இதேவேளை, பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு பகுதி இதுவரை காலமும் இ.போ.ச.பேருந்து சேவைக்காக கடந்த உள்ளூராட்சித் தேர்தலுடன் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்கு  உட்பட்டிருந்த 683 ஏக்கர் நிலம் இன்றைய தினம்(13-04-2018) மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதும்  குறிப்பிடத்தக்கது.
Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்!-வி.எஸ்.சிவகரன் (13.04.2018)
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி! (12.04.2018)
காணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில்  பூசா தடுப்பு முகாமில்! - விடுவிக்கப்பட்ட போராளி (12.04.2018)
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் !  (11.04.2018)
இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் (10.04.2018)
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா (08.04.2018)
ஆனந்த புரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் புரட்டிப் போடப்பட்டது! (05.04.2018)
மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட ரீதியிலான செயற்குழு விபரம்! (01.04.2018)
"புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்”!-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (28.03.2018)
தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்! (20.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan