.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
செய்திகள்
 
விடுவிக்கப்பட்ட மக்கள் காணிகளில் அகற்றப்படாமல் உள்ள 3 இராணுவ முகாம்கள்,
Saturday, 14.04.2018, 09:41am (GMT)

வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தின் பிடி­யில் இருந்து நேற்று விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­துக்­குள் 3 இரா­ணுவ முகாம்­கள் அகற்­றப்­ப­டா­மல் இன்­ன­மும் இருக்­கின்­றன என்று மக்­கள் தொிவிக்­கின்­ற­னர்.

683 ஏக்­கா்­கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­ தாக அறி­விக்­கப்­பட்­ட­ போ­தும், இவ்­வாறு இரா­ணுவ முகாம்­கள் இயங்­கு­வ­தால் உண்­மை­யி­லேயே குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான ஏக்­கர் காணி­கள்­தான் விடு­விக்­கப்­பட்­ட­னவா என்­கிற சந்­தே­கத்­தை­யும் அவர்­கள் எழுப்பியுள்ளனர்.

அத்­து­டன் 150 மீற்­றா் நோ்வழிப் பாதை­யா­னது முட்க்­ கம்­பி­கள் மூலம் அடைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பாதைக்­குப் பதி­லாக தனி­யாா்­க­ளின் காணி­க­ளி­னூ­டாக மாற்­றுப் பாதை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தப் பகு­தி­யின் முக்­கிய பாதை­யாக இருந்த பாதையே இவ்­வாறு தடுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னுள் இரா­ணு­வ­மு­காம் இருப்­ப­தா­க­வும் தொிவிக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்­பாக மக்­கள் மாவட்­டச்­ செ­ய­லா், பிர­தேச செய­லா், தவி­சா­ளா் ஆகி­யோ­ரி­டம் தமது விச­னத்­தைத் தொிவித்­துள்ளனர்.


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி! (13.04.2018)
அரசியலுக்கு வழிப்போக்கர்களாக வந்தவர்களே இழி செயலில் ஈடுபட்டனர்!-வி.எஸ்.சிவகரன் (13.04.2018)
அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பு போராடடத்தில் தமிழ் அரசியல் கைதி! (12.04.2018)
காணாமல் போன பலர் சுய நினைவிழந்த நிலையில்  பூசா தடுப்பு முகாமில்! - விடுவிக்கப்பட்ட போராளி (12.04.2018)
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இலங்கை இராணுவம் !  (11.04.2018)
இல்லாத காட்சிக்கு ஏன் முதல் அமைச்சர் வேட்பாளர்? வடக்கு முதல்வர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் (10.04.2018)
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா (08.04.2018)
ஆனந்த புரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் புரட்டிப் போடப்பட்டது! (05.04.2018)
மக்கள் நலன் காப்பகத்தின் மாவட்ட ரீதியிலான செயற்குழு விபரம்! (01.04.2018)
"புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்”!-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (28.03.2018) 
::| Latest News
 

Site Created By: Thiliepan